Friday 9 July 2010

தமிழினம் காக்கும் தலைவர்

சென்னை: இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரி வந்த நிலையிலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவது தொடர்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.


செய்தி


ங்கொய்யால கடிதம் எழுதிட்டார்பா. ராமேஸ்வரம், நாகபட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம் எல்லா இடத்தில் இருந்தும் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க இனி கடலில் செல்லலாம், கவலை வேண்டாம். இவர் கடிதம் ஒன்று போதும் இனி சிங்களவன் உங்களப் பாத்தா "உச்சா ஊத்திடுவான்".


இதுக்கெல்லாம் எங்க தமிழீனத் தலைவர் டில்லி போகலேன்னு இங்க ஒருக் கூட்டம் குத்த வைச்சு குந்திக்கின்னு அலம்பி புலம்பி திரியரானுங்க. இவனுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது. மண்டையில இன்னா வச்சிகிரானுங்களோ தெரில.


அதான் கடிதம் எழுதி புறா காலில கட்டி உட்டுகிறார் இல்ல. அது நேராபோய் டோப்பா தாத்தாவாண்ட குடுக்கும், அப்பால பாரு அவரு ராஜபட்சே பட்டாபட்டிய கள்ட்டிருவாரு.


ஏண்டா இப்போ இன்னா அவரு குடும்ப ஆளுங்களை மந்திரிப் பதவியிலிருந்து தூகிட்டானுங்களா உடனே டில்லிக்குப் போக.

இப்போதான் ஒரு வயியயா கனிமொயிக்கு மந்திரி பதவி தர்தா சிங்குத் தாத்தாவும், வெள்ளைக்கார ஆயாவும் ஒத்துகின்னு கீறாங்க, வந்துட்டானுங்க அதுக்கு ஆப்பு வைக்க.


மீனவன் செத்தா இன்னா அதான் மூணு லட்சம் குத்துகிறார் இல்ல எங்க பாரி, ஓரி வள்ளல்.


டாய் கூவுற பேமானிங்க இன்னா ஒன்னு கூவுங்க. இந்த மீனவப் பிரச்சினைல ஒரு முதலமைச்சர் இவ்வளவுதான் செய்ய முடியும். “இன்னாது உண்ணாவிரதமா இதுக்கெல்லாம் இருக்க முடியாது”.

“இன்னாது அடுத்த தேர்தலில் பாத்துப்பிங்களா?”

“அடப் போங்கடா கூமுட்டைங்களா, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி, இலவசம், குண்டனுங்க இருக்கிற வரைக்கும் ஒரு ..ரும் புடுங்க முடியாது”.

இன்னும் எத்துனை பேருக்கு மந்திரிப் பதவி வாங்கித் தரனும், அந்த நிதி, இந்த நிதி, சொறிஞ்சநிதி, சொறியாநிதி.

வீழ்வது நீயாக இருப்பினும் வாழ்வது அவர் குடும்பமாக இருக்கும்.

ங்கொய்யால டாஸ்க்மாக்ல ரெண்டு கட்டிங்வுட்டுட்டு கவுந்தடிச்சு படுத்துக்குவியா! வந்துட்டாணுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

Jey said...

அல்லா பத்திரிகையும், தலிவர் லொட்டர் போட்டதை பெருமையா எழுதி இருக்கு, நீ இன்னாபா இப்டி சொல்லிபொட்டே.

http://rkguru.blogspot.com/ said...

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொன்னவர்தான். இன்று வேதனை படுகிறார்களாம் காலத்தின் கொடுமை ............அருமை பதிவு வாழ்த்துகள் a

vasu balaji said...

கரீட்டா சொல்றபா:)

ttpian said...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் ?
ஒரு பக்கம் கேபரா டான்சர் :மறுபக்கம் மஞ்சள் துண்டு மாவீரன் :
இரண்டுபேரும் மாறி மாறி தமிழனை பலிகடாவாக்கி ......
மக்கள் மனது மாறும்போது ஒடி ஒழிய முடியாது

கும்மாச்சி said...

அல்லாம் நல்லா பின்னூட்டம் குடுத்துகிரிங்கபா டாங்க்ஸ்பா

ILLUMINATI said...

யோவ்! என்டர்டைன்மென்ட்க்கு "மானாட மயிலாட",அதைப் பார்க்க இலவச டிவி,கூடவே அடிச்சுக்க டாஸ்மாக் சரக்கு,கை செலவுக்கு பணம்,அப்பப்ப பிரியாணி,எப்பயும் புழுத்த அரிசி...

இதுக்கு மேல என்னையா வேணும் உங்களுக்கு?தானைத் தலைவன தப்பா பேசுனா அம்புட்டு தான்.வூட்டுக்கு ஆட்டோ வரும்.பார்த்துக்க!

கும்மாச்சி said...

கரீடுபா டாஸ்மாக் சரக்கு அடிச்சு மல்லாந்துகிறேன், ஆட்டோ வந்தாகூட வலி தெரியாது, இன்ன சொல்றே.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
அப்பால பாரு அவரு ராஜபட்சே ”பட்டாபட்டி”ய கள்ட்டிருவாரு
//

இது நான் இல்ல...ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த பிரச்சனைக்குத்தான் தீர்வு சொல்லீட்டாங்களே..
இனிமேல் இலங்கை எல்லைக்குள் போய் மீன் பிடிக்காதீங்க...

மீறிப்போனாத்தான் சுடுவாங்க..( ஆமா பாஸ்.. நாம கொடுத்த ஆயுதத்தை வெச்சுத்தான்..)

காலக்கொடுமை சாமி இது....

Tamil Kathaln said...

தலா கலகுற போ .....இபோதான் பட்சேன் உன் ப்லோகே ....யப்பா .....இனமா கூவுற நீ ......வாழ்க டமில்...வளர்க கரு நாய் ......இப்படியே மைண்டின் பண்ணு தலா ....நான்கிரன் உனக்கு .....மெர்சல் அகதா .....ஒக்வா .....வறேன் பா .

Jey said...

அரச மரத்தின் அழிசாட்டியம், http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_11.html

vanthu padikkavum.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.