Tuesday 22 September 2009

நீ இல்லாத ராத்திரியோ..


நீ இல்லாமல் உறக்கம் வருவதில்லை
நீ இருந்தால் தொல்லைகள் தொலை தூரம்
துடித்து ஓடுகின்றன.
உண்மையில் நீ இல்லாத பொழுது
உன் நினைவை அகற்ற முடிவதில்லை.

உனக்கு ஒவ்வொருமுறையும் கொடுக்கும் விலை
உறுத்தலாகவே இருக்கிறது, என் செய்வது
எங்கும் எதிலும் வியாபாரம்,
உன்னைக் கொணர்ந்து
உன் ஆடையைக் களையும் பொழுதே,
உன் சுகந்தம் தொல்லைகளை துரத்திவிடும்,
நீ மேலும் உன்னை எரித்து, என்னை
உறக்கத்தில் தள்ளும் சுகத்திற்கு,
உள்ளம் ஏங்குகிறது,
“உத்ரா” கடையில்
உன்னை “ஆமை மார்க்” சுருள் என்று
மறக்காமல் கேட்டு வாங்கவேண்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

vasu balaji said...

இது அடுக்குமா. பீச்சுல கொசுவத்தி. ம்ம்ம். நடக்கட்டு நடக்கட்டு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ......,

Anonymous said...

hahahaha செம டுவிஸ்ட்.....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.