Wednesday 30 May 2018

ஜாதி விளையாட்டுக்கள்

தற்பொழுது இணையங்களில் ஜாதி வெறி தலை விரித்தாடுகிறது. இதை படித்தவர்களே செய்யும் பொழுது மற்றவர்கள்களை குறை சொல்லி என்ன பயன்?

சமீபத்தில் நடந்த ஐ.பி. எல் கோப்பையை வென்ற குழு கோப்பையை எடுத்துக்கொண்டு சென்னை வந்தடைய, அதை ஏதோ கோவில் வைத்து பூஜை செய்ததாக இணையங்களில் புகைப்படங்கள் வந்தன. அதை வைத்துதான் இணையங்களில் ஜாதி பொங்கல் படையல். அந்த பதிவை ஒருவர் முகநூலில் பதியப் போக, ஒருவர் அது பார்ப்பான் விளையாட்டுப்பா? அப்படிதான் செய்வானுங்க  என்று தனது அடக்கமான பதிவை பதிந்துவிட்டு அமைதியானார்.

இன்னுமொருவர் ஒரு படி மேலே போயி, ஆரிய சூழ்ச்சியால் திராவிட குழுக்கு வரவேண்டிய கோப்பை தட்டி பறிக்கப்பட்டது என்று பொங்கினார்.

அடப்பாவிகளா விளையாட்டுப் போட்டிகளில் கூட உங்க ஜாதி வெறியா? நடத்துங்க. இந்த தீபத்தை அணையாம வச்சுக்குங்க, அப்பத்தான் அது நம்ம அடுத்த சந்ததிக்கு உதவும். அப்படியே மத்த விளையாட்டுக்களுக்கும் உங்க ஜாதி பட்டத்த சூட்டுங்க, எப்படி?

கால்பந்து-கவுண்டர் விளையாட்டு
வாலிபால்-வன்னியர் விளையாட்டு
டென்னிஸ்-ரெட்டியார் விளையாட்டு
பேஸ்கட் பால்-படையாச்சி விளையாட்டு
செஸ்-செட்டியார் விளையாட்டு.
பாட்மிண்டன்-நாயுடு விளையாட்டு

இன்னும் தேடி தேடி ஜாதிக்கு ஒரு விளையாட்டு வையுங்க, இருக்கிற ஜாதிக்கு விளையாட்டு கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஒரு போராட்டாம், குண்டல் கமிஷன், இட ஒதுக்கீடு,  அது இது என்று உச்ச நீதிமன்றம் வரை போகலாம்.

இவனுக மாதிரி ஆளுக இருக்கும் வரை ஜாதி வெறி ஓயாது.

இதுதான் இந்த மெத்தப் படித்தவர்கள் இனி வரும் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் பாடம், பயனுள்ள தத்துவம், பகுத்தறிவு, பண்பாடு, வெங்காயம்.............

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Anonymous said...

hello ..noolum.. kondaiyum velila theriyarathu ..maraichikonga ..

கும்மாச்சி said...

உங்க கொண்டை வெளியே தெரியக்கூடாதுன்னுதான் அனானியா வரீங்க போல.....நீ அனானியா வந்தாலும் நீ யாருன்னு தெரியும்......அடையாளத்தோட வாங்க மன்கீஸ்....

Anonymous said...

s

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுமை...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்

KILLERGEE Devakottai said...

காலக்கொடுமைதான் வேறென்ன ?

வேகநரி said...

நீங்க ஜாதி வெறி பற்றி தெரிவித்தவை முற்றிலும் உண்மையே. இந்தியா தமிழகத்தை சேர்ந்தோர் தலைமுழுவதும் ஜாதி வெறியை வைத்து கொண்டு அலைகிறார்கள்.
ஒரு உண்மையான விளையாட்டு கால்பந்தோ, கிரிக்கெட்டை பற்றி பேசவே பயமாயிருக்கிறது ஜாதி பட்டம் கொடுத்து தாக்குவாங்களோ என்று.
அதற்காக மாட்டை துரத்தி வீரம்காட்டுவதை,ஜல்லிக்கட்டுவை ஒரு விளையாட்டு,எனக்கு உயிர் என்று என்னால் சொல்ல முடியாது.

Unknown said...

பாரதி பாடிய பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.

sarathy said...

தமிழினத்தை தகர்க்க, தமிழர் ஒற்றுமையைக் குலைக்க தமிழன் போர்வையில் தமிழர் அல்லாதவர்களின் சதி என்பதே என் கணிப்பு.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.