Tuesday 8 May 2012

கலக்கல் காக்டெயில் -70


வழக்கு எண் 18/9

இந்த வாரம் வெளிவந்திருக்கும் இந்தப் படம் சற்று வித்தியாசமானது என்று இது வரை வந்த விமர்சனங்கள் கூறுகின்றன. நாலு குத்துப் பாட்டு, இரண்டு சண்டை, தொப்புள், தொடை தரிசனம், பன்ச் டயலாக் என்று பார்த்து பார்த்து அலுத்த தமிழ் ரசிகர்களுக்கு சற்றே வித்யாசமான திரைக்கதையுடன் வந்திருக்கும் இந்தப் படம் பார்க்க வேண்டிய ஒன்று.

காதல் படத்தை எழுதி இயக்கிய பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கியிருக்கிறார். முழு திரைக்கதையும் எழுதிய பின்தான் படப்பிடிப்பு என்று பிடிவாதமாக இருந்து நல்ல படத்தை கொடுத்திருப்பதாக தெரிகிறது. முழுக்க முழுக்க புது முகங்களையே வைத்து எடுக்க தில் வேண்டும்.
 
ஆனால் இரண்டு வித்யாசமான கோணத்தில் கதையை நகர்த்துவது தமிழுக்கு புதியதல்ல, விருமாண்டியும், 12 B யும் வந்து விட்டன. இந்தப் படம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டு விமர்சனம் எழுதலாம்.

தேசிய பாதுகாப்பு குழு

மத்திய உள்துறையின் தேசிய பாதுகாப்பு கூட்டத்திற்கு சென்று வழக்கம் போல் அம்மா சிதம்பரத்தின் மேல் உள்ள காண்டில் த்திய அரசை வருத்தெடுத்திருக்கிறார்கள்.

என்னதான் வயதானாலும் பெருந்தன்மை என்ற ஒன்று இந்த அரசியல்வாதிகளுக்கு வராது போலிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையில் கூடவா குழாயடி சண்டை செய்யவேண்டும்.

ரசித்த கவிதை

ஐயாவோ செல்வியோ ஆட்சிக்கு வரட்டும்
திண்ணைக் கனவில் திடம் பெறுவோம்-வெண்திரைதான்
தீர்த்து வைக்கும் எல்லாப் பிரச்சினையும் நல்ல
தியேட்டர்உன் ஊரில் திற.

-----------------வெண்பா யாரோ எழுதியது

சமகாலத்திற்கு பொருந்துகிறது.

ரசித்த நகைச்சுவை

அமெரிக்காவில் உள்ள அந்த கம்பெனியில் நேர்காணல், அதிகாரி எதிரே வேலைக்கு வந்த அமெரிக்கரிடம்

உங்கள் பெயர்?
குக்கர் (Cooker)
வயது?
இருபத்தியெட்டு
கல்யாணமாகிவிட்டதா?
ஆம்
எத்தனை நாளாக?
எட்டு மாதங்களாக
குழந்தைகள்?
நான் குக்கர் என்றுதான் சொன்னேன், ப்ரெஷர் குக்கர் இல்லை.



இந்த வார ஜொள்ளு






08/05/2012

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

முத்தரசு said...

18/9 பார்கோணும்

வெண்பா... ரசித்தேன்.

நகைச்சுவையும் ஜொள்ளும் குப்புன்னு ஏறுடிச்சி

கும்மாச்சி said...

மனசாட்சி வருகைக்கு நன்றி ஸார்.

சீனு said...

வித்தியாசமான படம். முடிவு பிடிதிருந்த்தது, வெண்பா அருமை

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சீனு.

கோவை நேரம் said...

யாருங்க அது..அம்மணி சூப்பரா இருக்கு..ஹி ஹி ஹி

அன்புடன் நான் said...

கலவையான தகவல் கலக்கல்

அது வெண்பா அல்ல... அதை போன்ற வடிவில் உள்ளது. வெண்பாவிற்கான இலக்கணம் இதில் இல்லை.

நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.