Monday 19 July 2010

கொடநாடு குந்தானி V/S கோபாலபுர கோமணாண்டி

கொடநாட்டிலிருந்து குந்தானி கோவைக்கு வந்து கொளுத்திச்சியா வெடி. கோபால புற கோமானாண்டி தன் பங்குக்கு வைக்குதையா அடி.


நம் மக்களுக்கு இது புதியதல்ல. நாம்தான் டாஸ்மாக்கில ரெண்டு கட்டிங் வுட்டு ரௌண்டு கட்டி பாப்போமில்ல. தக்காளி இன்னமா அள்ளி வீசுராங்கபா.

கோமாணாண்டி திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தார்கிறாங்க, சொத்து எப்படி வந்ததுங்கறாங்க, கணக்கு கேக்கறாங்க, கஜானா எப்படி நிரம்பிச்சு அப்படின்னு சும்மா கட்டணக் கழிப்பறை கணக்கா நாரடிக்கிறாங்க.

பதிலுக்கு கோமானாண்டி குந்தானி அவசரக் குடுக்கை, பதுக்கல் காரர்களுக்கு பாயா வங்கிக கொடுத்துச்சு, வைர நாயகி, ஆறுமுக சாமிக்கு கப்பம் கட்டிச்சு, இன்னாமா எழுதறாரு.

பதிலுக்கு குந்தானி, குடும்ப கஜானா குலுங்குதுங்கிறாங்க, கோமணம், நீ எப்படி சம்பாதிச்ச வெறும் நடிப்பிலான்னு உள் குத்து குத்துராறு.

நாகரிகம் நாறிப் போச்சு.

புளுகுனி பூதத்த கொடநாடு குகைக்குள்ள குத்த வச்சு குந்த வச்சோம் நாங்கதான், அதுவே பெரிய சாதனை தான் அப்படிங்கிராறு.

ஏலே நமக்கு கொண்டாட்டம் தான். இது வெறும் டிரைலர் தாம்பா, படம் இன்னும் சூப்பரா இருக்கும், தேர்தல் வருது இல்ல.

ஆனா சும்மா சொல்லக் கூடாது, பெரிசுங்க நாகரீகமா பேசுவாங்கன்னு நம்மள மாதிரி கேனயன் நினைச்சுகினு, டாஸ்மாக்கில மோரு கேக்குற மொன்னையனுங்க கணக்கா இருக்கிறோம்.

நாம வழக்கம் போல, கட்டிங்குக்கு காசு கொடுத்து, லெக் பீஸ் பிரியாணி குடுப்பாங்க, அத்த வாங்கி அமுக்கிக்கின்னு மப்புல ரெண்டுல ஒரு சின்னத்துல ஓங்கிக் குத்துவோம். ஏன்னா நமக்குதான் மப்புல வேற சின்னம் கண்ணுக்கு தெரியாதே. இருந்தாலும் புது ஆளுங்க வந்து இன்னா கிழிச்சிற போறானுங்க. ஐட்டமுமா கொடுத்துரப் போறானுங்க.

இன்னா இந்த கட்டிங்குக்கும், லெக் பீசுக்கும் ஆப்பு வச்சிருவானுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

நமக்கு பொழுது நல்லாப் போகுது.. அம்புட்டுத்தான்..:-))

அத்திரி said...

வெளி நாட்டுல இருக்குறதால தைரியமா சொல்லுதீங்க

மன்மதக்குஞ்சு said...

தமாஷாக்கீதுபா. ஆட்டோ இங்கிட்டு வராது. தகிரியமா நீ அடிச்சு ஆடு நைனா.

கோவி.கண்ணன் said...

:)

ஜோதிஜி said...

உங்கள் தலைப்பு சிரிப்பை தந்ததைப் போல சிரித்து தான் அத்தனையும் மறந்துகொண்டு இருக்கிறோம்.

Jey said...

சூப்பர்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ப‌ட‌த்துல‌ யாருண்ணே???

தமிழ் உதயம் said...

ஒண்ணுமே புரியல உலகத்துல. என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.