Monday 14 October 2013

பாய்லின் பறந்துட்டா, ஹெலன் எப்போ வருவா?

ஓடிஸாவில் கோபால்பூரை தாக்கிய பாய்லின் புயல் மிகக்குறைந்த உயிர் சேதத்துடன் கரையைக்கடந்தது. இந்த முறை மாநில அரசாங்கம் மிக சிறந்த முறையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டது.


ஓடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆர்ப்பாட்டமின்றி கிட்டதட்ட ஆறு லட்சம் மக்களை கடலோரப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை தடுத்துள்ளார். பேரிடர் மேலாண்மை குழுவும் இந்திய ராணுவமும் மாநில அரசுடன் இணைந்து இந்தக்காரியத்தை மிக அழகாக செய்துள்ளனர்.

மேலும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மிகவும் சரியாக இந்தப்புயலை கணித்து மாநில அரசுகளை உஷார் படுத்தியது. அமெரிக்க வானிலை மையம் இந்தியாவின் கணிப்பு தவறு, இது காத்ரீனா புயலைவிட சக்தி வாய்ந்தது என்று குறை கூறி வந்தது. ஆனால் இந்தியா மிகவும் துல்லியமாக கணித்ததை நினைத்து நாம் பெருமை படவேண்டும். 1999 ல் ஓடிசாவை தாக்கிய சூப்பர் புயலில் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் பேர் உயிரிழந்தனர். இம்முறை அத்தகைய உயிர்சேதம் ஏற்படவில்லை எனபது போன புயலில் கற்றுக்கொண்ட படிப்பினை.

துண்டிக்கப்பட்ட மின்விநியோகம் மிகவும் குறைந்த நேரத்தில் சரி செய்யப்பட்டுவிட்டது. தானே புயலில் மின்வெட்டை கண்ட கடலூரில் இயல்பு வாழ்க்கை திரும்ப வர எத்தனை மாதங்கள் ஆனது என்பது நமக்கு சற்று உறுத்தவே செய்கிறது.

தந்தி தொலைக்கட்சியில் அன்று புயல் பற்றிய செய்தி தொகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. இந்த புயல்களுக்கு பெயர் வைப்பதை பற்றிய செய்தி தொகுப்பு நமது சந்தேகங்களுக்கு விடையளிப்பதாக இருந்தது.

இந்திய பெருங்கடல் வங்காள விரிகுடா கடல்களில் உண்டாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பனி இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திடம் உள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஓமன், மியான்மர், மாலத்தீவு, தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒரு நாட்டிற்கு எட்டு பெயர்வீதம் அறுபத்தினாலு பெயர்களை வெளியிட்டுள்ளது. அந்த பெயர்கள் சுழற்ச்சி அடிப்படையில் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடாவில் உருவாகும்  புயல்களுக்கு சூட்டப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வந்த புயலுக்கு தாய்லாந்து அளித்த பெயரான "பாயலின்" என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நடைமுறை 2004 ல் இருந்து அமுலுக்கு வந்தது.

இந்திய கொடுத்த எட்டுப்பெயர்கள் முறையே அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லேஹர், மேக்ஹ், சாகர், வாயு.

அடுத்த வரும் புயலுக்கு வங்கதேசம் அளித்த பெயரான "ஹெலன்" என்று அழைக்கப்பட இருக்கிறது.

அடுத்து "ஹெலன்" எப்போ வருவாளோ? எங்கு வருவாளோ?

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த முறை சிறப்பாக முன்னேற்பாடுகள் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல... பாராட்டுக்கள்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம்
திட்டமிடல் சரியாக உள்ளதால் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்
பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

முன்னேற்பாடோடு நடந்துக்கிட்ட அரசாங்கத்துக்கு பாராட்டுகள்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Unknown said...

அந்த கால கவர்ச்சிக் கன்னி ஹெலனை ரசிக்கலாம் ,ஹெலன் புயலுக்கு எப்படி வெற்றிலைப் பாக்கு வைக்க முடியும் ?
த.ம 4

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

ஹெலென் இந்தியாவிற்கு வரவேண்டாம்!

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.