Tuesday 9 February 2010

அண்டவீட்டு நெய்யே, என் பெண்டாட்டி(கள்) கையே


கண்ணுக்கும் மனதிற்கும்
நடிகைகள் உபயத்தில்
கனிவான விருந்து
கலாச்சாரம் கைக்குட்டை
கட்டிய ஆட்டம்
அன்டவீட்டு நெயை
பெண்டாட்டி(கள்) கையால்
அள்ளி ஊற்றி அனைவரும்
மகிழ விழா, எண்ணிய கருமம்
நிறைவேறிய நிம்மதி,
கலைஞர்களை அடிமைப்படுத்திய
சாணக்கியம்,


நாட்டு மக்கள் நலனறிய
நாளை புறப்படுவோம்
உடன் பிறப்புகள்
வட்டம் மாவட்டம்
மாண்புமிகுக்களுடன் சென்று
மக்கள் குறை களைய
மண்டியிட்டு கேட்போம்
மிக்க குறை என்றால்
தக்க ஒப்பந்தம் போட்டு
பொற்குவை நிறைப்போம்
நலிந்த தமிழன்னைக்கு
நெடிய விழா எடுத்து
அடுத்து வரும் தேர்தலிலும்
அள்ளிடுவோம் அனைத்து
அரசவைத் தொகுதிகளும்
இத்துனையும் செய்ய
நிதி நிலை பற்றாக்குறை
நிலவரமேன்று உண்டியல்
குலுக்க உடன் பிறப்புகளே
உடனே சீர் கொண்ட
சிங்கமெனப் புறப்படுங்கள்
நிதி நிறைந்தோரிடம்
பொற்குவையும்
நிதி குறைந்தோரிடம்
காசுகளும் அடித்து
கதியிழந்து தவிக்கும்
தமிழ் மக்களுக்கு
சிறிது கொடுத்து
பெரும் புகழ் ஈட்டுவோம்
வாழ்க (கேனத்) தமிழன்!!!!

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

settaikkaran said...

செமத்தியான கவிதை! நெத்தியடி!!!

மத்த தமிழன்களைப் பத்தி நான் சொல்லக்கூடாது.எனக்கெல்லாம் எருமைத்தோல் அண்ணே! அடுத்த பாராட்டு விழாவுக்கு அனேகமா ஆஞ்சலினா ஜோலியோ, ஜெனிஃபர் லோப்பஸோ வந்தா நல்லாயிருக்குமேன்னு நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்.அட் லீஸ்ட் கரீனா கபூராவது வர மாட்டாங்களா?

Thenammai Lakshmanan said...

நல்ல சாட்டையடி கொடுத்து இருக்கீங்க கும்மாச்சி

அண்ணாமலையான் said...

என்னது? சேட்ட இப்டி கட்சி மாறிட்டாரு? சரி நானும் அவரோட சேந்துக்கிட்டு...

settaikkaran said...

//என்னது? சேட்ட இப்டி கட்சி மாறிட்டாரு? சரி நானும் அவரோட சேந்துக்கிட்டு...//

அண்ணாமலையான் அண்ணே! ஆட்டோ அனுப்பட்டுமான்னு பின்னூட்டத்துலேயே கேட்டா என்ன பண்ணுறது? கலைஞர் வாழ்க! டப்பாங்குத்து வாழ்க!!

Chitra said...

நிதி நிலை பற்றாக்குறை
நிலவரமேன்று உண்டியல்
குலுக்க உடன் பிறப்புகளே
உடனே சீர் கொண்ட
சிங்கமெனப் புறப்படுங்கள்

...........கவிதையில் சீறி இருக்கிறீர்கள். (கேனை) தமிழர் நாம், இப்படியும் சகித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோமே.

கும்மாச்சி said...

கார்த்திகைப் பாண்டியன் மன்னிக்கவும், கார்திகேயனுடன் உங்களை சேர்த்து குழம்பிவிட்டேன். மதுரைக்காறரை இனி மறக்க மாட்டேன்.

மேலும் ஒரு மன்னிப்பு உங்களது பின்னூட்டமும் மேலும் இன்னும் நான்கு பின்னூட்டங்கள் ஒரு அனானியின் செயலால் நீக்கப் பட்டு விட்டது.

மன்மதக்குஞ்சு said...

நல்லாத்தானே இருக்கு

ஹேமா said...

கும்மாச்சி...சரியா சொல்லிட்டீங்க.எங்களுக்கு நாங்களே கேனங்களாத்தான் இருக்கோம்.அப்புறம் எப்பிடி மத்தவங்க கண்ணுக்கு ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. போங்க சார்..
எங்க தலைவன, ரொம்ப புகழ்ந்துகிட்டு..

நீங்க மட்டும் 'ம்' சொல்லுங்க..
அடுத்த 10 வருடங்களில் தமிழை, எங்கெயோ கொண்டு போயிடறோம்..

வாழ்க தமிழ்.. வளர்க தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

arumai

Unknown said...

சரியான சவுக்கடி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.