Sunday 8 April 2018

காவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிகளும்

வலைஞர்களுக்கு வணக்கம்.

வெகுநாட்கள் கழித்து வலைப்பூவை தூசி தட்டி துவக்குகிறேன். சமீப காலமாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. மற்றும் நாட்டு நடப்பு என்னத்த எழுதி என்னத்த கிழிக்கப்போற என்று செவிட்டில் அறைந்து கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் அனுமதிக்கப்பட்ட பொழுது தொடங்கிய போராட்டம் இப்பொழுது வலுபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களின் பயங்களும், கவலைகளும் நியாயமானது, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாடு வழிமுறைகளை நடைமுறை படுத்தாமல் இப்பொழுது விரிவாக்கம் செய்யப்போவதை நினைத்தால் அனைவருக்குமே சந்தேகம் வருகிறது. இது எந்த அரசுக்காலத்தில் முதலில் அனுமதிக்கப்பட்டது, பின்னர் கூடுதலான மாசுக்கட்டுப்பட்டு விதிமுறைகளுடன் மறுபடியும் உற்பத்தி தொடங்க அனுமதிக்கப்பட்டது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் மாசுக்கட்டுபாட்டு விதிமுறைகளின்படி தான் ஆலை இயங்குகிறதா என்பதை உறுதி செய்யவோ இல்லை பையை ரொப்பி அனுமதித்தார்களோ என்பது நாமறியோம். இந்த விவகாரம் முதலில் நீதிமன்ற படியேறிய பொழுது யார் தொழிற்சாலை நிர்வாக தரப்பில் ஆஜரானார்கள் என்று ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தால் கண்ணைக்கட்டும். தூத்துக்குடியில் மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் பொழுது, அரசியல் அல்லைக்ககளால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.  உச்சா!!! நீதிமன்ற தீர்ப்பு வந்து, ஸ்கீம்??? அமைக்க வலியுறுத்தப்பட்டு கெடு வைத்த நாள் காலாவதியாகி போன பின் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, லெப்டு கட்சி, ரைட்டு கட்சி என்று எல்லா கட்சிகளுக்கும் ஞானம் பிறக்கிறது. 


உடனே எல்லா கட்சிகளும் ஒரு பத்து பேருந்துகளை உடைத்து, தொடர்வண்டியின் பின்புறமும் மறியல் செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டு போராட்டம் வெற்றியென அறிவித்து "போராட்டத்தின் பலனை" டாஸ்மாக்கில் அனுபவிக்க கலைந்து சென்றனர். நடுவில் ஒரு சில இடுப்புக்கள் தடவப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தரப்பட்டது.  ஆளும்கட்சியோ உண்ணாவிரதம் என்ற பெயரில் உண்ணும் விரதம் மேற்கொண்டு போரட்டத்தை கேலிக்கூத்தாக்கியது. போதாத குறைக்கு நம்ம கூத்தாடிகள் வெறும் மௌன விரத போராட்டம் என்று அறிவித்து ஓயாமல் பேசிக்கொண்டு மீடியா வெளிச்சத்திற்கு அரிதாரம் பூசி பப்ளிக்குட்டி அரிப்பெடுத்து அலைந்து கொண்டிருக்கின்றனர். 

போட்டிக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடமாட்டோம் என்று "கன்னடவேதிகே" அவர்கள் பங்கிற்கு பேருந்தை கொளுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றனர். கர்னாடகத்தில்  ஆளும்கட்சியும் சரி எதிர்கட்சியும் சரி ஒரே முடிவோடுதான் இருக்கின்றனர், தமிழ்நாட்டிற்கு தண்ணி தரமுடியாது. அந்த விஷயத்தில் "ஒட்டு ஆசையில்" இருவரும் ஒரே குறிக்கோளோடு உள்ளனர். 

தமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத நிலைக்கு நீ காரணம், நான் காரணமா? இதோ அவன் காரணம், இதோ இவன் காரணம் என்று அவனவன் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். இணையத்திலோ அவன் காவிரிக்கு குரல் கொடுத்தானா? அவன் சங்கீஸ், மங்கீஸ், பொங்கீஸ் என்று சகட்டுமேனிக்கு பொங்கிக்கொண்டிருக்கின்றனர். நடுவில தமிழ்நாடு வாட்டாள் கூட்டம், நீ ஆரியன், நீ திராவிடன், நீ தமிழனா? நீ வந்தேறி, நீ மரமேறி, நடுவில தலைவரோட அவிச்சுவெச்ச ஆமக்குஞ்சு சாப்பிட்டேன், ஆமை ஓட்ட அண்டர்வேரில் உட்டேன் என்று குறுக்குசால் ஒட்டிகொண்டிருக்கின்றது.  

இந்த காமேடிகளால் ஸ்டெர்லைட் போராட்டம் அதன் தீவிரத்தை இழந்துகொண்டிருக்கிறது. இது மக்களால் தங்களது ஆரோக்கியமான வாழ்விற்காக வாழ்வா? சாவா? போராட்டம். இங்கு இன்னும் முழுமையாக அரசியல்வாதிகள் இறங்கவில்லை. அவர்களும் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும்? காவிரிபோல் ஆகிவிடும்.

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு!! (தமிழனுக்கு அல்ல) எப்போது விடிவுக்காலம்?

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

KILLERGEE Devakottai said...

விடிவுகாலம் உண்டா ?
இது சந்தேகமான நிலைப்பாடுதான்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி கில்லர்ஜி

Unknown said...

தங்கள் வரவு ஆவலுடன் மற்ற நிகஷ்வுளையும் அலச ஆசையுடன் வுள்ளளோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... சொல்லிக்கொள்வது போல் எதுவுமில்லை... வேதனை தான்...

மெய்ப்பொருள் said...

ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு பதில் புதிய இன்னொரு
பிரச்சினையை உண்டாக்க வேண்டும் .
அப்புறம் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்க வேண்டும் .
ஆனால் உண்மை மட்டும் சொல்லக் கூடாது .
திசை திருப்ப எவ்வளவோ வழிகள் உள்ளன .
டாக்டர் கப்பல்ஸ் இவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் .

நாள் கடத்தினால் போராட்டம் தன்னால் முடிவுக்கு வரும் .
இல்லாவிட்டால் , நக்ஸ லைட் போன்ற தீவிர வாதிகள் உள்ளே
வந்து விட்டனர் என்று சொல்லப்படும் .
உளவுத்துறையின் அறிக்கையின் பேரில் சட்டம் ஒழுங்கு
நிலை நாட்ட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
ராஜதுவேஷ வழக்கும் போடலாம் .

இவை எல்லாம் வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்தது !

தஞ்சை ராமையாதாஸ் பாடல் ஒன்று உண்டு .
செக்க செவேலென்று செம்மறி ஆடுகள் சிங்காரமாய் நடை நடந்து
வக்கணையாகவே பேசிக் கொண்டே பலி வாங்கும் பூசாரியை நம்புதடா !

Avargal Unmaigal said...

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு!! எப்போது விடிவுக்காலம்?
விடிவுகாலம் இபபோதைக்கு இல்லை அது கானல் நீர்தான்

'பசி'பரமசிவம் said...

'கும்...கும்'னு நல்லாவே குத்து விடுறீங்க. தொடர்ந்து எழுதுங்க கும்மாச்சி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.