Tuesday 19 July 2011

எங்கே எதிர்கட்சி தல?

எதிர்கட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர் புரட்சிக் கலைஞர் எங்கே என்று தெரியவில்லை?.

அவர் சட்டசபைக்கு வருகிறாரா? பேசுகிறாரா? விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பதில் எழுதவும்.

சமசீர்கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும் டில்லி சென்றிருக்கிறார்கள். அது வரை பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்காமல் இழுத்தடிக்கப் போகிறார்கள். வழக்கம்போல் பிள்ளைகள் வெற்றுக்குப் பள்ளி செல்வது பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.

பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பாடப் புத்தகங்கள் வழங்கவில்லை. அம்மாவின் வீண் பிடிவாதம் மாணவர்களின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்குகிறது. இப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து எப்பொழுது தீர்ப்பு சொல்லுவார்கள் என்பது பெரிய கேள்விக் குறி.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் வேலையில் எதிர் கட்சி தலைவர் என்ன செய்கிறார்?. கொடுத்த பெட்டிக்கு எவ்வளவு க்வட்டார் வரும் என்று கணக்கு போடுகிறாரா?. நானூற்றி என்பது மார்க் வாங்கிய மகனிடம் கேட்டால் விரைவாக பதில் சொல்லியுருப்பான். பாவம் அவர் பையன் கல்லூரி சீட்டுக்கு அலைகிறார் போலும்.

நாங்கள் வந்தால் தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும், அதற்கு பல திட்டங்கள் வைத்திருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த புரட்சிக் கலைஞர் அவர் முதல் மந்திரியானால் தான் சமூகப் பொறுப்புடன் நடப்பார் போல.

வைகைபுயலை வீட்டில முடக்கிற வேலையை முதலில் பாருங்கப்பு. உங்களுக்கு எவ்வளவு வேலை காத்திருக்கிறது. மாணவர்கள் எப்படி போனால் என்ன?

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

நெல்லி. மூர்த்தி said...

கும்மாச்சியாரே! என்ன நினைத்துவிட்டீர்கள் எங்கள் கேப்டனை!? மகாராட்டிராவில் நடந்திருந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் மட்டும் தமிழகத்தில் நிகழ்த்த முற்பட்டிருந்தால் பறந்து பறந்து தீவிரவாதிகளை தாக்கியிருப்பார். சமச்சீர் மேட்டரெல்லாம் எங்களுக்கு கொசு மாதிரி. வீரத்துக்குத்தான் தோள் தூக்குவோமாக்கும்! (தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கொலைவெறி தாக்குதலும் உயிர் பலி எடுப்பதையும் கண்டு ஏன் எழவில்லை என்றெல்லாம் கேட்கப்படாது. ஏனெனில் அவர்களெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்ல! வரட்டா!! ஆங்..)

முத்தரசு said...

http://www.dinamani.com/edition/story.aspx?Title=கேட்பது+குதிரை;+கிடைத்தது+கழுதை:+விஜயகாந்த்&artid=448691&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

dharma said...

Vaiko vota arumai theriyutha?

kumar2saran said...

இன்றைய மாணவர்கள்தான் நாளைய நாட்டின் எதிர்காலம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் அந்த மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பொதுப் பாடத்திட்ட சட்டம் தீர்வாகாது. கல்வித் துறையில் கடந்த ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினை நிரந்தரமாகக் களைய வேண்டுமானால், அது குறித்து அனைத்து தரப்பினரும், குறிப்பாக கல்வி நிபுணர்களும், கலந்து கருத்தாய்வு செய்வது அவசியம். ஆகவே கல்வி சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வரவேண்டும் என்றும், அதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை திரட்டி சட்டப் பேரவையில் அனைத்து கட்சியினர்களையும் கலந்து ஒரு விரிவான கல்வி சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான். ஆகவே உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

RayJaguar said...

sariyana vethu vaetu intha captain

Unknown said...

மாப்ள பாவம் அவருக்கு கல்லா கட்டவே நேரம் இல்லையாம்யா.... கலக்கல்யா.....நன்றி!

Unknown said...

இது எல்லாம் அவருக்கு குடுத்த அசைன்மென்ட்டுல இல்ல போலருக்கு தல

Anonymous said...

கும்மாச்சியாரே! என்ன நினைத்துவிட்டீர்கள் எங்கள் கேப்டனை!? மகாராட்டிராவில் நடந்திருந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் மட்டும் தமிழகத்தில் நிகழ்த்த முற்பட்டிருந்தால் பறந்து பறந்து தீவிரவாதிகளை தாக்கியிருப்பார். சமச்சீர் மேட்டரெல்லாம் எங்களுக்கு கொசு மாதிரி. வீரத்துக்குத்தான் தோள் தூக்குவோமாக்கும்! (தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கொலைவெறி தாக்குதலும் உயிர் பலி எடுப்பதையும் கண்டு ஏன் எழவில்லை என்றெல்லாம் கேட்கப்படாது. ஏனெனில் அவர்களெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்ல! வரட்டா!! ஆங்..)

Anonymous said...

கும்மாச்சியாரே! என்ன நினைத்துவிட்டீர்கள் எங்கள் கேப்டனை!? மகாராட்டிராவில் நடந்திருந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் மட்டும் தமிழகத்தில் நிகழ்த்த முற்பட்டிருந்தால் பறந்து பறந்து தீவிரவாதிகளை தாக்கியிருப்பார். சமச்சீர் மேட்டரெல்லாம் எங்களுக்கு கொசு மாதிரி. வீரத்துக்குத்தான் தோள் தூக்குவோமாக்கும்! (தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கொலைவெறி தாக்குதலும் உயிர் பலி எடுப்பதையும் கண்டு ஏன் எழவில்லை என்றெல்லாம் கேட்கப்படாது. ஏனெனில் அவர்களெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்ல! வரட்டா!! ஆங்..)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.