Saturday 7 July 2012

ஒரு ஓநாய் அழுகிறது


விருதுநகர் ஆட்சியர் பாலாஜி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது பழைய செய்தி. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் ஆளும்கட்சியினரின் அல்லக்கைகளுக்கு வேலை கொடுக்கவில்லை மற்றும் நீதி, நேர்மை, நியாயம் என்ற ஆளும் வர்க்கத்திற்கு உதவாத கொள்கைகள் எல்லாம் வைத்துக்கொண்டிருந்ததனால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி பத்திரிகைகளில் வந்தபொழுது அம்மா ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. அதை பற்றி அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் விருதுநகர் ஆட்சியருக்கு ஆதரவாக மஞ்சள் துண்டு மடாதிபதி வெளியிட்ட அறிக்கைதான் வேடிக்கையாக உள்ளது. நேர்மையான அதிகாரிகள் ஆளும் கட்சியினரால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று புலம்பியிருக்கிறார்.

இவர்களது ஆட்சியில் உமாசங்கர் பணிநீக்கம் செய்தது நியாபகம் இல்லை போலும், இல்லை அவர் நேர்மையானவர் இல்லை என்பது இவருடைய எண்ணமாக இருக்கலாம். அரசியல்வாதிகளின் அகராதியில் நீதி, நேர்மை, நியாயம் என்பதன் பொருள் என்னவோ தெரியவில்லை.

இரண்டு கழகங்களிலும் தங்கள் சொல்லை கேட்காத அதிகாரிகள் நேர்மையற்றவர்கள். அவர்களை பணிநீக்கம் செய்வது, பந்தாடுவது என்பது வழக்கமான நடைமுறை.

இரண்டு கட்சிகளின் ஆட்சி சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் அதிகாரிகளை கூலிக்காரர்களாகவும், ஒற்றர்களாகவும், ஆளும்கட்சியின் எடுபிடிகளாகவும் நடத்தபடுவதுதான்  வரலாற்று உண்மை. ஆளும்கட்சியினரின் சொல்படி நடக்கும் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு, பதவி உயர்வு எல்லாம் அள்ளி அள்ளி கொடுக்கப்படும்.

இந்த விஷயத்தில் ஒருவர் செயலை மற்றொருவர் விமர்சிப்பது ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுவது போலத்தான்.    

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

வெளங்காதவன்™ said...

விடுண்ணே!
அடுத்த எலக்ஷன்ல நாம ரெண்டு பேரும் சி.எம். ஆவுறோம். தமிழ்நாட்ட முன்னேத்தறோம்!

#தொண்டைத் தண்ணி வத்தக் கத்துனாலும், செவுடன் காதுல ஊதுன சங்காட்டம் இருப்பானுங்க. பாப்பம்னே, நீயும் நானும் எத்தினி நாளு ஏமாறுவம்னு

கும்மாச்சி said...

அட இன்னாபா இது, ரெண்டுபேரும் எப்படி சி.எம் ஆவறது, நான் சி.எம்மு, நீங்க நிதி வச்சிக்கோங்க. ஓகே வா.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல கேள்வி கேட்டீங்க! இவங்களாலே தமிழகத்துக்கு பிரயோசனம் கிடையாது! ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு சாகத்தான் லாயக்கு!

கும்மாச்சி said...

கரெக்டா சொன்னீங்க சுரேஷ்.

sarathy said...

Not only in TN, but in center also - same story! Politicians are born to enjoy, voters are born to suffer!

கும்மாச்சி said...

தங்களது வருகைக்கும், கம்மென்ட்ஸுக்கும் நன்றி தலைவரே.

திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்பிற்கேற்ற பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 4)

முத்தரசு said...

என்னவோ போங்க.....

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.