Wednesday 22 September 2010

எந்திரனும் எதிர்வரப் போகும் தேர்தலும்

எந்திரன் எவ்வளவு எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்பதை கருவில் உள்ள குழந்தை கூட சொல்லும். பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் இப்பொழுதெல்லாம் லீவ் கடிதங்கள் “As I am suffering from “yenthiran” fever, I kindly request” , என்று எழுதப்படுகின்றன. இனி பாலாபிஷேகம், பீராபிஷேகம் என்று களைகட்டும். ஏற்கனவே எல்லா வானொலிகளிலும் “அரிமாவும் கிளிமாஞ்சாரோவும்” ஒரு நாளைக்கு நூற்றி இருபதுமுறை ஒலிபரப்பப்படுகிறது. “எந்திரன் எப்போ வருவான் எப்போ வருவான்” என்று ஒரு எதிர்பார்ப்பு. இந்த ஜுரம ஏற்கனவே அபாய எல்லையைத் தொட்டுவிட்டது. இதற்கு சற்றும் குறையாதது வரப் போகும் சட்டமன்ற தேர்தல். தமிழ் நாடு 2011 ல் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறது.


இனி கூட்டணி, பேரணி என்று ஊரு நாடிக்கப்படும். ஏற்கனவே யாரு வேட்டி துவைக்கப் போகிறார்கள், இல்லை உள்பாவாடை துவைக்கப் போகிறார்கள் என்ற பேச்சு தொடங்கிவிட்டது. ஒரு சீட்டு, ரெண்டு சீட்டு கட்சியெல்லாம் இப்பொழுதே துண்டு போட்டு ஒரு இடத்தில் ஒதுங்கிவிட்டனர். முப்பது நாற்பது சீட்டுகள் பேசும் கட்சிகள் முண்டியடித்து பேரம் பேசத் தொடங்கிவிட்டனர். இன்னொருக் கட்சி நானே ராஜா நானே மந்திரி என்று கூவிக் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சி ஒற்றர்கள் வைத்து வேவு பார்த்து கொண்டிருக்கின்றனர். உளவுப் படையின் அறிக்கையில்தான் கூட்டணி தர்மம் காக்கப்படுமா இல்லை தாக்கப்படுமா என்று தெரியும்.

ஆளுங்கட்சி அறிவிக்கப் போகும் இலவசங்கள் ஏலம் போகும். எதிர் கட்சி ஏளனப் பேச்சு எங்கும் எதிரொலிக்கும். லாரிகளுக்கு கிராக்கி ஏறும். டாஸ்மாக் விற்பனை விண்ணைத்தாண்டும். போஸ்டர் வியாபாரம் கல்லா கட்டும். தலைவர்களை வரவேற்க வெடி விற்பனை, ஏற்கனவே சிவகாசிக்கு மொத்த ஆர்டர் செய்துவிட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. இனி சந்து முனைகளில் பந்தல்கள் பெருகி மைக் செட் நூற்றி இருபது “டெசிபலை” தாண்டும். எல்லாவற்றையும் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் திருவாளர் பொது ஜனம்.

எந்திரன் வெல்லுவானா?

அடுத்த ஆட்சி அய்யாவா? இல்லை அம்மாவா?, இல்லை ஐயைய்யாவா?, இல்லை அம்மையாவா?, பொருத்திருந்து பார்ப்போம்.

ஒரு முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.

மற்றைய முடிவு தெரிய சில மாதங்கள் ஆகும்.

அய்.. நானும் எந்திரனை வைத்து ஒரு பதிவு போட்டுட்டேனே.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Chitra said...

அய்.. நானும் எந்திரனை வைத்து ஒரு பதிவு போட்டுட்டேனே.


.......ஜீப்ல ஏறிட்டீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா...

Rafeek said...

மொக்கய் பதிவு!!

RVS said...

அரசியல்வாதிகளும் நடிக்கறாங்க அப்படின்னு எவ்வளவு அழகா எந்திரனோட கம்பேர் பண்ணி சொல்லிட்டீங்க.. சூப்பர்.

கும்தலக்கடி கும்மாவா கும்மாச்சினா சும்மாவா.... (இப்படி கூட பேரணிகள்ல கோஷம் போடுவார்கள்)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.