Friday 4 October 2013

ஊழல் என்பார் ஒழிப்பேன் என்பார்.......

ஊழல் என்பார்
ஒழிப்பேன் என்பார்
வாழும் கடவுள் என்பார்
பாழும் பாரதத்தில்
ஏழ்மை இல்லையென்பார்
எங்கும் அமைதி என்பார்
தாழ்வு நிலைகளை
தனியே வைத்திடுவார்
போதை தரும் மருந்தை
பொதுவிலே வைத்திடுவார்
தாகம் தீர்க்கும்
குடிநீரை விற்றிடுவார்
தேர்தல் வந்திடினிலே
"ஒட்டு"க்கு விலைவைப்பார்
கூழைக் கும்பிடும் கூடவே
கூட்டி வருவார்
கேளிக்கை பொருட்களெல்லாம்
விலையில்லா பரிசென்பார்
நீதியை வளைத்திடுவார்
நேர்மையை புதைத்திடுவார்
ஜாதிகள் இல்லை என்று
வீதிகளில் முழங்கிடுவார்
வாக்கு வங்கிகளில்
ஜாதிகளை அடைத்திடுவார்
எதிலும் புரட்சி என்பார்
எளிமையான ஆட்சி என்பார்
கூட்டணி வைத்திடுவார்
கோடிகளில் கொழித்திடுவார்
நாட்டு வளங்களை எல்லாம்
நாம் வாட சுரண்டிடுவார்
இமயம் முதல் குமரி வரை
எங்கும் நிறைந்திருப்பார்
எங்கள் வளம் பெருக்க
நாங்கள் தேர்ந்தெடுத்த
ஏழைப் பங்காளர்கள். 


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மை வரிகள்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Anonymous said...

நெற்றியடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். கும்மாச்சி அடி என்பது இது தானோ ?

Anonymous said...

நெற்றியடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். கும்மாச்சி அடி என்பது இது தானோ ?

கும்மாச்சி said...

ஜென்டில்மேன் வருகைக்கு நன்றி.

Indian said...

Well said!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.