Monday 4 July 2011

கலக்கல் காக்டெயில்-33

ஐம்பது நாள் அம்மா ஆட்சி .


புதிய அரசு அமைந்து ஐம்பது நாட்கள் ஆகப்போகிறது. அதற்குள் இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம். ஆற்காட்டார் செய்ததைவிட சற்று அதிகமாகவே “நத்தம்” தன் வேலையைக் காட்டுகிறார். இப்பொழுதெல்லாம் கரண்ட் கட் இரண்டுமணி முதல் ஆறுமணிரை நீடிக்கிறது. ஏதோ “மோடி” அறுநூறு மெகாவாட் உபரி மின்சாரத்தை தரப்போகிறார் என்ற செய்தி பார்த்த நியாபகம். போன சனிக்கிழமை சென்னையில் பல இடங்களில் காலையில் ஒன்பது மணிக்கு போன கரண்ட் இரவு எட்டு மணிக்குத்தான் திரும்ப வந்தது. இந்த வார ஜூனியர் விகடன் மடிக்கணினி, மிக்சர், கிரைண்டர் கொள்முதலில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எழுதி புலம்ப ஆரம்பித்திருக்கிறது. இது ஒன்லி ட்ரைலர் தான் மெயின் பிக்சர் இனி தான் இருக்கிறது. நல்ல ஆட்சி மாற்றம்.

திறக்க திறக்க கோல்ட்

திருவணந்தபுரம் பத்மநாபசாமீ கோயிலின் நிர்வாக சீர்கேட்டை ஆராய போடப்பட்ட பொது நல வழக்கு, முன்னூறு வருடங்கள் மூடி வைக்கப்பட்ட அறைகளை திறக்க வைத்திருக்கிறது. இது வரை ஆராயப் பட்ட நகைகளின் மதிப்பே ஒரு லட்சம் கோடி தேறுமாம். இன்னும் ஒரு அறை திறக்க கோர்ட் ஆணைக்கு காத்திருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு கோடி அங்கிருக்கிறதோ தெரியாது. திர்வான்கூர் மகாராஜா சேர்த்து வைத்த சொத்து, அவர் சந்ததிகளுக்கு தெரியாது போலிருக்கிறது. ஆனால் இந்தக் கோயில் இன்னும் மகாராஜா பேரில்தான் இருக்கிறது. அதனால் அந்த சொத்து பெறும்பாலும் ராஜா குடும்பத்தை தான் போய் சேரும். இந்த வழக்கை விசாரிக்கப் போகும் நீதிபதிகள் “நரி மூஞ்சியில் முழித்திருக்க வேண்டும்”. நம்ம ஊரில் இந்த மாதிரி கோயில் சொத்து இருந்தால் என்றைக்கோ ஆட்டையைப் போட்டிருப்பார்கள்.

நாலணா செல்லாக் காசு

நாலணா அபீட் ஆகிறதாம். ஒரு “அண்ணா”வை சமாளிக்கவே நம்ம பிரதமருக்கு கண்ணைக் கட்டுகிறது. அவர் எப்படி நாலு அ(ண்)ணாவை சமாளிப்பார். அதான் ஒழிக்கறாங்காட்டியும். ஏதோ ஒரு மொக்கையன் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.

திகார் ஜெயில்

நம்ம ஆளுங்க உள்ளே போனதிலிருந்து இட்லி, வடை, சாம்பார் போட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு நல்ல சாப்பாடு அங்குதான் கிடைக்கும் போலிருக்கிறது. நல்லா சாப்பிட்டு, யோகா, டென்னிஸ் எல்லாம் ஆடிவிட்டு, பெரிய ஆளுங்களை நண்பர்கள் ஆக்கிக்கொண்டால் பிற்காலத்தில் நோகாமல் நோன்பு கும்பிடலாம் போலிருக்கிறது. அதற்கு பெரிய அளவில் ஆட்டையைப் போட வேண்டும். திறமை உள்ளவர்கள் இந்த யோசனையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஜொள்ளுப் படம்

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

கோவை நேரம் said...

சும்மா கும்ம்னு ஏறுது..உங்க காக்டெயில்

N.H. Narasimma Prasad said...

கடைசி ஜொள்ளு படம் சூப்பர். யாரிந்த ஆண்டி?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.