Friday, 5 February 2010

அச்சம், மடம், நாணம், பருப்பு மன்னிக்கவும் பயிர்ப்பு


முதல்வர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, பாவனா மற்றும் ப்ரியாமணிக்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்ஸி அறிவித்துள்ளது.

செய்திஏம்மா திரிஷா, நீங்க ஊரெல்லாம் பார்க்க குளிப்பீங்க ஆனால் எங்க தலைவர் பங்கேற்கிற நிகழ்ச்சியிலே குத்தாட்டம் போட மாட்டீங்களா. எங்கள் தமிழ் கூறும் நல்லுலகமே எவ்வளவு ஆவலா காத்திருக்கு. மேலும் ஓய்வுக்கே ஓய்வு குடுக்கிற பெரியவரை இப்படியா அவ மரியாதை செய்வது. நாட்டின் வளர்ச்சி, விலைவாசி, தண்ணீர், மின்சாரப்ரச்சினை போன்ற எத்துணைக் கடமைகளை விட்டு இங்கு உங்களைக் காண வருகிறார். என்ன ஒரு அநியாயம், குத்தாட்டம் போட மாட்டீங்களா. உனக்கு திரைப்பட சம்மேளனம் கொடுக்கிற தண்டனை போதாது இந்தா வாழும் வள்ளுவானந்தா சாபம் குடுக்கிறாரு "இனி நீ குளிக்கும் குளியரைக் கதவுகளில், தாழ்ப்பாளே இருக்கக் கூடாது".பாவனா நீங்க பேட்டை விட்டு பேட்டை வந்து பொழைச்சிட்டு எங்கள் தலைவருக்கு முன்னழக கட்ட மாட்டீங்களோ, வள்ளுவானந்தா சாபம் இட்டார்ணா நீ அம்பேல். இந்தா உனக்கு சாபம் "உன் முன்னழகு காற்று போன பலூன் போல ஆகக் கடவாய்”.ஸ்ரேயா நீ தலைவருடன் நடிச்சா இன்னா பெரியா ..........பாநீ. அச்சம், மடம், நாணம், பருப்பு மன்னிக்கவும் பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களை கொண்ட எங்கள் தமிழ் நாட்டிற்கு பிழைக்க வந்து எங்கள் தலைவருக்கு நாங்கள் எடுக்கும் விழாவிலே தொடை கறி படைக்க மாட்டிங்களா. என்ன ஒரு துரோகம். “இனி உன் தொடையிரண்டும் கருத்து, சொறி பிடித்து, காலான்குப்பம் சொறி நாய் போல் ஆகக் கிடவாய்”.ஏம்மா ப்ரியா நீ ஆந்த்ராவுக்கேல்லாம் புல் ஆந்த்ரா மீல்ஸ் படைப்பே, எங்க தமிழினத்தலவருக்கு ஒரு ஹாப் பாயில் கூடக் கிடையாதா. என்ன ஒரு தமிழனுக்கு செய்யும் துரோகம், அவமானம். இதை இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது. இந்தா பிடி வள்ளுவானந்தா சாபம், " இனி நீ குளிக்கும் காட்சியிலும் முழு உடை அணிந்து, கறுப்புக் கவசம் அணிந்து கருங்குரங்கு போல் தெரிய வேண்டும், உன் முன்னழகு பின்னழகாகவும், பின்னழகு முன்னழகாகவும் ஆகக் கடவாய்".


இந்த தமிழனுக்கு நேர்ந்த அவமானத்தை கண்டித்து, நாளை தொடக்கம் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை அனைத்து தமிழர்களும், இன்ன பிற வெட்டிகளும் நாலு வேளை நன்றாகத் தின்று, தூங்கி, கலைஞர், சன், ராஜ், விஜய், பேஷன், ஸீ, இன்னும் மற்ற பிற பிட்டு காட்சி டிவி நிகழ்ச்சிகளைக் காணும் அறவழிப் போராட்டம் நடத்தப் படும்.

Follow kummachi on Twitter

Post Comment

20 comments:

அண்ணாமலையான் said...

கும்மு கும்முன்னு கும்முறீங்க...

கண்மணி said...

இரசித்துப் படித்தேன் கருத்து சொல்ல...ம்ம்ம் வேண்டாம்ப்பா நெறைய பேரு வருவாங்க;))

வள்ளுவானந்தாவுக்கு என் சாபம் [இந்த பதிவுக்காக ]
266 அடி உய்ர சிலையாக கன்யாகுமரி கடலில் வெய்யிலில் கிடக்கக் கடவது:))

கும்மாச்சி said...

அண்ணாமலையான், கண்மணி பின்னூட்டத்திற்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

:)

தலைவருக்கு திரும்பி பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிடும் என்பதால் முடியாது என்று தலைவரின் உடல் நலம் கருத்தில் கொண்டு ஆடமாட்டேன் என்று சொல்லி இருப்பாங்க

பட்டாபட்டி.. said...

