Wednesday 11 July 2012

தெரிந்து கொள்வோம்-------ஜி. ராமநாதன்


தமிழ் திரைஇசை எத்தனையோ இசையமைபாளர்களை நமக்கு கொடுத்திருக்கிறது. கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேலான இசையமைப்பாளர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ஜி, ராமநாதன் இவர்களுக்கெல்லாம் முதன்மையானவர் என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீ ரங்கம் பிச்சாண்டார்கோவிலில் கோபாலசாமி ஐயருக்கு மகனாய் பிறந்தார். ஐந்தாவது வரை தான் படித்தார். இவர் சங்கீதம் முறையாக கற்றுக்கொள்ளவில்லை. வெறும் கேள்வி ஞானம்தான். தன்னுடைய பதினெட்டாவது வயதில் பாரதகான சபா என்கிற நாடகக்குழுவில் சேர்ந்து ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு பிரபல வி.எ. செல்லப்பா நாடகக்குழுவில் சேர்ந்தார். பிறகு 1932 ல் முதன்முதலாக ஒரு தமிழ் படத்திற்கு ஹார்மோனியம் வாசித்தார். பின்பு 1938ல் தியாகராஜ பாகவதரின் சத்யசீலன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு பரசுராமன், பூலோக ரம்பை, ஹரிதாஸ், உத்தமபுத்திரன், அம்பிகாபதி, கப்பலோட்டிய தமிழன், அருணகிரிநாதர், புதுமைப்பித்தன், மந்திரிகுமாரி, அமரதீபம், மதுரைவீரன், அரசிளங்குமரி, ஜகதலப்ரதாபன், அமரதீபம், தூக்குத்தூக்கி  என்று 82 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் “இசை மேதை” “சங்கீத சக்கரவர்த்தி” என்ற பட்டங்களுடன் அழைக்கப்பட்டார். 

கர்நாடக சங்கீதத்தை திரை இசையில் புகுத்தி அதன் சிறப்பை பாமரனுக்கும் கொண்டு சென்றவர். இவர் ஒரு நல்ல பாடகரும் கூட. “பொன்முடி” என்ற படத்திலும், கே.வி.மகாதேவன் இசையில் “அல்லி பெற்ற பிள்ளை” என்ற படத்திலும் பாடியிருக்கிறார்.

இவருக்கு பிடித்த பாடகர்கள் தியாகராஜ பாகவதர், ஜி.ஏன். பாலசுப்ரமணியன், எம்.எல். வசந்தகுமாரி, பிடித்த இசையமைப்பாளர் நௌஷாத்.

இவர் கர்நாடக ராகங்களை கையாண்ட விதம் ஒரு தனி சிறப்பு பெற்றது. உத்தம புத்திரனில் “முல்லை மலர் மேலே” என்ற கானடா ராகப்பாடல் மிகவும் பிரபலம். பிற்பாடு விசுவநாதன் தொட்டு இளையராஜா வரை இந்த ராகத்தை பிழிந்து எடுத்ததற்கு ஜி ராமநாதனின் அந்தப் பாடல் ஆரம்பம் என்று சொல்லலாம். மேற்கத்திய இசையையும் “யாரடி நீ மோகினி” என்ற பாடலில் கையாண்டு ராக் அண்ட் ரோல் சாயலில் மெட்டமைத்திருப்பார்.

தான் இசையமைக்கும் பாடல்களை பாடகர்களுக்கு பாடிக்காண்பித்து பின்பு அவர்களை பாட வைத்து ஒலிப்பதிவு செய்வாராம். டி.எம். சௌந்திரராஜன் இவரைப்பற்றி சொல்லும் பொழுது ஐயருக்கு திருப்தி ஏற்படும்படி ஒரு பாடகன் பாடினால் அவன் உலகத்தில் உள்ள எந்த  இசையமைப்பாளருக்கும் பாடத்தகுதி பெறுகிறான் என்றாராம்.

