Tuesday 3 July 2012

சிறை நிரப்பி சீர் தூக்குவோம்


சிறை நிரப்பி சீர் தூக்குவோம்
சீரழிந்த இத்தமிழ் திருநாட்டை
அறிவற்றவர்களின் அறிவுக்கண் திறக்க
அறவழியிலே போராடுவோம்
குடிகெடுத்த கோடாலிகளை
தடியெடுத்து தடுத்திராமல்
முடியறுத்து முடித்திடுவோம்
கழகக் கண்மணிகளே
வழக்கமாய் பம்மாமல்
ஒழுக்கமே துணைகொண்டு
ஒழுங்காக வந்திடு
தவித்திருக்கும் என் குடும்பம்
தறிகெட்டு போகுமுன்
மறக்காமல் பணமுடிப்பு
சிரம் தாழ்த்தி தந்திடு
நிதி நிறைந்தவர் பொற்குவையும்
நிதி குறைந்தவர் பணமுடிப்புகளையும்
கதியின்றி நிற்கும் என் பிறப்புகள்
தழைத்தோங்க தானம் தந்திடு
அஞ்சாநெஞ்சர்கள் வராவிடினும்
அஞ்சாமல் நீ வந்திடு
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
கண்ணிமை போல் காக்க
கட்டாயம் “கட்டிங்” போட்டு
களிப்புடனே வந்திடு
முதல் வரிசையில் இல்லாவிடினும்
முடிவில் நான் வந்திடுவேன்
சிறை நிரப்பி சீர் தூக்குவோம்
செந்தமிழ் திருநாட்டை.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

முத்தரசு said...

நல்லா தூக்குங்க

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தல.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர்! வஞ்ச புகழ்ச்சியா?

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சுரேஷ் பாராட்டிற்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.