Tuesday 1 May 2018

கலக்கல் காக்டெயில் -184

காவிரி போயி கவுனர் வந்தார் டும் டும் டும் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆரம்பித்த போராட்டம், நித்யா தேவி, கவர்னர், சேகர் என்று கொதித்து அடங்கிவிட்டது. சமீபத்தில் மூன்று நாட்கள் சென்னையில் இருந்த பொழுது எங்கும் கொடியையோ கோஷங்கலையோ காணவில்லை.

அமைதியா இருக்குது, ஒரே அமைதியா இருக்குது (சூர்யா மாடுலேஷனில் ஆயிரம் டெசிபல் சவுண்டில் படிக்கவும்).

என்னது நாங்க இருக்கும் பொழுது அமைதியா? என்று செயலு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை கையிலெடுத்திருக்கிறார்.  போராடுங்க செயல் போராடுங்க, அப்படியே அந்த மூன்றாம் கலைஞரையும் கோதாவில் இஸ்த்து விடுங்க.

ரொம்ப போரடிக்குது.

மணல் மாஃபியாக்கள் 

காவிரிக்கரை கிராம மக்கள் இந்த மணல் கூட்டம் எப்போ நம்ம கிராமத்துக்கு வருவாங்கன்னு தேர்தல் நேர வாக்காளர்கள் போல காத்திருக்காங்களாம். முக்கியமாக கரூர், மோகனூர், கொத்தமங்கலம் கிராமங்கள் பகுதில நல்ல சம்பாத்யமாம். மணல் கொள்ளையர்கள் நூதன வழியில ஆற்று மணல அள்ளிக்கிட்டு இருக்காங்க. காவிரி ஆற்றிலிருந்து கிராம மக்களை அள்ளவிட்டு ஒரு மூட்டைக்கு இரண்டாயிரம் ருபாய் கொடுக்கிறார்களாம்.

செம்மரக்கடத்தலில் வரும் வருவாய் எல்லாம் மணல் முன்பு ஜூஜூபியாம்.

இனி அடுத்த தலைமுறைக்கு தண்ணி, சோறு இல்லாம என்னவெல்லாம் செய்யணுமோ அதை இந்த அரசியல் பின்புலம் உள்ள கூட்டங்கள் சிறப்பாகவே செஞ்சிகிட்டு இருக்காங்க.

ரசித்த கவிதை 

குருவிக்கூடுகள்


நீங்கள் பயன்படுத்தி எஞ்சி
எறிந்த மின்சார ஒயரின்
சிறு துண்டு
ஆடு தின்று முடித்து
மிச்சம் கிடந்த
காய்ந்த சில புற்கள்
மரம் வேண்டாமென
உதிர்த்துவிட்ட
வறண்டுபோன குச்சிகளென
கூட்டு முயற்சியால்
ஆனது என் கூடு
கவலையாய் இருக்கிறது
உங்கள் கண்ணில்படாமல்
இருக்க வேண்டுமென்று
தேவையற்றதென நீங்கள்
கலைத்துவிடவும் கூடும்..

நன்றி: சாமி கிரிஷ்

சினிமா

சினிமா வேலைநிறுத்தம் ஏதோ முடிந்துவிட்டது என்றார்கள்.  நிறையப்படம் வரப்போகிறது என்றார்கள். படங்கள் வந்தமாதிரி தெரியவில்லை (இரண்டு மூன்று வந்ததாக கேள்வி) வந்ததும் சோபித்தமாதிரி தெரியவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் போலும்......இனி அடுத்த முதலமைச்சர் சினிமா பின்புலம் இல்லாதவரா?  ஆஹா நினைக்கவே நன்றாக இருக்கிறது.



Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.