கப்பலோட்டிய தமிழனில் பாரதியாரின் “காற்று வெளியிடை கண்ணம்மா” என்ற கவிதையை மோகன ராகத்தில் அமைத்து டூயட் ஆக்கியிருந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் “போகாதே போகாதே என் கனவா”  என்ற சோகப்பாடலை முகாரி ராகத்தில் மெட்டமைத்து, அதே ராகத்தில் அம்பிகாபதியில் “வாடா மலரே செந்தேனே” என்று அழகிய இனிமையான மகிழ்ச்சி டூயட் போட்டார். முகாரி ராகம் அழுகை ராகம் என்ற பெயர் பெற்றது.

இவருடைய இசையமைப்பில் வெளிவந்த “தூக்கு தூக்கி” படத்தில்தான் டி.எம்.எஸ் முதன் முதலாக சிவாஜி கணேசனுக்கு பாடினார். அதில் உள்ள எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தின் இறுதியில் வரும் “ஏறாத மலைதனிலே” என்ற நாட்டுப்புற மெட்டு பின்னர் வந்த இளையராஜாவின் “தண்ணி கருத்திறுச்சி” தொட்டு எல்லா குத்துப் பாடல்களுக்கும் முன்னோடி என்றால் அது மிகையாகது.

இவர் கடைசியாக “அருணகிரிநாதர்” திரைப்படத்திற்கு இசையமைத்து கொண்டிருந்த காலத்திலே மாரடைப்பால் மரணமடைந்தார். அந்தப் படத்தின் மீதிப் பாடல்களை டி.ஆர். பாப்பா இசையமைத்தார்.

அவரின் இசையில் இரண்டு பாடல்கள் இதோ காணொளியாக 
Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

கோவை நேரம் said...

தெரியாத விஷயம்...நன்றி..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Anonymous said...

dear sir

i understand g.ramanathan sung "ejaman petra selvame" song.

p.senthil

கும்மாச்சி said...

Thanks for the information.

முத்தரசு said...

தகவலுக்கும் - பகிர்வுக்கு நன்றி

கும்மாச்சி said...

மனசாட்சி வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் அவர்களைப் பற்றி நல்லதொரு தொகுப்பு... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 3)

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அவ்வளவாக பரிச்சயம் இல்லை..
நல்ல நினைவூட்டல் கும்மாச்சி...

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையானதொரு பகிர்வு! நிறைய அறியாதவிசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது! நன்றி!

கும்மாச்சி said...

\\ரெவெரி said...

ஜி. ராமநாதன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை..
நல்ல நினைவூட்டல் கும்மாச்சி said...//

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

\\s suresh said...

மிக அருமையானதொரு பகிர்வு! நிறைய அறியாதவிசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது! நன்றி!//

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

மெய்ப்பொருள் said...

ஜி ராமநாதன் எம் கே தியாகராஜ பாகவதர் படங்களுக்கு இசை அமைத்தவர் .
பாகவதர் பாடல்களுக்கு ராகம் என்ன என்று கேட்கக் கூடாது .
எல்லாம் அபூர்வ ரகம் ! - அந்த ராகத்தில் வேறு பாடல் இருக்காது .
கேட்டு ரசிக்க வேண்டும் .

அதற்கு காரணம் பாடல் எழுதிய பாபநாசம் சிவன் .
இவர் பெரும்பாலும் கோவில்களில் தன் நேரத்தை கழித்தவர் .
பாடல் எழுதி என்ன ராகம் என்றும் குறித்துக் கொடுப்பார் .

பாகவதர் படம் புக் செய்யும் போதே பாடல் பாபநாசம் சிவன் ,
இசை ஜி ராமநாதன் என்று கண்டிஷன் போடுவார் .

பி யு சின்னப்பா படங்களுக்கும் இவர்தான் இசை அமைத்தவர் .

டி எம் சௌந்தரராஜன் என்ற வைரத்தை பட்டை தீட்டியவர் .
டி எம் எஸ் சொன்னது 'என் நல்ல நேரம் அவரிடம் கொண்டு சேர்த்தது '

ஹார்மோனிய சக்கரவர்த்தி என்று அறியப்பட்டவர்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.