Monday 14 February 2011

பரீட்சை நேரம்-----------பெற்றோர்களுக்கு

பள்ளி இறுதி பொது தேர்வு நெருங்குவதால் பெற்றோர்களுக்கு சில யோசனைகள். “ரே ஜாகுவார்” இதைப் பற்றி பதிவு எழுதக் கேட்டுக்கொண்டதன் பேரில் மல்லாக்கப் படுத்து யோசிச்சது.




1. பிள்ளைகள் தொடர்ந்து படித்து மன அழுத்தத்தில் இருப்பார்கள். தினமும் ஒரு அரை மணி நேரம் குடும்ப விஷயமோ அல்லது அவர்களுக்கு பிடித்த விஷயத்தை எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஜாலியா பேசுங்க.

2. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்.

3. தினமும் ஒரு ஆறு மணி நேரமாவது நிம்மதியாக உறங்க சொல்லுங்கள்.

4. அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நாம் அந்த அறையில் குறட்டை விடுவது தப்பாட்டம்.

5. அவர்கள் படிக்கும் பொழுது டிவி யில் மெகா சீரியலை நூறு டெசிபல் சவுண்ட் வைத்துப் பார்ப்பது அழுகுணி ஆட்டம். (தங்கமணிகள் கவனிக்க)

6. பரீட்சைக்கு ஒரு மாதம் முன்பே நல்ல சத்துள்ள உணவை வீட்டிலேயே தயார் செய்து கொடுங்கள். பச்சை காய் வகைகளும், கீரைகளும் மிக அவசியம். பழமும் அவசியம்.

7. அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து பரீட்சைக்கு முதல் நாள் பயமாக இருக்கிறது என்று அழுதால், “ஒழுங்கா படித்தால் ஏன் பயம், நான் எல்லாம் பயம் இல்லாமப் போய் நூற்றுக்கு நூற்றி இருபது வாங்கினேன்” என்று உதார் விடாதீர்கள்.

8. பரீட்சைக்கு முதல் நாள் தூக்கம் வராமல் தவிப்பார்கள். அவர்கள் மனதை லேசாக்கி உறங்க வையுங்கள். கடைசி நிமிடம் வரை படிப்பது நல்லதல்ல. தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க சொல்லுங்கள்.

9. பரீட்சை நாள் காலையில் வீட்டில் உள்ள மற்றைய பிரச்சினைகள் அல்லது உங்கள் அலுவலக பிரச்சினையில் வரும் எரிச்சலை அவர்களிடம் காட்டாதீர்கள்.

10. முக்கியமான விஷயம் நாம் விரும்புவது அவர்களை அவர்களின் மதிப்பெண்களை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அப்பா “டென் கமான்மென்ட்ஸ்” கொடுத்தாச்சு.

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

goget99 said...

Thanks for sharing the practical views in your own style.

ம.தி.சுதா said...

அட வித்தியாசமாயிருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

RayJaguar said...

mikka nandri! maanavar samoogamae ungalai vaazhthum.patthavathu rhombavae super. thala needuzhi vaazhga valamudan!

கும்மாச்சி said...

Ray Jaguar Thanks for suggesting me to write about this good subject.

RayJaguar said...

okay sir may your good work continue!!

A.U.Balasubramanian said...

VERY NICE TO READ

கும்மாச்சி said...

AUB ஸார் எதிர்பாராத வருகை, நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பயனுள்ள பதிவு.. இப்போது பலருக்கும் இது உபயோகமா இருக்கும்

virutcham said...

பத்தாவது பாயிண்ட் பிரமாதம்
பிள்ளைகளை விட பெற்றோரின் டென்ஷன் ஓவர். அவங்களுக்கும் ஏதாவது டிப்ஸ் எழுதுங்க.
மார்க் எடுக்கலைனா பூமி உருண்டு ஓடிடும்னு ஒரு பீதியிலேயே இப்போ எல்லாம் LKG லையே பெற்றோர் அலைவது மகா கொடுமை.

sarathy said...

நல்ல ஆரம்பம், தீர்க்க முடிவு - நடுவில் சிறு சலசலப்பு. பயனுள்ள பத்து.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

குழந்தைகள் படிக்கும்போது, அடுத்த குழந்தைக்கு மு.ய..ற்... சரி..விடுங்க.. அப்பால வரேன்..ஹி..ஹி

கத்தார் சீனு said...

அருமை....நேரத்திற்கு ஏற்ற பதிவு சார்.....!!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.