Wednesday 16 July 2014

வேட்டியும் வெட்டி கலாச்சாரமும்.

இன்று தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சினை "ஏதோ ஒரு சரக்கடிக்கும் க்ளப்பில் வேட்டி கட்டிய நீதிபதியை உள்ளே விடவில்லையாம்". ஆதலால் நமது கலாச்சார காவலர்களும், பகுத்தறிவு பகலவன்களும் இதுதாண்டா சாக்கு என்று தன்மானம், கலாச்சாரம் மற்றும் பகுத்தறிவு என்ற மசாலாக்களை தூவி வடகறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னையில் நிறைய கிளப்புகள் உள்ளன, பெரும்பாலான கிளப்புகளில் "dress code" என்று சொல்லுகிற உடை கட்டுப்பாடு உண்டு. இது கிளப்பின் எல்லா இடங்களிலும் அல்ல, ஒரு சில இடங்களில்தான். உதாரணமாக விளையாட்டு இடங்களில் அரை ட்ரவுசரோ அல்லது டிரேக் சூட் போட்டுக்கொண்டு செல்லலாம். ஆனால் சரக்கடிக்கும் இடங்களில் பேன்ட், சட்டை அல்லது காலர் வைத்த டி ஷர்டுகள் அணிந்துதான் வரவேண்டும். இதற்கான காரணம் என்ன என்று தெரியாது.

ஆதலால் சில பேர் விளையாடி முடித்தவுடன் மேற்கூறிய உடைகளை அணிந்து கொண்டுதான் சரக்கடிக்க வருவார்கள். இந்த கிளப்புகளில் உறுப்பினராகும் படிவத்திலேயே மேற்கூறிய சட்ட திட்டங்களை கூறி கையொப்பம் வாங்கிய பின்தான் உறுப்பினர் அட்டையே கொடுப்பார்கள்.

அதேபோல க்ளப்பில் இருக்கும் உணவு விடுதிகளில் குடும்பங்கள் வரும் இடத்தில் சரக்கடிக்க அனுமதியில்லை. அங்கு வரும் குடும்ப  ஆண்கள் வேட்டி அணிந்து வரலாம்.

ஒவ்வொரு கிளப்பிலும் ஒவ்வொரு விதிகள் உள்ளன. கேரளாவில் நட்சத்திர ஓட்டல் பார்களில் வேட்டி அணிந்து வரலாம். ஏனென்றால் கேரளாவில் பெரும்பாலோனோர் வேட்டி அணிந்துதான் வெளியே வருவர். மேலும் அலுவலகங்களிலும் வேட்டிக்கு அனுமதி உண்டு. அதே கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ளே நுழைய பேன்ட் சட்டை ஷூ மிக முக்கியம்.

ஏன் தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பெரும்பாலான கிளப்புகளில் வேட்டி அணிந்து சரக்கடிக்கலாம், யாரும் உருவிவிட மாட்டார்கள்.

சென்னையில் நடந்த ஒரு சாதாரண நிகழ்வை அரசியலாக்கி சட்டசபையில் இரண்டு நாள் கூச்சல் போட்டு அம்மா இனி இந்த மாதிரி கிளப்புகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டது என்று அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று எத்துனை பேருக்கு தெரியும்?.

மேலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த மாதிரி பணக்கார கிளப்புகளில் அந்தந்த தொகுதி கட்சி பிரதிநிதிகள் தண்டல் வாங்கி உரிய இடத்தில் சேர்க்கிறார்கள் என்று கிளப்பு செக்கரட்டரியை கேட்டுப்பாருங்கள் இவர்கள் வண்டவாலத்தை புட்டு புட்டு வைப்பார்கள்.

அப்படியே அம்மா இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கவில்லை என்றால் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். அதற்கப்புறம் என்ன நடக்கும் என்பது நாமறிந்ததே.

