Monday 11 July 2011

கலக்கல் காக்டெயில்-34

கே.டி. சகோதரர்களுக்கு மூக்கணாங்கயிறு....................



கண்கள் பணித்தது, இதயம் இனித்தது எல்லாம் இப்பொழுது பொய்யாகி உறவு புளித்திருக்கிறது. மாறன் ராஜினாமாவை உடன் பிறப்புகளும், சி.ஐ.டி காலனி அம்மாவும் “ஸ்வீட் எடுத்து” கொண்டாடினாங்களாம். சகோதரர்கள் ஆடித்தான் போயிருக்கிறார்கள். இதுதான் சாக்கு என்று அம்மாவும் குமுறி எடுக்கப் போவதாக ஒரு செய்தி. மொத்தத்தில் மாறன் சகோதரர்கள் பதினெட்டு வருட ஆட்டத்திற்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டிருக்கிறது.

தாத்தாவிடம் பேரன் உதவி கேட்கும்பொழுது “நம்ம தொலைக்காட்சி கழகத்தை எப்படி வளர்த்தது” என்றதற்கு “அது உங்க டி.வி” என்று பட்டும்படாமல் பதிலளித்தாராம். தலைவரே இதே காரியத்தை உங்க மற்ற வாரிசுகளிடமும் செய்யுங்க உங்கள் கடை நிலை தொண்டன் வரை பொங்கல் வைத்து கொண்டாடுவான்.

எந்திரனுக்கு நஷ்ட ஈடு என்று ஒரு கூட்டம், மார்பிங் செய்தார் என்று நித்யானந்தா கூட்டமும் சன் க்ரூப்பின் மேல் பாய்வது, எரியற வீட்டில் எவ்வளவு பிடுங்கலாம் என்ற கணக்குதான்.

பத்மநாபசாமி கோவில் எபெக்ட்



பத்மநாபசாமி கோவில் விவகாரம், இப்பொழுது எல்லாக் கோவில்களையும் ஆக்கிரமிக்கறது. ஸ்ரீரங்கம் தொட்டு, திருசெந்தூர் என்ற விரிவுபடுத்த ஒரு கூட்டம் காத்திருக்கிறது. இந்தக் காசை பொதுச் செலவிற்கு உபயோகப் படுத்தலாம் என்ற யோசனை அரசியல் வாதிகள் ஆட்டையைப் போட எளிய வழி. அப்படி ஒரு முடிவை அரசு எடுத்தால் எஞ்சுவது எளியவனுக்கு செல்லா நாலணா மட்டுமே.

NH-45

சமீபத்தில் காரில் திருச்சி சென்றேன். நாலரை மணி நேரத்தில் இப்பொழுதெல்லாம் திருச்சி போக முடிகிறது. அருமையான ரோடு. வண்டி ஓட்டுவது மிக ;எளிதாக இருக்கிறது. முன்பெல்லாம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் ஊருக்குள் நுழைந்து வெளியே வர முழி பிதுங்கிவிடும். வழியில் ஆறு இடத்தில் நிறுத்தி “டோல்” கட்ட வேண்டும். இங்குதான் சிறிது நிறுத்த வேண்டியுள்ளது. மற்றபடி எந்த ஊருக்குள் நுழையாமல் பைபாஸ் வழியாக போய்க் கொண்டே இருக்கலாம்.

வாழ்க நேஷனல் ஹைவேஸ்

ஜோக்ஸ் கார்னர்


மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே...

இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிறடா



கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...



நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..



ஜொள்ளுப் படம்

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

முத்தரசு said...

காக்டெயில்-34
கலக்கல்

Anonymous said...

நல்ல பதிவு...

முடிந்தால் என் பதிவுகளை பார்க்க வரவும்...

Reverie

http://reverienreality.blogspot.com/
(இனி தமிழ் மெல்ல வாழும்)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.