Tuesday 18 June 2013

சென்னை தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததும் அதற்காக "தங்களையே சொறிந்துகொண்ட" மாநாடு நடத்தப்பட்டதும், அதனால் ஒரு சில பல அல்லக்கைகள் காசு பார்த்ததும் வரலாறு.

அதன் பின்னர் அடுத்து வந்த இரண்டு வருடங்களில் தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. பின்னர் இந்த வருடம் மலையாள மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. செம்மொழி அந்தஸ்து கிடைப்பதானால் யாருக்கு லாபம், மொழிக்கு லாபமா நஷ்டமா, தமிழ் இனி வேகமாக வளருமா? இல்லை மெல்ல தமிழ் இனி சாகுமா? என்ற விவாதங்களை ஒரு புறம் ஒதுக்கிவிடுவோம். இல்லை ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இரண்டாயிரம் வருடம் பழையதாக இருக்க வேண்டும், தனித்து இயங்க வேண்டும், அருஞ்சொற்பொருள்கள் தனித்து இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளோ, இல்லை இன்ன பிற விதிமுறைகளோ இருப்பதாக கூறிக்கொள்கிறார்கள் அதைப் பற்றியும் விவாதிக்க வேண்டாம். ஆனால் மத்திய அரசு இதற்கென்று ஒரு கமிட்டி வைத்து அதற்கு ஒரு தலைவரையும் வைத்து சில விதிமுறைகளின் அடிப்படையில் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்படுவதாக கூறுகிறது. அதன் அடிப்படையில் மொழி வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்படும். தற்பொழுது குஜராத், அஸ்ஸாம், பிகார் போன்ற மாநிலங்களிலிருந்தும் தங்களது மொழியை செம்மொழியாக்க விண்ணப்பம் வந்திருக்கிறதாம். அடுத்த பிரதமர் எங்கிருந்து வருகிறாரோ அதற்கேற்ப அந்த மாநில மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கும் அபாயம் உள்ளது.

அந்த வகையில் நம் சென்னை தமிழிற்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க எல்லா தகுதிகளும் உள்ளன. தமிழ் மொழி கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றி மூத்தகுடியாக இருக்கும்பொழுது சென்னை தமிழும் அந்த கால கட்டத்திலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை.

சென்னை தமிழ் இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைக்கும் ஈடு கொடுக்கும் சொல்வளமிக்கது.

நைனா, கய்தே, கசுமாலம், மெர்சல், பயம், வூடு, இட்டாந்து, புட்டுகினு, ரவைக்கி, நாஸ்தா என்று தொடங்கி
 (முன்பு எழதிய பதிவி ல்சுட்டு) 
நிஜாரு, உஜாரு,பேஜாரு,
டப்சா, கப்சா, டேக்ஸா,
இப்பால, அப்பால, எப்பால,
இந்தாண்ட, எந்தாண்ட, அந்தாண்ட,
என்னாண்ட, உன்னாண்ட, அவனாண்ட,
இட்டுகின்னு, இஸ்துக்கின்னு, பிட்ச்சிக்கின்னு,
ஆயா, பாயா, சாயா,
நைனா, மைனா, சைனா,
தொத்தா, ஆத்தா, ஒ....தா,
டவுசரு, ரப்சரு, டோமரு,
எடக்கு, மடக்கு, குடாக்கு,
கானா, வேணா, பானா,
பாட்லோடு, சீமோடு, கருவாடு,
பன்னு, மென்னு, துன்னு,
தர்பூசு, கக்கூசு,
குச்சைசு, மாங்கபெத்தை,
தேங்காபெத்தை,கம்மருகட்டு,
முட்டாயி, மூசுண்டை,
ஏத்து, ஒத்து, சூ.......,
பன்னி, சு.........,
தமாசு, மெட்ராசு,
மேட்டரு, க்வாட்டரு,
அவுசலு, மேர்சலு,
அகிலு, பிகிலு, செவுலு,
அதல், பதல்,
எங்காத்தா, மங்காத்தா, போடங்கோ.......
ஒன்னுக்கு, ரெண்டுக்கு,
மஞ்சா சோறு, சொண்டி சோறு,
அன்றாயறு, சரக்கு, சப்ப,
மப்பு, கப்பு,
மேல, கீய, எயுந்து, உயுந்து,
லுச்சா, பிசுகோத்து, உஸ்கோலு,
ஏறா, சொறா, பொறை,
வடகறி, கேப்மாரி, சோமாறி,
ஜாதி, மீதி, கூ...
ஆளு, தேளு, பூ...
மயிறு, கொசுறு,
டிக்க்கிட்டு, பக்கிட்டு,
ஏஜென்டு, ரீஜண்டு,
லிங்கி, சொங்கி,
ஒரு தபா, ரெண்டுதபா, தபா தபா,
கொயம்பு, சொம்பு, ஊ....பு,
எக்கா, சொக்கா, நாஸ்தா,
சால்னா, இடியாப்பம், இட்லி, வடகறி.


மேலே உள்ள சொற்றொடர்களை வேகமாக சொல்லிப்பாருங்கள் உங்களுக்குள் க்வாட்டர் அடித்த உற்சாகம் வரவில்லை என்றால் சென்னை தமிழிற்கு செம்மொழி அந்தஸ்து வேண்டாம். மேலும் சென்னை தமிழின் சொல்வளம் தக்காளி எந்த மொழிக்கும் இல்லை என்பதை மாங்கொல்லை அம்மன் மீது சூடம் கொளுத்தி சத்தியம் செய்கிறேன்.

இவையெல்லாம் கருத்தில் கொண்டு கோடுகளில் தொங்கிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை உடைய இந்தி, குஜராத்தி போன்ற மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பதற்கு முன் அந்தரிலே பல்டி அடிக்கும் சென்னை செந்தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்து மேலும் அந்த மொழியை மேலும் வளம் பெற செய்ய ஒரு ஐயாயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு கமிட்டியை கேட்டுக்கொள்கிறேன்.

(தலிவன் பேரு இன்னான்னு கேட்டு சொல்லுபா, நாங்க கேட்டதகண்டி மவனே தர்லே, அவனுக்கு சங்குதான்)

Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

கும்மாச்சி said...

எஸ்ரா வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நீங்க கலக்குங்க...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

சூப்பர்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

K said...

அண்ணே, சூப்பரா எழுதி கீங்க - உங்க பதிவு படிக்க குஜாலா கீது :)

செம்மொலி கெடைச்சிடும் சீக்கிரம் :)))))

கும்மாச்சி said...

மணி வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

இதை கத்துகிட்டா சென்னைவாசியாவே ஆயிடலாம் போலிருக்கே!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஜெயதேவ்.

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணா... நீங்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்த்தால்... கூடிய சீக்கிரம் கிடைத்திடும்ன்னு தான் நினைக்கிறேன்.

சென்னை டமில் வாள்க. வாள்க...!!

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

ராஜி said...

உங்களுக்குள் க்வாட்டர் அடித்த உற்சாகம் வரவில்லை
>>
நம்மாளுங்க குவார்ட்ட்ர் லிமிட்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சு..,

Advocate P.R.Jayarajan said...

ரொம்போ கரிக்க்ட்டா சொன்னேபா !

கும்மாச்சி said...

ஜெயராமன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.