Monday 17 June 2013

குழந்தையாகவே இருந்திருக்கலாம்..........

இந்தவார ரசித்த கீச்சுகள்

உன்னோடு என்னை உன் தந்தை நோக்குற்றால் வாய்ச்சொற்கள் எந்த பயனும் இல்லை........................

எப்படியோ தாத்தாவுக்கும் பேரனுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுவிடுகிறது, ஒருவேளை இருவருக்குமே ஒரே எதிரி என்பதாலோ?

மழைக்கால இரவுகளில் இது ஒரு தொல்லை, குழந்தையாக இருந்தாலாவது படுக்கையிலேயே போயிருக்கலாம்.

மெல்லமாகத்தான் கடித்தாய், ஏன் வந்தது காய்ச்சல்?#டெங்கூ------------- வெ. பெத்துசாமி

போதைக்கு குடிச்சவன் ஒழுங்கா வீட்டுக்கு போயிடுறான், வீம்புக்கு குடிச்சவன்தான் ரோட்ல உருளுறான்------------ட்விட்டர் MGR.

நாம முன்னுக்கு வரனும்னா அப்புறம் நாயேன்ன? மனுசனென்ன? ஏறி மிதிச்சு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்---------------அறுந்தவாலு.

சம்பந்தமில்லாமல் ஒரு அழகான பெண் நம்மை பார்க்கிறார் என்றால், முதலில் நாம் பேன்ட் ஜிப் போட்டிருக்கோமாவென பார்க்க வேண்டும்.-----------சின்னா

செஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி.

செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.............வெற்றியர்.

கேட்பார்க்கு மறுத்தும் கேளாதார்க்கு நிறைத்தும் கருணை செய்யும் கடவுளே, வா! நல்ல ENT மருத்துவரிடம் போகலாம்! காலை வணக்கம்!.........ஜிரா.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு கண்டிக்கத்தக்கது :தா.பா. # அப்படியே சுனாமில இறந்தவங்களுக்கு இரங்கல தெரிவிச்சிடுங்க தோழரே...ட்விட்டர் பவன்

பசிக்குது சாப்பிட பிடிக்கல,எந்த பாட்டு கேட்டாலும் காதுல தேன் வந்து பாயறாப்புல இருக்கு,வேலை இருக்கு வேலை பாக்க பிடிக்கல! இதுதான் கொழுப்பா?!...............ஆர்த்தி

கீச்சர்களுக்கு நன்றி

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கீச்சர்ஸ்... Special - ENT..!

ராஜி said...


எப்படியோ தாத்தாவுக்கும் பேரனுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுவிடுகிறது, ஒருவேளை இருவருக்குமே ஒரே எதிரி என்பதாலோ?
>>>
செம கலக்கல் எப்படித்தான் இப்படி சிந்திக்குறங்களோ!

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

K said...

ஆல் கீச்சர்ஸ் ஆர் அசத்தல் அண்ணே!!!

செஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி. ///

ஹ ஹா ஹா

கும்மாச்சி said...

மணி வருகைக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

செம கலக்கல்

கும்மாச்சி said...

கருண் வருகைக்கு நன்றி.

குட்டன்ஜி said...

செம!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன் .

reverienreality said...

செஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது.//

ரசித்தேன்..

”தளிர் சுரேஷ்” said...

கிச்சு கிச்சு மூட்டிய டிவிட்டுகள்! அருமை! பகிர்வுக்குநன்றி!

mage said...

pant zip Arumai, room pottu yosipeengala

Jayadev Das said...


செஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி.\\ROFL

செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.............வெற்றியர்.\\ tRUE

Advocate P.R.Jayarajan said...

எல்லாம் இதம்...

குறிப்பாக .....

//மழைக்கால இரவுகளில் இது ஒரு தொல்லை, குழந்தையாக இருந்தாலாவது படுக்கையிலேயே போயிருக்கலாம்.//
குழந்தையா இருந்தா இப்படி சில சௌகரியம் உண்டு. இருந்தாலும் இதற்கு நிறைய வேறுவித விளக்கம் சொல்லலாம்.

//நாம முன்னுக்கு வரனும்னா அப்புறம் நாயேன்ன? மனுசனென்ன? ஏறி மிதிச்சு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்---------------அறுந்தவாலு.//
இது சென்னை போன்ற பெரு நகரங்களில் வெகு சாதரணமாக நடக்கின்றது.....

//செஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்.. ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி.//
ஆனா ராஜா முடிஞ்சாதான் ஆட்டம் முடியும். ஆனாலும் ராணி முடிசிட்டவுடனே கிட்டத்தட்ட ராஜாவும் முடிஞ்ச மாதிரிதான். வேனும்மின்ன ஒரு சிப்பாய இன்னொரு ராணியா மாத்த முயற்சி செய்யலாம், அதுவும் முடிஞ்சாத்தான்.

//சம்பந்தமில்லாமல் ஒரு அழகான பெண் நம்மை பார்க்கிறார் என்றால், முதலில் நாம் பேன்ட் ஜிப் போட்டிருக்கோமாவென பார்க்க வேண்டும்.-----------சின்னா//
அப்போ சம்பந்தம் இல்லாத பெண்கள் முதலில் அங்குதான் பார்ப்பார்கள் என்றாகி விடுமே..?

//செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.............வெற்றியர்.//
இது நிஜம் சார்...

//கேட்பார்க்கு மறுத்தும் கேளாதார்க்கு நிறைத்தும் கருணை செய்யும் கடவுளே, வா! நல்ல ENT மருத்துவரிடம் போகலாம்! காலை வணக்கம்!.........ஜிரா.//
இது சரியான கலக்கல்....

Thanks for the post sir...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.