Monday 16 April 2012

மின்வெட்டு அதிகரிக்குமாம்...............அம்மா சொல்றாங்க


வெளிமாநிலங்களிலிருந்து வாங்கும் மின்சாரக் கட்டணத்தை மத்திய மின்சார ஒழுங்குத்துறை உயர்த்தியுள்ளது. இதனால் பாதிக்கப் படுவது தமிழகம் ஆதலால் அந்த கட்டண உயர்வை ரத்து செய்யுமாறு அம்மையார் “மண்ணு மோகனு சிங்குக்கு” கடிதம் எழுதியுள்ளார்கள் (இரண்டு கட்சித் தலைவர்களும் நல்ல கடிதம் எழுதுறாங்க,  எட்டாம் வகுப்பு நியாபகமோ?).

அவர் வழக்கம் போல அதை துடைத்துப் போட்டு விடுவார். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கியவுடன் உற்பத்தியாகும் இரண்டாயிரம் மெகாவாட்டையும் தமிழகத்துக்கு தருமாறு ஒரு கடிதம் எழுதினாக அதுக்கே நாராயணசாமி கொடுக்கிறோம் கொடுக்க மாட்டோம் என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த மாத மின்சார கட்டண பில்லை பார்த்து தமிழகம் வாய் பொளந்து நிற்கிறது.

மேலும் இந்த மத்திய அரசின் மின் கட்டண உயர்வால் தமிழ் நாடு அரசு மேலும் முன்னூற்று ஐம்பது கோடி கொடுத்தால் தான் வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் கிடைக்கும். இல்லை என்றால் இப்பொழுது இருக்கும் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்க சாத்திய கூறுகள் உள்ளன.

ஆட்சி மாற்றம் கேட்டவர்களுக்கு இப்போ வருவதெல்லாம் வெறும் ட்ரைலர் தான். இன்னும் மெயின் பிக்சர்ல இருக்குது.
எல்லாவற்றுக்கும் போன ஆட்சியை காரணம் கூறி சட்ட சபையில் கூவுவார்கள். ஆக மொத்தம் இரண்டு கழகங்களும் சேர்ந்து தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்காததுதான் காரணம் என்று இருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

எப்போ விடியுமோ?

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

கூடல் பாலா said...

எந்த ஒரு பெரிய மின் திட்டமும் துவங்கப்பட்டு 5 வருடங்களுக்குள் செயல் படுத்தப்பட சாத்தியமில்லை .தான் துவங்கிய திட்டம் அடுத்தவர் ஆட்சியில் செயல்படுத்தப் பட்டால் அவர்கள் நல்ல பெயர் சம்பாதித்துவிடுவார்கள் என்றெண்ணி புதிய திட்டங்கள் வகுக்காமல் இரு கழகங்களும் மக்களை களேபரப் படுத்தி வருகின்றன .என்றுதான் விமோசனம் வருமோ ....

fcrights said...

//ஆட்சி மாற்றம் கேட்டவர்களுக்கு இப்போ வருவதெல்லாம் வெறும் ட்ரைலர் தான். இன்னும் மெயின் பிக்சர்ல இருக்குது.
எல்லாவற்றுக்கும் போன ஆட்சியை காரணம் கூறி சட்ட சபையில் கூவுவார்கள். ஆக மொத்தம் இரண்டு கழகங்களும் சேர்ந்து தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்காததுதான் காரணம் என்று இருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

எப்போ விடியுமோ?//
good post

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.
for readmore www.fcrights.in

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாலா.

சீனு said...

மின்வெட்டு எவ்வளவு அபாயமானது என்பது சென்னையில் இருக்கும் பொது என்னகுத் தெரியவில்லை. என் சொந்த ஊரான நெல்லைக்குச் சென்ற பொது தான் அதை முழுமையாக உணர்ந்தேன். பாவம் பணிட்டடா கைப்புள்ள பாவம் பணிட்ட

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.