Monday 7 July 2014

டீ வித் முனியம்மா -----பார்ட் 13

டேய் மீச இன்னாடா உங்காளுங்க அல்லாம் ஒய்ங்கா கீறாங்க......

எண்டே முனியம்மா என்ன சோதிக்கினு?

அடப்போடா கட்டடம் மய பெய்ஞ்சு உயுந்துதே உங்காளுங்க மலயாலத்தானுங்க செத்துட்டானுங்களா பொயச்சு கிட்டானுங்களா?

ஹேய் நம்மாளுங்க குவைத்துலதான் கொளுத்து வேலைக்கு போவும், இவ்விட அல்லா.

அப்படி போடுறா அரிவாள, அதானே இங்கன டீதானே ஆத்துவீங்க...இன்னாடா சொல்லுற பயம்.

அஹான் முனியம்மா, மொக்ளிவவாகாத்துல கட்டடம் கட்ட சொல்லவே உயுந்துகிது,  கொளுத்துக்காரனுங்க அல்லாம் கொயந்தகுட்டியோட மாட்டிக்கினு கீறானுங்க.

அதாண்டா கேலு, பயர் சர்வீஸ் காரனுங்க மூணு நாலு சோறு தண்ணி இல்லாம வேலை செய்து, சில உயிருங்கல காப்பாத்திகிறானுங்க. நாலு மோப்ப நாயி இட்டாந்து தேடி நெறைய பொணத்த எத்துகிரானுங்க.

முனியம்மா இப்போ எல்லா பேட்டையிலும் புச்சு புச்சா கட்டிடம் எயுப்புரானுன்களே, அல்லாத்துக்கும் பெர்மிசனு வாங்கிருப்பானுங்க.

அதெல்லாம்  நமக்கு தெரியாது பாய், ஆனா துட்டு விளையாடுதுன்னு பேசிக்கிராய்ங்க.

அத்த வுடு, முனியம்மா அம்மா ஒரு ஆள போட்டு விசாரணை கமிசன் வச்சிருக்கீதே.

அவரு இன்னா செய்வாரு நாடார், ஓய்வு கெடச்ச பொறவு, இது மாதிரி கமிசன் போட்டு துட்டு கொடுத்து அறிக்கை கேப்பாங்க, அவரும் ஒரு முயு அறிக்கை கொடுப்பாரு,அத்த வாங்கி கூவத்தாண்ட காவால போட்டு போய்கினே இருப்பாங்க.

ஆப் கி பாரு சர்க்காரு, ன்னு கூவி கூவி ஒட்டு வாங்கினாங்க இப்போ அல்லா வெலயும் ஏத்திகினு போய்கினே இருக்காங்க.

அதெல்லாம் லிங்கம் சார் யார் வந்தாலும் அதையே தான் செஞ்சுகின்னு இருப்பாங்க.

டேய் இன்னடா லோகு கம்முனு குந்திகினு கீற.........

ஒன்னியம் இல்ல முனியம்மா, ரயிலு டிக்கட் வெலையெல்லாம் எத்திகிரானுங்க, பொஞ்சாதி வேற ஊருக்குஅம்மா வூட்டுக்கு போவனும்னுது  இன்னா செய்யுறதுன்னு பாக்குறேன்.

அடப் போடா குடாக்கு, அதுக்கு இன்னா இப்போ உன் கடையில பானு பராக்கு வச்சுகிற இல்ல அத்த வெலை ஏத்திடு, தானிக்கி தீனி சரி போயுந்தி.

முனியம்மா சினிமா நூசு இன்னா........

இன்னாடா சினிமா இப்ப படம் வருது ஒன்னியும் நல்லா இல்ல, நம்ம தலிவர் படம் மாதிரி வருமா?இல்ல அப்ப வந்த ஹீரோயினி மாதிரி வருமா? 

கண்ட பிகருங்க எல்லாம் இப்ப நடிக்குதுங்க இன்னாத்த சொல்ல.



 

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

KILLERGEE Devakottai said...

இன்னாபா, செய்யிறது ? இந்த அரசிவாதிங்கே பூராம் இப்பிடித்தேன்.

கும்மாச்சி said...

ஆமாங்க்ணா, வணக்கம்னா, வாங்கண்ணா.

வெங்கட் நாகராஜ் said...

என்னமோ போப்போ ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

கட்டிடம் இடிஞ்சப்புறம் இப்ப சொவரு இடிஞ்சிடுச்சி.... :(

கும்மாச்சி said...

வெங்கட் நாகராஜ் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களின் அறிமுகம் கிடைத்ததறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

சிகரம் பாரதி said...

எனது தொடர்பு விபரங்கள் : http://newsigaram.blogspot.com/p/blog-page.html#.U7yGG7G8Nl4

Bavyakutty said...

அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

Happy Friendship Day 2014 Images

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.