Friday 8 July 2011

அகில உலக "அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே"

அகில உலக "அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே"


உங்களுக்கு சாதாரண குடிமகன் (அதே டாஸ்மாக் பார்ட்டிதான்) எழுதும் கடிதம், மடல். தாத்தாவும் அவிக குடும்பமும் தேசிய லெவலில ஆட்டையப் போட்டு எல்லா துறையிலும் மூக்கை விட்டதனால வேறே வழி இல்லாமதான் உங்கள உட்கார வைச்சாங்க எனபது உங்களுக்கு புரிந்திருக்கும். இல்லை என்றால் கொடநாட்டில குப்புற படுத்து குமுறிகிட்ட இருந்த உங்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்காது. சரி ஓட்டத்தான் குத்திட்டோம், அம்மா திருந்திட்டாங்க இந்த முறை போன முறை செய்த தப்பெல்லாம் செய்யமாட்டாங்க என்று தங்களுக்கு தானே சமாதானம் வேறே சொல்லிக்கிட்டாங்க.

ஆனால் வந்த முதல் நாளே பதவியேற்றவுடன் புதிய சட்டசபை வளாகத்தில் உட்காரமாட்டேன், பெருச்சாளிக் கோட்டையில்தான் உட்காருவேன்னு, இரண்டு நாளில் அந்த இடத்தைப் புதுப்பிக்க எங்க துட்டு அறுபத்தைந்து கோடி ஊதிட்டிங்க.

அடுத்ததாக சமச்சீர் கல்வி போன ஆட்சியில் கொண்டு வந்த ஒரே காரத்திற்காக அதற்கு சமாதி கட்டி ஒரு இருநூறு கோடி அம்பேல். இது போதாது என்று வழக்கு நீதிமன்றம் வந்தவுடன், ஒரு புதிய கமிட்டி வச்சு அதுல உங்க ஆளுங்களை வைத்து நீங்க சொன்னத சொல்ல வச்சிட்டிங்க.

படிக்கிற பசங்க பாவங்க அதுங்க வாழ்க்கையில் கபடி ஆடாதீங்க, சொன்னா கேட்கவா போறீங்க.

ஆட்சி அமைத்து இன்னும் ஐம்பது நாள் முடியல அதுக்குள்ளே மூன்று தபா அமைச்சரவையை மாத்தீட்டிங்க. நீங்க உங்க அஜெண்டாவில இருபைத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை அமைச்சர்களும் அவர்கள் இலாக்ககளும் மாற்றப்படும் என்று வெளிப்படையா சொல்லிடுங்க. அப்புறம் ஒரு பய நாக்குல பல்லைப் போட்டு உங்களை ஒன்னும் பேசமுடியாது. இல்லன்னா இந்த பதிவர்கள் வேறு வலையில நாளுக்கு நாள் கடிதம் எழுதிக்கிட்டு இருப்பானுங்க.

மணல் கொள்ளை, அதிகாரிகளை மிரட்டி காண்ட்ராக்ட் கேட்பது, டாஸ்மாக் பார் ஏலத்தில் உங்க கட்சி ஆளுங்க ஏலம் எடுத்ததெல்லாம் நாங்க பெரிசு படுத்தமாட்டோம். ஏன் என்றால் எங்களுக்கு இதனால ஒன்னும் லாபம் நஷ்டம் இல்லை. டாஸ்மாக் முதல் கட்டிங் அப்புறம் எங்களுக்கு அவன் ஊத்தற சரக்கும் தெரியாது, விலையும் தெரியாது.

நீங்க ஆட்சிக்கு வந்தவுடன் எதிரிகளை ரவுண்டு கட்டி அடிப்பீங்க என்று எதிர் பார்த்ததுதான். இதுல ரொம்ப ஓவர் ஆக்டிங் கொடுத்துறாதீங்க அப்புறம் பழையபடி ஜனங்க தாத்தாவை குந்த வைப்பானுங்க.

எப்படி இருந்தாலும் அடுத்த ஐந்து வருஷத்துக்கு வேறே ஆளேதான் நம்ம ஜனம் தேடும்.

எப்படி இருந்தாலும் நீங்க யார் சொல்வதையும் கேட்கமாட்டீங்க, இருந்தாலும் சொல்றேனுங்க “பார்த்து சூதானமா நடந்துக்கங்க”.

இந்த மஞ்சள் கலரில் மூணு சக்கரத்தில ஓடுமே அதை மறந்துட்டிங்க போலிருக்கு.

கடைசியா ஒன்னுங்கம்மா, இந்த டாஸ்மாக்குல தினத்திற்கும் ஒரு விலை சொல்றாங்கம்மா, எப்படியிருந்தாலும் நாங்க கொடுப்போம், அப்படியே அநியாயமா விலை ஏத்தினாலும் நாங்க மத்த கழுதைங்க மாதிரி போராட்டம் எல்லாம் நடத்தமாட்டோம். அதால எங்களுக்கு ஏதாவது பார்த்து ஒரு வழி செய்யுங்க.இப்படிக்குடாஸ்மாக் டகால்டி
//
//

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Niroo said...

vadai

TECHNOLOGY said...

வணக்கம் தல !

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.