Tuesday 7 February 2017

அப்போல்லோவின் அல்வா.....புத்தம் புதிய படம்

நேற்று மன்னார்குடி மாபியா  தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்

அப்போல்லோவின் அல்வா  (Truth Prevails)

திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்
அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள்  ரிச்சர்ட்  பெலே,
 சுதா சேஷையன், பாலாஜி, பாபு
ஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்
ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவி
இசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டி

இந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா?  படத்தை பார்ப்போம்...

முதலில் திரை கதை வசனம்  எழுதியதில் ஒரே குழப்பம், இயக்குனர் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்.  கதை என்னதான் மறைந்த ஓரு மனிதரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை நீக்குவதை நோக்கி எழுதப்பட்டாலும் ட்ரைலரில் இடம் பெற்ற இட்லி கேட்டு வாங்கி சாப்பிடும் காட்சியையும், பந்தடித்து விளையாடிய காட்சியையும் படத்தில் கடுகளவு கூட காண்பிக்கவில்லை,

ரிச்சர்ட் பெலேவின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை, அவர் என்னதான் இயக்குனரின் நடிகராக இருந்தாலும் பட இடங்களில் தேவையான உடல் மொழியை தரவில்லை. வசன உச்சரிப்பில் அசத்தியிருக்கிறார். இருந்தாலும் வெளிநாட்டு நடிகர் என்பதால் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற இயக்குனரின் நம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் காட்சிகளில் தர வேண்டிய முகபாவங்கள் மற்ற நடிகர்களிடம் மிஸ்ஸிங். சுதா சேஷையன் எம்பாமிங் செய்யப்பட்டதை விளக்கியது ஏற்றுகொள்ள முடிந்தாலும், அவரை அழைக்கப்பட்ட நேரமும், செய்த நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பது இயக்குனர் சறுக்கிய இடம். மேலும் அதற்குண்டான அவசியத்தை விளக்காதது கதையில் விழுந்த மெகா சைஸ் ஓட்டை.

படத்தில் நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருப்பது ஓரளவுக்கு நன்றாக இருந்தது. முக்கியமாக விசிடிங் கார்டு பற்றிய கேள்விக்கு பெலே அளித்த பதில் வயிறு குலுங்க சிரிக்கவைத்தது. வாங்கியவரை தெரியாது ஏதோ ஜோசியர் போல் இருக்கிறது என்று சொல்லும் பொழுது தியேட்டரில் ஒரே ஆரவாரம்.

ஆளுநர் பார்த்தார், பார்க்கவில்லை என்று ஒவ்வொரு கேரக்டரும் மாற்றி மாற்றி சொல்லுவது கதையை மேலும் குழப்புகிறது. எடிட்டர் கோட்டை விட்ட இடம் போல....

பின்னணி இசை நன்றாக இருந்தது. முழ படத்திலும் பின்னணியில் ஏமாறாதே ஏமாற்றாதே என்ற பாடலின் ரீ மிக்சிங்கை வைத்து நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள். பாடல்கள் சுமார் ரகம்.

"சின்னம்மா இப்படி பண்றீங்களேம்மா", "சின்னம்மா என்றழைக்காத டயர் நக்கிகள் இல்லையே" பாடல்கள் மீண்டும் கேட்கத்தூண்டும்.

மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்றால்......இல்லை

விகடன் ரேட்டிங் 0/100

மொத்தத்தில்அப்போல்லோவின் அல்வா-------தயிரில் ஊறிய குலாப் ஜாமூன் 

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ....ஹய்யோ நல்லா கழுவி ஊத்திருக்கீங்க...

KILLERGEE Devakottai said...

நண்பரே இது மலையாளத்தில் 'டப்' செய்தால் ஓடுமா ?

குல்ஜார் (அ) குல்ஷன் said...

super

திண்டுக்கல் தனபாலன் said...

ரைட்டுட்டு...!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு .

ஸ்ரீராம். said...

சிரித்துச் சிரித்து ரசித்தேன்.

'பரிவை' சே.குமார் said...

ஹா...ஹா... செம....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.