Monday 14 July 2014

கலக்கல் காக்டெயில்-150

நிதிநிலை அறிக்கையும் நித்திரையும்

நாட்டின் நிதிநிலை அறிக்கை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இளவரசர் என்று எதிர்கட்சிகளால் அழைக்கப்பட்ட ராகுல் காந்தி ஆழ்ந்த நித்திரையில் இருந்ததாக செய்திகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தூங்குவது இந்திய ஜனநாயகத்திற்கு  ஒன்றும் புதிதல்ல. நரசிம்மராவ், தேவேகௌடா,  மன்மோகன் சிங்க், மற்றும் லாலு பிரசாத் போன்றவர்கள் தூங்கிவழிந்ததை நாடே அறியும்.

கர்நாடகாவில் சட்டசபையில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆபாச படங்களை அலைபேசியில் பார்த்துக்கொண்டிருந்த மூன்று சட்டசபை உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!! பாய்ந்தது நியாபகம் இருக்கலாம்.

தூங்குங்க நல்லா தூங்குங்க இல்லை ஆபாச விடியோ பாருங்க.

நிதிநிலை அறிக்கைபற்றி உங்களுக்கு என்ன கவலை? இல்லை நாட்டின் வளர்ச்சி பற்றிதான் என்ன கவலை?

உங்க சம்பளத்துல கைவைச்சா? முழிச்சிகிட்டு கொரலு விடுங்கப்பு. ஏன் என்றால் நாட்டில் பலபேரு நீங்க வாங்குற சம்பளம், மற்றும் லொட்டு லொசுக்கு அலவன்ஸ் என்று வரிகட்டா சலுகைகள் மீது காண்டா இருக்கானுவ?

வரி எல்லாம் மாத சம்பளம் வாங்கும் அன்றாடங்காய்ச்சிகளுக்குதான். உங்களுக்கு என்ன? நீங்கள் எல்லாம் காய்ச்சுவதே வேற...........

தூங்குங்க எசமான் நல்லா தூங்குங்க.

வலைச்சரம்

கடந்த  வாரம் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்வாசி பிரகாஷ் பொறுப்பேற்பதற்கு இரண்டு நாள் முன்பு செய்தி அனுப்பியிருந்தார், குறைந்த அவகாசம்தான் உள்ளது முடியுமா? என்று கேட்டார். செய்கிறேன் என்று தொடங்கினேன். கிட்டதட்ட இருபத்தி ஒன்பது பதிவர்களை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.

எல்லா பதிவர்களையுமே விரும்பி படிப்பதாலும், அவர்களது சில குறிப்பிட்ட இடுகைகளை நியாபகம் வைத்துக்கொண்டிருந்ததாலும் அவற்றை தேடிக்கண்டு பிடித்து சுட்டி கொடுக்க முடிந்தது. இருந்தாலும் சில பேரினுடைய எனக்குப் பிடித்த இடுகைகளை தேடிக்கண்டு பிடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு சேட்டை அவர்கள் பேல்பூரி பற்றி ஒரு பதிவு எழுதியிருப்பார், நல்ல நகைச்சுவை பதிவு, மேலும் பார்த்தசாரதி கோயிலில் நண்பருடன் சேர்ந்து மொட்டை போட்டதை பற்றிய ஒரு பதிவு இரண்டையும் கண்டு பிடிக்க முடியவில்லை, ஒரு வேளை அவர் வெளியிட்ட புத்தகத்தில் சேர்த்திருந்தால் இடுகையை எடுத்திருக்கலாம்.

இருந்தாலும் பதிவர்களை அறிமுகப்படுத்துவது அவர்களது சில இடுகைகளை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சவாலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த  வாய்ப்பளித்த வலைச்சர ஆசிரியர் குழுமத்திற்கு நன்றி.

சட்டசபையில் பெஞ்சு தட்டும் அவலம்

தமிழ்நாட்டில் சட்டசபை மீண்டும் கூடியது --- இது செய்தி.

அதை தொடர்ந்து நாம் எதிர்பார்த்தபடி மற்ற கட்சிகள் வெளிநடப்பு, சட்டசபை வாயிலில் தொலைக்காட்சிக்கு பேட்டி என்று வழக்கமான செய்திகள் அந்தந்த கட்சி தொலைக்காட்சிகளில் ஓடும்.

எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு ரத்தத்தின் ரத்தங்கள் அம்மா புகழ்பாடி, எல்லா அணைகளையும் திறந்துவிட்ட அம்மா கருணை உள்ளத்தை மெச்சி சொம்பு தூக்கி பெஞ்சு தட்டுகின்ற வைபவம் இனிதே நடக்கின்றது.

