Thursday 17 February 2011

கலக்கல் காக்டெயில்-21

தேர்தல் வந்தால் சொல்லியனுப்பு.................


ங்கொயால.. ஒண்ணுமே விளங்கமாட்டேங்குது. மீனவர்களை சிங்கள ராணுவம் கைது செய்ததால ஆர்பாட்டம் நடத்தி கனிமொழி கைதாம். எதுக்கு ஆர்பாட்டம் யாரை எதிர்த்து என்று ஒன்றும் புரியல. ஒரு வேளை காங்கிரஸுக்கு செக் வைக்கவா? சிங்கள ராணுவ நடவடிக்கை என்றால், நாகேஸ்வர ராவ் பூங்காவில் என்ன வேலை?.

நீ நடத்துறா மாதிரி நடத்து, நான் கைது பண்றா மாதிரி பண்றேன், நானும் சிறைக்கு சென்றுவிட்டேன் என்று அலப்பவா?

ஒரு வேளை கையாலாகாத தலைவருக்கு எதிராகவோ? அட போங்கப்பா...ம்மா ரொம்பதான் குழப்புறீங்க.

ஒட்டு காசுக்குதான் சொல்லிப்புட்டோம்.


------------------------------------------------------------------------------------------------
எதிர் முகாம் ஏகத்துக்கும் குழம்புது. அங்க நம்ம வருங்கால முதல்வர் நல்லா வக்கிராறையா ஆப்பு. வூட்டுக்கார அம்மாவுக்கு துணை முதல்வர், தனக்கு மின்சாரத்துறை, பொதுபணித்துறை............, பலே சரியான போட்டி. மருத்துவர் தொலை பேசி அருகேயே இருக்கிறாராம். யாரும் ஒரு மிஸ்டு கால் கூட விடலாம். எப்பா சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, சஸ்பென்ஸ் தாங்க முடியல. அம்மா... கேட்கிறத கொடுத்து கதையை சீக்கிரம் முடியுங்க.
--------------------------------------------------------------------------------------------------------
ரசித்த கவிதை வரிகள்

பழந்துணி அணிந்தாலும்

பசியாலே இறந்தாலும்

பாதை தவறாத

பண்பு உள்ளம்

இருந்தநிலை மறந்து

இழுக்கான குற்றம்தன்னைப்

புரிந்திட லாமென்று

துணியுதடா - நேர்மை

பொல்லாத சூழ்நிலையால்

வளையுதடா.

------பாரதிதாசன்

-----------------------------------------------------------------------------------------------------------

கடி

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Chitra said...

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?


....என்னமா யோசிக்கிறாங்க!

goget99 said...

பாத்துக்கோ பாத்துக்கோ நானும் ஜெயிலுக்கு போறேன்னு வடிவேலு ஸ்டைலில் சொல்லுறாங்க

Yoga.s.FR said...

"அம்மா...........கேக்கிறத கொடுத்து கதையை சீக்கிரம் முடிங்க?!?!?!கவித நல்லாருக்கு!"ஜொள்ளு"வழியுது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Philosophy Prabhakaran said...

அதென்னவோ பதிவுல என்னென்னவோ எழுதினாலும் கடைசில போடுற நடிகை படம் மட்டும் கண்ணை மறைக்கிறது...

டக்கால்டி said...

ஜொள்ளு விட முடியலை...அந்த காவியத் தலைவி, தரித்திர..ச்சி தூ சரித்திர நாயகி மேட்டரு சூப்பருங்க...பழனிசாமி ஆஹ்...பழனிசாமி பிசாசு வந்துடுச்சு...

RayJaguar said...

kanizmozhi arrest pakka drama! crazy mohan and s v shekher should learn from her how to act!!

கத்தார் சீனு said...

ராசாவ ஜெயில்ல போட்டதில் இருந்து அம்மணி பாத்துகிட்டே இருந்துச்சி...எப்படித்தான் ஜெயிலுக்கு போறதுன்னு...கிடைச்சாங்க இல்ல இளிச்சவாய தமிழ் மீனவர்கள்....அதான் சாக்குன்னு கிளம்புடுச்சி !!!

பாரதிதாசன் கவிதை அழகு !!!

Unknown said...

வழக்கம்போல் அருமை

சும்மா சொல்லக்கூடாது நடிப்புல சாவித்திரி தோத்தாங்க ஹி ஹி!

கடைப்பக்கம் வராததுக்கு கண்டனங்கள் ஹிஹி!

sarathy said...

practice makes perfect. this is the start .... good luck to the show

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.