@கண்மணி said...
266 அடி உய்ர சிலையாக கன்யாகுமரி கடலில் வெய்யிலில் கிடக்கக் கடவது:))
//

"இடுப்பை வளைத்து சிம்ரன் போல" என்ற வார்த்தைகள்
விடுபட்டதற்காக ப.மு.க வருத்தம் தெரிவிக்கிறது...

மேலும் " கும்மாச்சி அண்ணனின்" கோபம் எங்களுக்கு
புரிவதால் , இனிமேல் மேற்கூறியவர்களின் படங்களை வி.சி.டி யில்
மட்டுமே , பார்ப்போம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்..
-இவன் பட்டாபட்டி..

சேட்டைக்காரன் said...

தல, சூப்பரப்பு! பதிவும் சூப்பர்! அதுக்குத் தேடிப்புடிச்சு நீங்க போட்டிருக்கிற படமும் சூப்பர்! குறிப்பா எங்கள் தலைவி ஸ்ரேயா படம் சூப்பரோ சூப்பர்! இவண்: அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத் தலைவர் - சேட்டைக்காரன்

பேநா மூடி said...

ஏன் இந்த கொலவெறி

கும்மாச்சி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

கலாசார காவலர்கள் எல்லோரும் வாய் கிழிய பேசிக்கொண்டு இந்த நிகழ்ச்சியை கண் கொட்டாமல் பார்ப்பார்கள். கௌரவிப்பது என்ற பெயரில் பொய் புகழ்ச்சிகள் புனையப்படும். நம் விதி இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது. இந்தக் கேவலம் தமிழ் கூறும் நல்லுலகில்தான் நன்றாக நடக்கிறது. வருடத்திற்கு இந்த அரைகுறை ஆடை தொப்புள் சூப் எல்லாம் நம் வீட்டு வரவேற்பறையில் வருகின்றன.

மணிப்பக்கம் said...

என்னா ஒரு வில்லத்தனம் அந்தாளுக்கு இந்த வயசுல..!

மண்டைய போடுறதக்கும் ஒரு பாராட்டு விழா நடத்திடனும் நாம எல்லாரும்! பாவம் இல்லாட்டி அவரோட ஆத்மா சாந்தி அடையாது!

வரதராஜலு .பூ said...

கும்மு கும்முன்னு கும்மிட்டிங்க போங்க :-)

இதெல்லாம் யாருக்காவது உரைக்கும் நினைக்கறிங்க?

Anbarasu Selvarasu said...

நல்லாதான் எழுதறிங்க. ஆனா எங்களூக்கு (ம்) மானம் சூடு சொரனை எதுவும் இல்லை.

அன்பரசு செல்வராசு

kailash,hyderabad said...

சுவாமி ஜில்ஜிலானந்தாவின் சாபம்.
தலைவர் முன்பு ஆட மறுத்த குற்றத்திற்காக தற்போது பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் சிக்கின்குனியாவில் அவதிப்படுவதைபோல உங்களுக்கும் சிக்கன்குன்யா வந்து ஒரு வருடத்திற்கு குத்தாட்டம் போட முடியாமல் முட்டிகள் வீங்கி வலிக்கட்டும்.
உட்காந்தா எந்திரிக்க கூடாது , எழுந்தா மறுபடி உட்கார கூடாது. யாருகிட்டே! ஆங்.

thenammailakshmanan said...

கண்மணியின் கருத்துக்களையே வழிமொழிகிறேன் வள்ளுவானந்தா

ஆனந்தமயன் said...

இப்படி தலீவர் முன்னாள் ஆடமறுத்த நடிகைகளை உடுனே நாடு கட்த்தி அவரவர் மாநிலங்களில் கெண்டு போய் விட்டும் படி கேட்டுக் கொள்கிறம். செம்மொழி மாநாட்டுக்கு இதே நடிகைகள் ஆட வர ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் தலீவர் இவர்களை மன்னிக்கும் படி கேட்டுக் கொள்கிறம்.

Madurai Saravanan said...

iyyayo ithapatichchavan thappichchaan . itha pattikkathavanukku enna saapam vita porinkalo.

Anonymous said...

அடப்போங்கப்பா இதுக்கெல்லாம் அசைந்து கொடுத்து திருந்திடுவாங்களா என்ன?

மகா நடிகன் said...

தலைவருக்கு ராதிகாவே போதும்னு அம்மனீக நெனைச்சாக போல

BONIFACE said...

// ஓய்வுக்கே ஓய்வு குடுக்கிற பெரியவரை இப்படியா அவ மரியாதை செய்வது //ஹி ஹி ஹி

பாஞ்சாலன் said...

இப்ப நாடு இருக்கிற நிலைமைக்கு இந்த பாராட்டு விழா எல்லாம் தேவையா?? வயசான காலத்தில வீட்ல உக்காராம (முதல்வர் பதவி.. முதல்வர் பதவி எனக்குத்தான்) இந்த பெரியவர் உக்காந்துட்டு இருக்கார். நல்லா கலாய்த்தீர்கலய்யா...

Vijaya Kumar said...

அருமையான கற்பனை மற்றும் நகைச்சுவை பதிவு! மிகவும் ரசித்தேன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.