எப்படியும் அடுத்த கூட்டத்தொடருக்கு முன் ஒரு அல்லக்கை சட்டசபை பெஞ்சுகள் மாற்றும் காண்டிராக்டு எடுக்காம விடமாட்டாக  போல....

டேய் நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க............

ரசித்த கவிதை

கொடுமையிலும் கொடுமை இது தான்.


ஊன்  உடலே சோர்ந்தாலும்
உள்ளம்  தளர்ந்து போனாலும்
நான்  வருவேன் உனக்காக
நெஞ்சில்  நிறைந்த தேவதையே!!

வான்பரப்பில் நிலவைப் போல்
வந்துதிக்கும்  உன் நினைப்பால்
தேன் சுரக்குது சிந்தைக்குள்
தித்திக்கும்  செம் பூவே !!.....

காத்திருந்து வாடாதே
கண்மணியே தேடாதே
பூத்த   விழி  தாங்காதே
புண்பட்டால் மனமும் தூங்காதே..

நேத்து வரை எமக்காக 
நெடுந்   துயர்கள் கடந்தவளே
ஊத்தெடுக்கும் நன்நீரைப் போல்
ஓடி வருவேன் கலங்காதே ....

தூரத்தில் இருந்தாலும் 
தொல்லை பல இங்கு நேர்ந்தாலும் 
நேரத்தைப் பார்த்தபடி 
நெஞ்சுருகி நானிருப்பேன் 

காலத்தின் கொடுமையினால் 
கடல் கடந்து சென்று விட்டீர் 
ஆழத்தை அறிவார்  எவர் தான்
அர்த்தமற்ற வாழ்வில் இன்று!! 

தாயோடு மகளும் இல்லைத் 
தந்தையோடு தாயும் இல்லை 
நாடோடியானோம் இன்று இந்த 
நரகத்தை என்ன சொல்வேன் !!

--------------------------------------------அம்பாளடியாள் 

ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

ராஜி said...

பெஞ்சுத் தட்டுற அவலத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக்கத்தான் வேணும்.

கும்மாச்சி said...

இரண்டு வருடத்தோட முடிந்தால் சரி.

வருகைக்கு நன்றி ராஜி.

விசு said...

என்னை பொறுத்தவரையில் பார்லிமெண்டில் உள்ள அனைவரும் விழித்து இருந்து பண்ணும் அட்டூல்லியத்தை விட இவ்வாறாக தூங்கினார்கள் என்றால் நம் நாடு முன்னேற வாய்ப்புகள் உண்டு.

ராஜி said...

புலம் பெயர்ந்தவர்களின் சோகம் அம்பாளடியாள் அக்காவின் கவிதையில் நிரம்பி இருக்கு.

கும்மாச்சி said...

உண்மை விசு.

வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

என்ன செய்வது அவர்கள் சுகவாசிகள்! நம் பணத்தை உண்டு கொழுத்து தூங்குவார்கள்! கைதட்டுவார்கள்! கவிதை அருமை! உங்களின் வலைச்சர பதிவுகள் அனைத்தும் அருமை! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ போங்க...!

'பரிவை' சே.குமார் said...

கலந்து கொடுத்த பகிர்வு அருமை சகோ.

அருணா செல்வம் said...

துர்ங்கட்டும்....

கவிதை அருமை கும்மாச்சி அண்ணா.

Avargal Unmaigal said...

என்ன கும்மாச்சி சார் உங்க பதிவை பார்த்த பல பேருக்கு நீங்க போட்ட பெண்ணின் படம் கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது அவரை கண்டு பொறாமையா தெரியவில்லை... அதைப் பற்றி கமெண்ட் ஏதும் போடாமல் சென்று இருக்கிறார்கள்.

ஒரு வேளை அந்த பெண் இந்த பதிவை வந்து பார்க்கும் போது யாரும் நம்மை அழகை பாரட்டவில்லையே என்று நினைத்து மனம் வருந்துவார்கள் என்பதால் அவர்களைப் பற்றி 2வரிகளாவது சொல்லிச் செல்லுகிறேன்

சேலை கட்டி
மத்திய பிரேதேசத்தை காட்டி
மதுரைத்தமிழனை
கவர்ந்து இழுக்கும் பெண்ணேஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கும்மாச்சி இப்பதான் பூரிக்கட்டை தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது மீதியை அப்புறமா வந்து சொல்லுகிறேன்

கும்மாச்சி said...

தனபாலன், குமார், அருணா, மதுரைதமிழன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.