Wednesday 27 July 2011

வீ டோன்ட் ஸீ டமில் மூவீஸ்


இந்த வசனம் “காதலிக்க நேரமில்லை” படத்தில் காஞ்சனா தன் அண்ணன் நாகேஷிடம் சொல்லுவதாக வரும். இன்று இணையதளத்தில் விமர்சனம் செய்வோர் இதற்கு ஒரு படி மேலே போய் ஒவ்வொரு தமிழ் படமும் எங்கிருந்து தழுவியது என்று போட்டு அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடுகிறார்கள். எதற்கு இந்த பீடிகை என்று யோசிக்க வேண்டாம்.

சமீபத்தில் வெளியாகிய “தெய்வத்திருமகள்” படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் எழுதி தனக்கே உள்ள பாணியில் ஐம்பது மார்க் கொடுத்திருக்கிறது. அதை வைத்து ஆனந்த விகடனில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதில் முக்கால் வாசி பேர் இது ஹாலிவூட் சினிமா “ஐ ம் ஸாம்” என்ற படத்தின் தழுவல் என்று எழுதியிருக்கிறார்கள். விக்ரமின் நடிப்பு ஷான் பென் நடிப்பை காப்பி அடித்திருக்கிறார் என்று ஒரு சிலர் சொல்லுகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு ரசிகனுக்கு இதெல்லாம் தேவையில்லை, நாலு பன்ச் வசனம், இரண்டு குத்தாட்டம், நடிகையின் தொப்புள் கட்டாயம் காட்டப்படவேண்டும், காமெடி என்ற பெயரில் யாரையாவது கலாய்க்க வேண்டும்,கதாநாயகன் வில்லனை கடைசியில் பறந்து பறந்து அடித்து கத்தியால் குத்தி ரத்தம் சொட்டவேண்டும். அம்மா செண்டிமெண்ட் கட்டாயம் வேண்டும். இதையும் தாண்டி எவனாவது உணர்ச்சி பிழிய படம் எடுத்தால் தியேட்டரில் கூட்டம் இருக்காது. சரி விஷயத்திற்கு வருவோம்.

பின்னூட்டம் போட்ட முக்கால்வாசி பேர் இயக்குனர் குறைந்தபட்சம் நன்றி ஹாலிவூட் பட கதாசிரியருக்கு என்று போட்டிருக்க வேண்டுமாம். இதை போல் அபத்தம் வேறு எதுவும் கிடையாது. அந்த மாதிரி போட்டால் காபிரைட் ஆக்டில் மாட்டி தயாரிப்பாளரின் ஜட்டியை உருவிக்கொண்டு போய் விடுவார்கள். ஆனால் நம்ம ஊரு பாஸ்மதி அரிசிக்கும், மற்ற மூளிகைகளுக்கும் பேட்டன்ட் ரைட்ஸ் வாங்கிய மற்ற வெளிநாட்டானை நாம் ஒன்றும் செய்யாமல் நமது தாராள மனதை பறை சாற்றுவோம்.

நான் தெய்வதிருமகளையும் இன்னும் பார்க்கவில்லை, ஐ ம் சாமையும் பார்க்க வில்லை. நம்ம ஊரில் ஆங்கில புலமை உள்ளவர்களே எல்லா ஆங்கிலப் படத்தில் வரும் நாலெழுத்து கெட்டவார்த்தை தவிர வேறு எதுவும் புரிவதில்லை எனும்பொழுது ஆங்கிலப் படங்களை பார்த்து அதை தழுவி, நமது கலாசாரதிற்கு ஏற்றபடி மாற்றிக் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களை ஆதரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிவுள்ள பேபி சாரா மிகவும் நன்றாக நடித்திருப்பதாக சொல்லுகிறார்கள். ஒரு சில காட்சிகள் மிகவும் உருக்கமாக எடுத்திருப்பதாக ஆனந்த விகடன் விமர்சனத்தில் போட்டிருக்கிறார்கள். எப்படியும் படத்தை ஒரு தடவை பார்ப்பேன். அடுத்த வருஷம் தீபாவளிக்கு சன் டி, கலைஞர் இல்லை ஜெயா டி. வியில் கட்டாயம் வரும்.  

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

Raju said...

பரவாயிலலையே!!
ரெண்டு படத்தையும் பார்க்காமயே வாயாலயே வடை சுட்டு ஒரு பதிவு தேத்தீட்டீங்க.
சூப்பர் பாஸ். கலக்குங்க.
:-)

RayJaguar said...

padam rhomba super. ithu moolama naa makkalukku solla virumbuvathu padathai ellarum paarunga. thalaivar nadippula dhool kelappitaaru.kutti ponnum thaaru maaru... proud to be a cheeyan fan..... climax la azhaathavanga yaarumae illa!!!!!!!

settaikkaran said...

//நம்ம ஊரில் ஆங்கில புலமை உள்ளவர்களே எல்லா ஆங்கிலப் படத்தில் வரும் நாலெழுத்து கெட்டவார்த்தை தவிர வேறு எதுவும் புரிவதில்லை எனும்பொழுது...//

ஆங்கிலப்படத்தில் மட்டும் தானா? மன்மதன் அம்பு பார்க்கலியா? :-))

அவசியம் பார்க்க வேண்டிய படம். தழுவலோ வறுவலோ, அந்தக் குழந்தையும் விக்ரமும் நெஞ்சை உருக்கி விட்டார்கள்.

Anonymous said...

the picture is so excellent and can be seen with all family members

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி

கும்மாச்சி said...

சேட்டை எங்கே நம்ப பேட்டை பக்கம் ரொம்ப நாளாக காணோம்

A.U.Balasubramanian said...

the picture is excellent

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.