Monday 3 December 2012

2080 ல் செல்வந்தர்கள்

இப்பொழுது இருக்கும் மன்னர் "தூயா" வின் ஆட்சியில் நாடு ஓரளவிற்கு முன்னேறியுள்ளது என்று சொல்லலாம்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் முன்பு மிகவும் மோசமாம். இப்பொழுது வழக்கொழிந்து போன ஊழல் என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்த அனைவரும்  நாட்டையே சூறையாடினார்களாம்.

அரசே ஏற்று நடத்திய "டாஸ்மாக்" என்று ஒரு நிறுவனத்தில் ஏதோ சோமபானங்களை விற்பார்களாம். அதை பிரஜைகள் "குடிப்பார்களாம்", பெரும்பாலும் இந்த வார்த்தையின் அர்த்தம் இன்றைய பிரஜைகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத்தான் இப்பொழுது "நக்" என்று சொல்கிறார்கள். பொழுது புலருமுன்னே அதை குடித்துவிட்டு போக்குவரத்தின் ஊடே ஆடை கலைய உறங்குவார்களாம். போனமுறை "தீபா" வின் பொழுது அனுமதி பெற்று மேலடுக்கில் தந்தையை காண சென்றபொழுது கூறிக்கொண்டிருந்தார். அடுத்த அனுமதி  இருபது வருடங்களுக்கு பிறகுதான்  என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தொடுபெசியில் பேச மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி கிடைக்கும்.

அய்யா, அம்மா, ஆத்தா என்ற ஆட்சி எல்லாம் பின்னர் வந்த கிளர்ச்சிகளில் ஒழிக்கப்பட்டு இப்பொழுதிருக்கும் மன்னரின் தலைவர் "புதி" தான் புதிய தலைவராக பதவி ஏற்றாராம்.

சென்னை என்று ஒரு நகரம் இருந்ததாம், அதை கடல் கொண்டு போய்விட்டதாக உலவியில் உலவிக்கொண்டிருந்த பொழுது அறிந்தேன். ஆனாலும் அந்த நகரத்தை பார்க்கவேண்டும் என்றால் "நீர்மூழ்கி" கப்பலில் கொண்டு சென்று காட்ட தூயாவின் ஆட்சியில் ஏற்பாடுகள் நடக்கிறதாம். 2090ல் "தீபா" வின் பொழுது முதல் சேவை தொடங்குமென்று மன்னர் தூயா வாக்குறுதி அளித்திருக்கிறார். 

இப்பொழுதிருக்கும் தூயாவின் ஆட்சியில் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.  பிரஜைகளுக்கு முதலிலேயே "IM" ஆக மருந்தை செலுத்திவிடுகிரார்கள்.ஆதலால் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்படியே கணவன் மனைவிகள் ஆசைப்பட்டால் அரசிடம் விண்ணப்பிக்கவேண்டும். அனுமதி பெற உன்பாடு என்பாடு என்றாகிவிடும்.

அரிசி, கோதுமை, காய்கறி எல்லாம் வழக்கொழிந்துவிட்டன. "உண"வு என்று ஒரு "திர"வத்தை "டாமா"வில் கொடுக்கிறார்கள். அதை வாரம் ஒரு முறை "விர" தொட்டு "நக்" செய்ய வேண்டும். சோமபானத்திற்கு பதிலாகத்தான் இப்பொழுது "நீர்" என்று ஒன்று கொடுக்கிறார்கள். ஒரு அவுன்ஸ் வாங்குவதற்கு சொத்தை விற்க வேண்டியுள்ளது.

இன்று நாட்டின் செல்வந்தர் பட்டியல் வந்துள்ளது.

"தூயா"தான் முதலிடம் -----------வருடத்திற்கு 2000 லிட்டர் நீர் உற்பத்தி திறனுள்ள தொழிற்சாலை வைத்துள்ளாராம்.

மற்ற ஒன்பது பேர்களும் அவருடைய தொழிற்சாலை உற்பத்தி திறனில் பாதியளவுகூட இல்லை. அடுத்தவர் "மயா" 900 லிட்டர் தான் "KF" ல் உற்பத்தி செய்கிறார். பின்னர் "மிட்" என்று பட்டியல் போகிறது.

"நிதி" இருநூறு என்று பொய் கணக்கு காட்டியதால் தற்பொழுது தண்டனை பெற்று "தூயா"விடம்   கருணை மனுபோட்டு காத்திருக்கிறார்.

எங்களுக்கு  "நீர்" வாங்க இருபது வருடங்களாக சேமித்துக்கொண்டிருக்கிறோம். இந்த வருடம் வாங்கலாம் என்றால் மனைவியோ வேண்டாம் இன்னும் ஐந்து வருடங்கள் சேர்த்த பிறகு வாங்கலாம் என்கிறாள்.

இப்பொழுது இருக்கும் சேமிப்பில் வாங்கினால் பத்து "நக்" குக்கூட காணாது என்கிறாள்.

என்னுடைய முதல் "Science Fiction" முயற்சி இது.







Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

rajamelaiyur said...

சுஜாதாவின் என் இனிய இயந்திரா நாவலில் இப்படிதான் பெயர்கள் இருக்கும்...

அருமை அருமை

NKS.ஹாஜா மைதீன் said...

உண்மையில் சூப்பர் ....சில இடங்களில் சுஜாதாவின் எழுத்தை வாசிப்பது போன்றே இருந்தது...தொடருங்கள்....

Anonymous said...

பரவாயில்லை, இன்னம் மெருகேற்ற இயலும், உங்களுக்கு அவ் வலு உள்ளது. இந்தக் கதைப் போலத் தான், வள்ளுவன் என்னும் புலவர் "நீரின்றி அமையாது" என 'நக்'கல் செய்துள்ளாரோ.

கும்மாச்சி said...

ராஜா, ஹாஜா, இக்பால் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

வித்தியாசமான சிந்தனை...!!!
தொடருங்கள்...
நானும் தொடருவேன்.

வெளங்காதவன்™ said...

ஹா ஹா ஹா

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருணா.

கும்மாச்சி said...

பொள்ளாச்சியாரே வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

உண்மை! உண்மை! இன்று நீர்வளம் குறைந்து வருகையில் உங்கள் கதையில் நடந்தது நடக்க வாய்ப்பு உள்ளது! அருமையான முயற்சி! சிறப்பு! வாழ்த்துக்கள்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.