Wednesday 10 August 2011

மூன்றெழுத்து டுபாக்கூர் கவுஜ


தொடங்கிய கட்சி மூன்றெழுத்து

கட்சி பெயர் மூன்றெழுத்து

கொண்ட கொள்கை மூன்றெழுத்து

தொண்டரின் அன்பு மூன்றெழுத்து

கொண்ட கடமை மூன்றெழுத்து

சேர்த்த ஒட்டு மூன்றெழுத்து

குத்திய கள்ள ஒட்டு மூன்றெழுத்து

உள் குத்து மூன்றெழுத்து

பிடித்த ஆட்சி மூன்றெழுத்து

கொண்ட பதவி மூன்றெழுத்து

---(கா)த்த தமிழ் மூன்றெழுத்து

அடித்த கொள்ளை மூன்றெழுத்து

வளைத்த நிலம் மூன்றெழுத்து

குடித்த புட்டி மூன்றெழுத்து

பிடித்த குட்டி மூன்றெழுத்து

சேர்த்த வைப்பு மூன்றெழுத்து

சுட்ட பணம் மூன்றெழுத்து

அதை போட்ட வங்கி மூன்றெழுத்து

அதன் இருப்பிடம் சுவிஸ் மூன்றெழுத்து

போன மானம் மூன்றெழுத்து

மக்களுக்கு கொடுத்த அல்வா மூன்றெழுத்து.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

settaikkaran said...

முன்றெழுத்தில் அவர் மூச்சிருக்கும். :-)

//ஏற்றிய "கொடி" மூன்றெழுத்து//

??? இதை மட்டும் கவனிங்க. ஏன்னா, ’தப்பு’-ம் மூன்றெழுத்துதான். :-))

கும்மாச்சி said...

சேட்டை தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, அதான் அதான் சேட்டை.

கோகுல் said...

மக்கள் இவங்களுக்கு வச்ச ஆப்பு மூன்றெழுத்து

கும்மாச்சி said...

அண்ணே ஆப்ப மறந்துட்டேனே

Anonymous said...

நம்ம தலைவி நமீதா மூன்றெழுத்து...

கும்மாச்சி said...

அதான் தலை அந்த படத்த போட்டேன்

Anonymous said...

;-)

Anonymous said...

செய்த ஊழல் மூன்றெழுத்து

Chitra said...

நல்லா கும்மி எடுத்து இருக்கீங்க... ஹி,ஹி,ஹி,ஹி....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.