Thursday 27 December 2012

இதுவும் கடந்து போகும்........

கடந்த வாரம் தலைநகரத்தில் நடந்த கோர கற்பழிப்பு சம்பவம் இப்பொழுது நாட்டையும், ஆள்பவர்களையும் போட்டு உலுக்கிக்கொண்டிருக்கிறது.

இருபத்து மூன்று வயது முதலுதவி மருத்துவம் படிக்கும் மாணவியும் அவளது நண்பனும் இரவு சினிமா பார்த்து விட்டு, தங்கள் இருப்பிடம் செல்ல தனியார் பேருந்தில் ஏறியிருக்கிறார்கள். அதுதான் அவர்கள் செய்த தவறு. பேருந்தில் இருந்த ஆறு மிருகங்கள் அவளை அடித்து உதைத்து கற்பழித்திருக்கின்றனர். தடுக்க வந்த நண்பனை கம்பியால் அடித்து அரை நிர்வாணமாக பேருந்தை விட்டு வெளியே வீசியிருக்கின்றனர். அந்த அப்பாவி பெண்ணையும் கம்பியால் அடித்து அரை நிர்வாணமாக வெளியே வீசிவிட்டு சென்று இருக்கின்றனர். காலையில் அவர்களை நினைவிழந்த நிலையில் காவல்துறை மீட்டிருக்கிறது.

அந்த தனியார் பேருந்து இவை நடந்த மூன்று மணி நேரமும் தெற்கு டில்லியை சுற்றி வந்திருக்கிறது. இந்த மூன்று மணிநேரமும் சுற்றிய அந்தப் பேருந்தை போலிஸ் தடுத்து நிறுத்தி ஏன் சோதிக்கவில்லை? என்ற கேள்வியெல்லாம் இப்பொது பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். டில்லியில் இது ஒன்றும் புதிய சமாசாரமல்ல. வருடா வருடம் புத்தாண்டு விழாக்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆள்பவர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்காததுதான் ஆச்சர்யம்.

இப்பொழுது டில்லி முதலமைச்சர் காவல் துறை ஏன் கீழ் இல்லை என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார். மத்திய அரசோ பிரதரமரை அறிக்கை விட சொல்லியும், தொலைகாட்சியில் நேரில் பேசியும் மக்களை சமாதான படுத்தப்பார்க்கிறார்கள். இப்பொழுது மாணவர்களும், சில மகளிர் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு காவல்துறை ஊழியர் மரணம் அடைந்திருக்கிறார்.

எதை தின்றால் பித்தம் தெளியும், ஏதாவது செய்யவேண்டும் என்று உள்துறை மந்திரியை பலிகடா ஆக்கிறார்கள். 

நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?. நம் நாட்டு அரசியல்வாதிகள் வினை விதைத்ததை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பிழைத்தாலும் இயல்பான வாழ்க்கை வாழமுடியாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இது போன்று மேலும் நடக்காமல் இருக்க அரசு என்ன செய்யப்போகிறது? என்று நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அவளை இந்த நிலைக்கு தள்ளிய கயவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.




Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் வேதனையான விசயம்! இவர்களிடம் ஆட்சியை கொடுத்த நாம் முட்டாள்கள்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

ப.கந்தசாமி said...

அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமோ?

கும்மாச்சி said...

உங்கள் கருத்து சரியே, வருகைக்கு நன்றி ஐயா.

Anonymous said...

Do those devils have political connection?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.