Monday 21 October 2013

அடங்கா இடுப்பழகி........நடுங்கா நாக்கழகி

அம்மாவும் ஐயாவும் தேர்தல் நேரத்தில் தங்கள் அறிக்கைப் போரை தொடங்கிவிட்டார்கள்.சமீபத்தில் ஐயா அம்மாவை எதிர்த்து விட்ட பதிலறிக்கை இது. தொடக்கத்திலேயே நடுங்கா நாக்கழகி என்று வசைகளுடன் ஆரம்பித்து விட்டார். இரண்டு கட்சித்தளைவர்களுக்கும் வயது அறுபதுக்கு மேலாகிறது. வாழ்க்கையில் நிதானமும், வார்த்தைகளில் அடக்கமும் வருகிற வயசு. அந்த அடக்கத்தை இருவரிடமும் எதிர்பார்த்தால் வீண்.

இது ஐயாவின் அறிக்கை.

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு "நடுங்கா நாக்கழகி" என்று பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது. 
என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்!
மேலே இருப்பது அந்த அறிக்கையின் தொடக்கம்

பதிலுக்கு அம்மா ஒரு அறிக்கை விடுவார். அதில் கோபம் கொப்பளிக்கும்.
கலீனறு மேலும் ஒரு அறிக்கை தயார் செய்ய பின் வரும் பட்டப்பெயர்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

கோடி வீட்டு கோமளவல்லி.
அடங்கா இடுப்பழகி.
நடுத்தெரு நர்த்தகி.
கொடநாட்டு குந்தாணி.
பையநூர் பத்திரக்காளி
போயஸ் தொட்டது பெருச்சாளி 
வாய்தா வடிவுக்கரசி 
ஊழல் ஊர்மிளா 
சட்டசபை சர்வாதிகாரி

இது போன்று இன்னும் பல வசை பெயர்கள் ஸ்டாக்கில் உள்ளன.

ஆனால் தலீவரே இதையெல்லாம் உபயோகப்படுத்த நள்ளிரவு கைதுக்கு தயாராக இருக்கவேண்டும்.அ,ஆ,இ.ஈ............எல்லாம் இன்னும் ஒரு முறை  சொல்லிப் பார்த்துக்கோங்க.
போன முறை வெட்கத்த விட்டு சொன்னீங்க அண்ட்ராயர் கூட போடவில்லை என்று.
இந்த முறை பட்டா பட்டி போட்டுக்கோங்க, இல்ல அரை வேட்டியை அவுத்துடுங்க, மறுபடியும் வெட்கத்த விட்டு அறிக்கை விட ஏதுவாக இருக்கும்.  
அம்மா பதிலறிக்கை வந்தவுடன் அம்மாவிற்கு ஐயா மேல் பாய வசவுகள் இலவசமாக தயாரித்து அனுப்பப்படும்.
.

Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... இனிமேல் தான் ஆரம்பம்...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

இந்த காமெடி ஃபீசுங்களாஇ இன்னுமா வாட்ச் பண்ணுறீங்க!?

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

mage said...

Reminds me of the speech of
Radha Ravi in an election meeting, oorlendhu varumbodhu underwear pottu erundhaya.

Unknown said...

எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க ...வாசல்லே ஆட்டோ சத்தம் கேட்டா பின் வாசல் வழியா ஓட தயாரா இருங்க !
த.ம 3

அருணா செல்வம் said...

“அடங்கா இடுப்பழகி“.... ஹா ஹா ஹா
யோசித்துப் பார்த்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை.

என்னம்மா யோசிக்கிறாங்க.... ம்ம்ம்!!

கும்மாச்சி said...

மகேஷ் நன்றி.

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

பார்த்துங்க! அப்புறம் போலீஸ் உங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கப்போவுது!

Unknown said...

உங்களுடைய பதிவு தூங்கி எழுந்து போட்ட பதிவு மாதிரி இருக்கு ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ன விதைக்கிறாரோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அன்பு இரு தலைவர்களும் பேச்சிலும், அறிக்கையிலும் ஒரு கண்ணியத்தை காக்கலாம் என்பதே என் கருத்து.

மகேந்திரன் said...

நிதானமும் அடக்கமும்
அடகு வைக்கப்பட்டே
துவங்கியதுதான்
தி.மு.க.
அதன் வழித்தோன்றி
அ.தி.மு.க
எப்படி இருக்கும்...
சபை நாகரீகமும்
மேடை நாகரீகமும்
தனி மனித உணர்வுகளும்
தனிமனித ஒழுக்கமும்
அறியாத
பித்துக்..கோழிகள்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.