Tuesday 4 December 2012

அம்மாவிடம் அடைக்கலமானார் நாஞ்சில்

ம.தி.மு.க வின் தொடக்ககாலம் தொட்டே வைகோவுடன் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று அம்மாவை போயஸ் கார்டனில் சந்தித்து அ.இ.அ,தி.மு.க வில் ஐக்கியமானார். இதனால் யாருக்கு என்ன லாபம்?, மின்வெட்டு நீங்குமா?, பால்விலை குறையுமா?, இல்லை டாஸ்மாக்கில் தான் தள்ளுபடியில் கொடுப்பார்களா?  என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இதனால் யாருக்கு லாபம்?  என்று "புதிய தலைமுறையில்"  நேர்பட பேசு நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்தையும் அழைத்து ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். சத்தியமாக நமக்கு இல்லை என்பது தெரிகிறது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா? கட்சி விட்டு கட்சி தாவுவது, தலைவரிடம் எதாவது எதிர்பார்த்து கிடைக்கவில்லை என்றால், சாரைப்பாம்பு, சரக்கு மாஸ்டர், புண்ணாக்கு வியாபாரி என்று ஏசிவிட்டு அடுத்த கட்சியைப் பார்த்து போய்கிட்டே இருப்பாங்க.

தமிழ்நாட்டில் இரண்டே பிரதான கட்சிகள்தான், மற்றவர்களெல்லாம் அண்டிப்பிழைப்பவர்கள் என்பதை ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் தலையெழுத்து. மற்ற உபரிக்கட்சிகள், ஜாதிச்சாயம் பூசிக்கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு பிரதான கட்சியுடன் கூட்டணி பேரம் பேசி "எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்" என்று போய்க்கொண்டிருக்கின்றன.

தக்காளி  இதற்கெல்லாம் எப்பொழுது விடிவுக்காலமோ?

யாராவது மாற்றுவார்கள், அது வரை நாம் டாஸ்மாக் துணையுடன் பட்டா பட்டி தெரிய படுத்திருப்போம்.








Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

ஹா.ஹா.ஹா..அருமையான சுருக்கமான அலசல்.

ரஹீம் கஸ்ஸாலி said...

ஹா.ஹா.ஹா..அருமையான சுருக்கமான அலசல்.

கும்மாச்சி said...

ரஹீம் வருகைக்கு நன்றி.

NKS.ஹாஜா மைதீன் said...

இன்னொரு அடிமை சிக்கியது!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹாஜா.

வெளங்காதவன்™ said...

யோவ்... உன்னோட ஐ.டி.ய யாராச்சும் ஹேக் பண்ணிட்டாங்களா?

settaikkaran said...

இங்கே தாக்குப்பிடிக்கிறாரான்னு பார்க்கலாம்! :-)

கும்மாச்சி said...

சேட்டை வருகைக்கு நன்றி.

மலரின் நினைவுகள் said...

பெஞ்சு தட்டும் கோஷ்டியில் மேலும் ஒரு இணைப்பு...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மலர்.

மதுரை சரவணன் said...

nalla nakkal pathivu... arasiyalil ithellaam sakajam appaa..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சரவணன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.