Friday 28 December 2012

கலக்கல் காக்டெயில்-97

2012 ல் என்ன கிழித்தார்கள் 

2012ம் வருடம் முடியப்போகிறது. நமது அரசியல் தலைவர்கள் என்ன கிழித்தார்கள் என்று பார்ப்போம்.

முதலமைச்சர் அம்மா: எதிர்கட்சி தலைவரின் வாய்க்கு சட்டசபையில் பூட்டு போட்டது, ஆனாலும் வெளியே அவர் பேசும் பேச்சிற்கு ஒன்றும் செய்யமுடியாதது. தமிழகத்தை இருளும் இருள் சார்ந்த இடமாக்கியது. இலக்கியத்தில் முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை தவிர தமிழ் நாட்டிற்கு புது விளக்கமாக இருளும் இருள் சார்ந்த இடமாக்கியது.

கலைஞர்: மகளை வெளியே கொண்டு வந்தது. வழக்கம்போல் அறிக்கைகள் விட்டு மற்றபடி செயற்குழுவை கூட்டி கட்சியின் பெயர் இன்னும் பத்திரிகைகளில் வரும்படி செய்வது. போராட்டங்களை அறிவிப்பது.

மருத்துவர் ஐயா: காதல் திருமணத்திற்கு புது விளக்கம் கொடுத்து பேந்த பேந்த விழிப்பது.

கேப்டன்: சட்டசபையில் அம்மாவுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதிய பின்னும், சிறையில் இல்லாமல் இருப்பது, மற்றும் இன்னும் கட்சியில் சில எம்.எல். ஏக்களை தக்க வைத்துக் கொண்டிருப்பது.

வை.கோ: அவர் எங்கு இருக்கிறார்?.

2012ல் தமிழ் சினிமா

இந்த வருடம் வந்த படங்களில் நான் பார்த்தவையில் எனக்கு மிகவும் பிடித்தது


  1. வழக்கு எண் 18/9: பாலாஜி சக்திவேலின் திரைக்கதையில் வந்த நல்ல படம். இந்தப் படத்தை நான் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்த்தேன். படம் முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள், படம் முடியும் வரை வேறு ஒரு சத்தமும் இல்லை.
  2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: குறும்பட இயக்குனர் இயக்கிய படம், நல்ல திரைக்கதை, மிகவும் குறைந்த கதாபாத்திரங்கள், Short term memory loss கருவை வைத்துக்கொண்டு நகைச்சுவையில் கதையை நகர்த்திக்கொண்டு சென்றிருந்தார். ஆனால் படத்தில் வரும் கடைசி கல்யாண காட்சி அநியாயத்திற்கு நீளம்.
  3. பீட்சா: இதுவும் ஒரு குறும்பட இயக்குனரின் படைப்புதான். ஆனால் தமிழில்  வந்த சற்று வித்தியாசமான திகில் படம் என்று இதை சொல்லலாம். படத்தில் ஒளிப்பதிவாளரின் பங்கு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
  4. அரவான்:வசந்தபாலனின் இயக்கத்தில் வந்த பீரியட் படம்.  பரவாயில்லை. "நிலா நிலா போகுதே" பாட்டும் படமாக்கிய விதமும் கவனிக்க வைத்தது.
மற்றபடி வந்த படங்கள் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. நீதானே என் பொன்வசந்தம், இசைக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ராஜா சொதப்பிவிட்டார் என்றே தோன்றுகிறது. துப்பாக்கி, OKOK, மனம் கொத்திப் பறவை  எல்லாம் வழக்கமான புளித்த மாவுதான்.

ரசித்த கவிதை

விரல் பூக்கள் 

நான் கோபப்படும்போது
தன் விரல்களைக் குவித்தும்
நான் சிரிக்கும்போது
விரல்களை விரித்தும்
என் உணர்வுகளைப்
பூக்களாக்குகிறாள்
அந்தக் குழந்தை.
தடித்த வார்த்தைகளைப்
பிரயோகிக்கும்போது மட்டும்
நடுங்குகின்றன
அவள் விரல் பூக்கள்
வார்த்தைகளற்று.------------------------அருணாசல சிவா.

நகைச்சுவை 18+

அவனும் அவளும் அந்த பூங்காவின் மதில் சுவர் அருகே இருக்கும் மரத்தினடியில் ஒதுங்கினார்கள் . அவள் அவனிடம் "என்னுடைய இதயத்துடிப்பு தாறுமாறா எகுறனும் சீக்கிரம் ஏதாவது செய்" என்றாள்.

அவன்: "அப்படியா அதோ உன் புருஷன் வருகிறான், அப்படியே இந்த சுவர் ஏறி குதித்து ஓடு".


ஜொள்ளு  



28/12/2012


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

rajamelaiyur said...

நகைசுவையை பொருத்தவரை ஓகே ஓகே , கலகலப்பு நன்றாக இருந்தது ...

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

semmalai akash said...

ம்ம்ம் நீங்க ரசித்தவற்றை எழுதிவிட்டிங்க அருமை, எனக்கு பீட்சா பிடிக்கவில்லை. காரணமும் தெரியவில்லை.

மற்றபடி எல்லாம் ஓகே.

கும்மாச்சி said...

ஆகாஷ் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா.வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.