நான் இந்த கிளப்புகளுக்கு வக்காலத்து வாங்க வில்லை. நான் கூறியிருப்பது யதார்த்த நிலை. எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பகுத்தறிவாளிகளுக்கு உடனே தோன்றுவது இந்த கிளப்புகள் எல்லாம் பார்ப்பான்களுக்கு பார்ப்பான்களால் நடத்தப் படுகின்றது என்று அவர்களே முடிவு செய்து வேட்டிக்கு  அனுமதியில்லை பஞ்சகச்சத்திற்கு அனுமதி என்கிறார்கள்.

ஐயா கலாசார காவலர்களே நமது கலாசாரம் வேட்டியில் மட்டும் ஒளிந்து கொள்ளவில்லை.

தமிழன் தன்மானம் என்று கதைக்கும் கலாசார காவலர்களே நமது தன்மானம் வீரம் எல்லாம் மற்றவர்கள் நம்மை கவனிக்க வைக்க வீண் வெட்டி பேச்சு என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கிறீர்கள். தமிழ் கலாசார காவலர்கள் தங்களது  கலாச்சாரங்களை துறந்து வெகு காலம் ஆகின்றது. கவனிக்க நான் தமிழர்களை சொல்லவில்லை, தமிழ் கலாசாரம் பேசும் வீணர்களை சொல்கிறேன். இப்பொழுது கலாச்சாரம் பேசும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் அல்லது வாழும் தங்களது பிள்ளைச்செல்வங்களைக் காண வேட்டி கட்டிக்கொண்டா செல்கிறார்கள். வெட்கமில்லாமல் கோட் சூட் அணிந்துகொண்டு விமான நிலையத்தில் பேட்டி கொடுக்கிறார்கள். பின்னர் தமிழ் நாட்டில் இறங்கியவுடன் தங்களது தமிழ் கலாச்சாரம் என்ற ஆயுதத்தை ஏந்தி அரசியல் புரிகிறார்கள்.

கலாச்சாரம் கலாச்சாரம் என்கிறீர்களே, வேட்டி கட்டிக்கொண்டு செய்யும் இந்த செயலுக்கு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்?.

அண்ணே வேட்டிய பிடிச்சிக்கிங்க 


அண்ணே இன்னும் நல்லா தூக்குங்க...........





Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

மகிழ்நிறை said...

so அரசு நடத்தும் டாஸ்மாக் வர கெளரவம் தடுக்கும் ஆண்களும் தடையில்லாமல் குடிக்கவேண்டும் என நல்ல தலைவர்கள் நல்ல எண்ணத்தோடு கவலைப்படுவது தப்பா சகோ??!!
தம 1

கும்மாச்சி said...

தப்பே இல்லை சகோதரி, நல்ல சமூக அக்கறைதான்.

KILLERGEE Devakottai said...

போட்டோ ''பிரமநாத்தம்'' நண்பரே..... வாழ்க ஜனநாயகம்
தற்போது எமது ''கடவுளும், கொலையாளியும்.'' காண்க,,,,

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

மகிழ்நிறை said...

தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !

ப.கந்தசாமி said...

நல்லாப் போட்டீங்க ஒரு போடு.

கும்மாச்சி said...

நன்றி மைதிலி கஸ்தூரி ரங்கன்.

கும்மாச்சி said...

பழனி கந்தசாமி ஐயா வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே கண்துடைப்பு தான்...

ராஜி said...

இங்க நான் வரல. இந்த பதிவை நான் படிக்கலப்பா!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஆமாம் ராஜி நீங்க இங்க வரலை, நானும் பார்க்கலை.

காரிகன் said...

ஒரு வேட்டிக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையில்லைதான். நச்சென்ற பதிவு.உண்மையில் தமிழர்களின் பாரம்பரிய ஆடை வேட்டியில்லை. இடுப்பில் ஒரு துணி மட்டும்தான்.சட்டை போர்சுகீசியர்களின் வருகையினால் நமக்குக் கிடைத்த மேலாடை.

கும்மாச்சி said...

காரிகன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சரியாக சொன்னீர்கள்! வெட்டி அரசியலுக்கு இந்த நிகழ்வு பெரிது படுத்த படுகிறது! நன்றி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.