Thursday 22 July 2010

பேயோட்டிய கொழுந்தியா

கண்ணாத்தாளுக்கு இப்பொழுதேல்லாம் அடிக்கடி பேய் பிடித்துவிடுகிறது. முருகனுக்கு கொஞ்ச நாட்களாகவே களத்து மேட்டில் வேலை ஓடவில்லை. எப்பொழுதிலிருந்து இவளுக்கு பேய் வந்தது என்று யோசித்தான். போன மாசிக்கு நாலாவது பிரசவத்துக்கு போய் வந்தாளே அப்பொழுதிலிருந்து தான். அதுவும் முருகனின் மச்சான் வீட்டுக்கு வந்துப் போனான் என்றால் அன்று நிச்சயம் அவள் பேயாட்டம் ஆடுவாள்.

முருகன் அவள் அமைதியானவுடன் எத்தனையோ இரவுகளில் பேயாட்டத்தை அவளுக்கு நினைவுப் படுத்தியிருக்கிறான். அவளுக்கு தன் மேல் பேய் வந்த நியாபகம் வருவதில்லை. முருகனையும் பிள்ளைகளையும் ஒழுங்காக கவனித்துக் கொண்டு தானிருக்கிறாள். சின்னவனுக்கு இப்பொழுதுதான் ஒன்பது மாசம் ஆகிறது.

முருகனின் மாமனார் இறந்து ஆறு மாதம் ஆகிறது. கொஞ்சம் இருந்த கால் ஏக்கர் நிலத்தையும் குடித்தே அழித்துவிட்டார். கல்யாணத்திற்கு வேறு கண்ணாத்தாளுக்கு இரண்டு தங்கச்சிகள் இருக்கிறார்கள். மச்சானுக்கும் வேலை வேட்டி இல்லை. முருகன் இல்லாத நேரத்தில் வீட்டில் வந்து கண்ணாத்தாளிடம் அடிக்கடி காசு வாங்கிச் சென்றுவிடுவான்.

அன்று வழக்கம் போல் அறுவடை முடித்து முருகன் வீட்டுக்கு வந்தான். கண்ணாத்தாள் சின்னவனுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள். முருகன் கை கால் கழுவிக்கொண்டு திண்ணையில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டினுள் சத்தம் கேட்க ஆரம்பித்தது. பாத்திரங்கள் இறைபடும் ஓசை. கண்ணாத்தாள் தலையை விரித்துப் போட்டு உக்கிரமாக கத்திக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் ஓரமாக ஒண்டிக் கொண்டிருந்தன. சின்னவன் பயந்து அக்கா வள்ளியின் இடுப்பில் ஏறிக்கொண்டான்.

அதற்குள் கண்ணாத்தாள் தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தாள். தெருவில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்குள் யாரோ ஒருவர் தெருக்கோடியில் இருந்த பூசாரியை கூட்டி வந்துவிட்டார். கண்ணாத்தாள் புடவை அவிழ்ந்த நிலையில், தலைவிரி கோலமாக அம்மன் கோவிலில் முன் அமர்ந்து அரற்றிக் கொண்டிருந்தாள்.

ஊர் பெரியவர்கள் நாட்டாமை எல்லோரும் சடுதியில் கூடிவிட்டனர். பூசாரி வேப்பிலை அடித்து பேயோட்ட ஆரம்பித்தான்.

“இன்னா வேணும் சொல்லு கிடா வெட்டனுமா, கோழி வேணுமா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

“கிடா எல்லாம் வேணாண்டா, கிழக்கே இருக்கிற மஞ்சக் காணிய மச்சானுக்கு கிரயம் பண்ண சொல்லுடா, நான் போயிடுறேன்” என்றாள்.

முருகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. மஞ்சக்காணி முருகனின் தம்பியின் நிலம், முருகன்தான் அதை கவனித்துக் கொள்கிறான். தம்பி பட்டணத்தில் இருக்கிறான்.

நாட்டாமை “முருகா சரி அது சொல்படி செஞ்சிடுடா” என்றார்.

முருகன் “அதெப்படி நாட்டாமை, வேணுமென்றால் ஒன்று செய்கிறேன்” என்றான்.

கண்ணாத்தாள் பேயாட்டம் நிறுத்தி அவனை நோக்கினாள்.

“சாமி பேயோட என்னால வாழ முடியாது, அதனால கொழுந்தியாள கட்டிக்கிறேன்” என்றான்.

கண்ணாத்தாள் விறு விறுவென்று எழுந்து புடவையை சரி செய்து கொண்டாள், கூந்தலை அள்ளி முடித்து, சின்னவனை கையிலெடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.

இப்பொழுதெல்லாம் கண்ணாத்தாள் மேல் பேய் வருவதில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இப்படியாங்க.... பேயை அலற வைத்து விரட்டுவீங்க.....!

கும்மாச்சி said...

விடுமுறை முடித்து வந்திருக்கும் சித்ராவுக்கு வாழ்த்துகள்.
வந்த உடனே லுங்கி, நைட்டி வச்சி ரொம்பத்தான் கலாய்க்கிரிங்க.

dheva said...

hahhahaha sirichu mudikkala sir...!

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

:)
:) :)

Menaga Sathia said...

ha ha super!!

தெய்வசுகந்தி said...

:)))!!!!!!!

கும்மாச்சி said...

மேனகாசத்தியா வருகைக்கு நன்றி

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தேவா

Ramesh said...

எங்க அடிச்சா பேய் ஓடும்னு நம்மாளுக்கு தெரியாதா...சூப்பர்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.