Monday 11 March 2013

கலக்கல் காக்டெயில்-105

நாளை டெசோ பந்த்

தமிழினத்தலைவர் நாளை தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக முழு நாள் பந்த் அறிவித்திருக்கிறார். கலைஞரின் தொப்புள் கொடி பாசத்தை, அப்பப்போ கையில் எடுக்க எதுவும் இல்லையென்றால் "ஈழ பாசத்தை" டெசோ  மூலம் கையில் எடுத்து பிலிம் காட்டுவார். அவர் விடுத்த அழைப்பில் மத்திய அரசை தொடர் வண்டிகளைக் கூட  நிறுத்த சொல்லியிருக்கிறார். ஏன் முடிந்தால் விமான சேவைகளைக் கூட நிறுத்த வேண்டும் என்கிறார். (ஸ்ஸ்ஸ்...அப்பா முடியல!!!)

ஆனால் அரசோ நாளை பேருந்துகளை ஓட்ட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. ஆக இவர்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரிகிறது. 

சமீபத்தில் நான் படித்த  இது சம்பந்தப்பட்ட இடுகை ஏறக்குறைய நம்முடைய எண்ணங்களையே பிரதிபலிக்கிறது.

இடுகையை படிக்க

பா.ஜ.க வுக்கு சாவுமணி
 
கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்  மரண அடி வாங்கிய பாஜக; காங் மாபெரும் வெற்றி! இது எதிர்பார்த்த ஒன்று தான். தென்னகத்தில் பா.ஜ.க முதலில் ஆட்சியைக் கைப்பற்றிய இடம் கர்நாடகாத்தான். இதை வைத்து படிப்படியாக தென்னகத்தில் வேரூன்றலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் இன்னும் இருநூறு வருடமானாலும் முடியாது என்பது வேறு விஷயம். 

ஆனால் கர்நாடகாவில் கிடைத்த ஆட்சியை உள்கட்சி பூசல்களாலும், எடியூரப்பாவின் குளறுபடியினாலும் கிடைத்த ஆட்சியை  குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் ஆக்கிவிட்டது.

காங்கிரசுக்கு லாபம்தான். இததான் நோவாம  நோம்பு கும்புடறதுன்னு சொல்லுவாங்க.

ரசித்த கவிதை 

தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?
 
..................................நன்றி: கவிதன் 

நகைச்சுவை

மனைவி - எதுக்கு அடிக்கடி என் முகத்தில் தண்ணி தெளிக்கிறீங்க

கணவர் - உங்க அப்பா உன்னை 'பூ' மாதிரி பார்த்துக்க சொன்னார்ல அதான்...!
 
ஆட்டோ வாசகம் 

டாப் அப் போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பும் நண்பனை நம்பு ஆனால் மேக்கப் போட்டு மிஸ்ட் கால் கொடுக்கும் பெண்ணை நம்பாதே..! ...
 
ஜொள்ளு


11/03/2013

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதையும் ஆட்டோ வாசகமும் அருமை...

அருணா செல்வம் said...

தாயின் துடிப்பு“ கவிதை அருமை.

அரசியலைப்பற்றி.....?!!!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

இனிக்கின்ற வண்ணம் எழுத்துக்கள்! ஆறாய்
நனைக்கின்ற ஆக்கங்கள் நன்று!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாரதிதாசன் ஐயா.

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

ஆட்டோ வாசகம் சூப்பரோசூப்பர் கர்நாடக அரசியல் பற்றிசொன்னது உண்மை தான்

கும்மாச்சி said...

சங்கர் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சுவையான காக்டெயில்! நேற்று வர இயலவில்லை! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.