Thursday 24 May 2018

கலக்கல் காக்டெயில் -185

கூட்டு களவாணிகள் 

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட இத்தனை நாட்களாக அறவழியில் நடந்த போராட்டம், திசை திரும்பி அல்லது திருப்பப்பட்டு துப்பாக்கி சுடு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொது சொத்து சேதம் என்று புதிய பேரழிவுகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே 14 உயிர்கள் பறிக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கம் போல பிணங்களின் மீது நடத்தப்படும் அரசியல் வேலைகள் தொடங்கிவிட்டது. தமிழா விழித்தெழு, நெஞ்சை நிமிர்த்து போராடு, உயிரை கொடுக்கவும் தயங்காதே என்று உசுப்பும் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட கூத்தாடி கூட்டம் இப்பொழுது யார் பாவாடையில் ஒளிந்திருக்கிறார்களோ? தெரியவில்லை.

இன்று "செயல்" வழக்கம்போல வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டம் என்று நாடகமாடிக்கொண்டு இருக்கிறார். முதல்வரோ நிருபர்களின் கேள்விகளுக்கு முழி பிதுங்கி நிற்கிறார். முன்னாள் நிதியோ மத்திய அரசை கை காட்டுகிறார்.

இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நேரத்தில், சரியாக "அணில் அகர்வாலால்" நன்றாக கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் முன்னாள் நிதி ஸ்டெர்லைட் ஆலையின் "டைரடக்கரா!!!!" வேற இருந்தாராம். செயலு கட்சி எம்.எல்.ஏ அங்கே லாரி ஓட்டுறாங்களாம். மொத்தத்தில் எல்லோரும் கூட்டு களவாணிகள்.

ஏலே நடத்துங்கலே..........

பிழைத்த ஜனநாயகம் 

கர்நாடகா தேர்தல் முடிந்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாது, ஒரு இரண்டு நாட்களாக எடியூரப்பா முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து பின்னர் எழுந்து போக, ஜனநாயகத்தை கட்டிக் காத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் வெறும் 38  உறுப்பினர்களே உள்ள ம.ஜ.த கட்சியின் குமாரசாமியை முதல்வராக்கி இருக்கிறது. இது எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்று மக்கள் அனைவருக்குமே சந்தேகம் உள்ளது, இருந்தால் என்ன ஜனநாயகம் பிழைத்திருக்கிறது அல்லவா?

நாம இப்படிக்கா போவோம்..

ரசித்த கவிதை 

நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள் 

நடிகர்களே இப்போது
புறப்பட்டுவிடாதீர்கள்
உங்களுக்கு
மூச்சுத் திணறல் ஆகிவிடும்
எல்லாம் அடங்கட்டும்
இன்னும்தான்
தேர்தலுக்கு
நாளிருக்கிறதே

நடிகர்களே! உங்கள் அண்ணன்கள்
நன்றாக பேட்டி
கொடுத்துக்கொண்டு
பாதுகாப்பாக
இருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் அண்ணன்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே உங்கள் மகள்கள்
பாதுகாப்பாக
படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்களா?
பாதுகாப்பாக
நடித்துக்கொன்டிருக்கிரார்களா?
இருக்கட்டும்
எங்கள் மகள்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே! இவர்கள் அரசியல்
வேறு
உங்கள் அரசியல் வேறா?
இவர்களுக்கு
சுடுகாடு!
உங்களுக்கு
சட்டமன்றமா?
ஓ....
நாடாளு மன்றமுமா?

நல்லது
நடிகர்களே
கிளிசரினோடு தேர்தல்
பிரச்சாரத்திற்கு
புறப்படுமுன்
உங்கள் எசமானர்களிடம்
கேட்டுச் சொல்லுங்கள்

எங்கள் உறவுகளின்
சாவுக்காக
நாங்கள்
கொஞ்சம்
அழுது கொள்ள
அனுமதி
கிடைக்குமா!!!

நன்றி: கவிஞர் அறிவுமதி.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை வரிகள் நச்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.