Sunday 22 August 2010

கலக்கல் காக்டெயில்-6

முன்னூறு விழுக்காடு அதிகமா.................ங்கொய்யால


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் ரூபாய் 16000 இருந்து 50000 ஆக உயர்த்தப் படுகிறது. இது ரொம்ப டூ டூ மச். ஏற்கனவே இவனுகளுக்கு தொகுதி நிதி, போக்கு வரத்து லொட்டு லொசுக்குன்னு எக்கச்சக்கமா செலவாகுது. ஏம்பா இவனுக இதெல்லாம் வாங்கிக்கின்னு இனிமே அந்தக் கான்ட்ராய்ட்டுல கமிசன், ஒழுகுறதுல பிடிச்சிக்கிறேன், வழியுதுல நக்கிக்கிறேன்னு அப்போ இனிமே செய்யாம இருப்பாங்களா? இப்போ வர சம்பளத்து வச்சிக்கின்னே இவனுங்க பண்றே லொள்ளு தாள முடியல. இன்னும் பாராளுமன்றத்துல அடிச்சிக்கிரானுங்க, இது பத்தாததாம் ரூ 80000 வேணுமாம்.

கிரிகெட்

இந்த ரண்டீவ் நோ பால் விஷயத்துல ஸ்ரீலங்கா ரொம்பத்தான் காண்டாயிருக்கானுங்க, இந்த பதிவ போட சொல்ல, இன்றைய ஆட்டத்தில் அந்த நடுவர் குமார தர்மசேனா மவனே பந்து நம்ம பசங்க பக்கம் போனாலே கையே தூக்கிடுராறு. சொல்லி அனுப்பிச்சிருக்காங்க போல. போதாக் குறைக்கு நம்ம பசங்க பந்த தொடவே பயப்படுரானுங்க.


ரசித்த கவிதை

உறங்குகையிலே பானைகளை

உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே

உருப்படியாய் இருப்பதையும்

கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்

இறங்குவோரைக் கொன்று

இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்

இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்

வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்

பொறக்கும் போது பொறந்த குணம்

போகப் போக மாறுது - எல்லாம்

இருக்கும் போது பிரிந்த குணம்

இறக்கும் போது சேருது

நன்றி- பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.ரசித்த நகைச்சுவை 


கடற்கரையில் காதல் ஜோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.

அவன்: கண்ணே உன் மடியிலே தலை வச்சிக்கட்டுமா.

அவள்: ஹூம்

அவன்: அப்படியே குனிந்து என்னை முத்தமிடேன்.

அவள்: போங்க இந்த வேலை எனக்கு ராசியில்லை, இது மாதிரி நான் செஞ்சா, அவனுங்க அடுத்த வாராமே வேறே யாரையாவது கல்யாணம் செஞ்சிகிறாங்க.

அவன்: அதுக்கு தான் கேட்டேன், அந்த ஷீலா கல்யாணம் பண்ணிக்க முரண்டு பிடிக்கிறாள்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

goget99 said...

அந்த காதலி முகவரி கிடைக்குமா? Freeஆ முத்தமும் கிடைக்குதுங்க!

கும்மாச்சி said...

இப்படி வேற ஒரு ஆசையிருக்கா உங்களுக்கு கோகெட், சரி முகவரி கிடைச்சா உங்க வீட்டுக்கு போஸ்ட் பண்ணிவிடுகிறேன்.

Chitra said...

ha,ha,ha,ha,ha.... good joke!

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..

ஜோக் இன்னும் புதுசா ஏதாவது பார்த்து போடுங்க

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.