Thursday 30 September 2010

எந்திரன்-விமர்சனம்

நான் எழுதும் முதல் தமிழ் பட விமர்சனம். அயல் நாடுகளில் இன்றே எந்திரன் திரையிடப்பட்டது. முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கிடைத்தது பெரிய அதிசயம், அதைப் பற்றிய பதிவு தனியாகப் போடவேண்டும்.


எண்பதுகளில் வந்த சுஜாதாவின் என் இனிய இயந்திராவும், ஜீனோவும் இணைத்து எடுக்கப்பட்ட கதைதான் கரு. சுஜாதாவின் திரைக்கதையும், வசனமும் படத்தின் பலம். தன் கடைசி பங்களிப்பை மிக சரியாக செய்திருக்கிறார். படத்தின் பெயரை தமிழாக்கம் செய்திருப்பதிலேயே அவருடைய திறமை பளிச்சிடுகிறது.

இரண்டே முக்கால் மணிநேரம் ஓடும் படத்தை சங்கர் மிக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நம்ம ஊரு கதையை ஹாலிவுட் ரேஞ்சில் எடுத்திருப்பதற்கு சங்கருக்கு பாராட்டுகள்.

சூப்பர்ஸ்டார் அசத்துகிறார். முக்கியமாக எந்திரனாக வருபவரின் “பாடி லாங்குவேஜ்”, ரோபோ ஆடும் நடனங்களில் அவரின் உழைப்பு தெரிகிறது. கிளைமேக்ஸில் விஞ்ஞானி தான் உருவாக்கிய ரோபோவுடன் கலந்து தன் கோட்டைக்குள் நுழைந்தவுடன் கண்டு பிடிப்பதிலும், கருப்பு ஆட்டை கண்டுபிடித்து கனைக்கிறாரே, இது அவருடைய ஸ்பெஷாலிட்டி. நகைச்சுவையில் சந்தானம் கருணாஸ் கூட்டணியை டம்மி ஆக்கிவிட்டு “எந்திரன்” தூள் கிளப்பிவிட்டார். ரஜினிக்கு நகைச்சுவை இயல்பாக நன்றாகவே வரும். படத்தில் நமக்கு தீபாவளி வாழ்த்தும் அட்வான்சாகவே சொல்லுகிறார். முக்கியமாக இதில் ரஜனிக்கு தேவையில்லாத “பில்டப்” மற்றும் “பஞ்ச் டயலாக்” இல்லை.

எந்திரன் சனாவுடன் காதல் கொண்டு நள்ளிரவில் சந்திக்கப் போய், சனா தன்னை கடித்த “ரங்குஸ்கியை” பிடிக்கப் போய் கொசுக்களுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில், சுஜாதா, சங்கர் கூட்டணியின் படைப்பு ரசிக்க வைக்கிறது.

ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் கொள்ளை அழகு. நடனத்தில் அசத்தியிருக்கிறார். அவர் ரோபோவை முத்தமிடும் பொழுது அரங்கமே “கபர்தார்” என்று கத்துகிறது.

இசைப்புயல் ரஹமான், “காதல் அணுக்கள்”, “இரும்பிலே ஒரு இதயம்” பாடல்களில் வித்யாசமான இசையைக் கொடுத்து பட்டையை கிளப்பிருக்கிறார். அரிமா அரிமாவில் ஹரிஹரன் அடித்தொண்டையில் “சின்னஞ்சிறுசுகளின் இதயம் திருடும் சிலிகான் சிங்கம் நான்” என்கிறார். ஆமாம் குழந்தைகளுக்கு பிடித்தப் படமாக இருக்கும்.

“காதல் அணுக்கள் படமாக்கப்பட்ட விதம், எடுக்கப்பட்ட இடம் நாம் இதுவரை பார்த்திராத ஒரு லொகேஷன். ரசூல் பூக்குட்டி தன் பெயரை நிலை நாட்டியிருக்கிறார்.

மின்சார வண்டி சண்டை காட்சியில் பீட்டர் ஹெய்ன் ஜொலிக்கிறார்.

இந்தப் படத்தை பார்க்க நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள அரங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இருந்தும் படத்தின் மயக்கத்தில், சூப்பர்ஸ்டார் நடிப்பில் திளைத்திருக்கிறேன்.

கலாநிதி மாறன் கொடுத்த விளம்பரத்திற்கு எந்திரன் சற்றும் குறையவில்லை.

மொத்தத்தில் எந்திரன் – மனதில் நிற்கிறான். ஆம் அவன் அமரன்.

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

Kiruthigan said...

அருமை

இன்னொரு விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html

Kiruthigan said...

அருமை

இன்னொரு விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html

மன்மதக்குஞ்சு said...

மொத வட எனக்கா. ரெண்டாவது ஷோவா அதே அரங்கில் நானும் பாத்திட்டேன்.

Rosee said...

Read Endhiran review in English >>
Read Endhiran review in English >>

Rosee said...

Nice..

Another article in Tamil:
http://tamil-cinema-pages.blogspot.com/2010/09/blog-post_688.html

ரா said...

Good....Thank god ....ஷங்கர் இந்த முறையும் ஏமாற்றவில்லை .......நான் நாளைக்கு போறேன் LA la.....கிளைமாக்ஸ் நிமிடம் ரஜினி ஜோகர் மாதிரி பண்ணி இருப்பதாக சொன்னார்கள் ....அது உண்மையா....????

சி.பி.செந்தில்குமார் said...

படம் ஹிட்டா?சூப்பர்ஹிட்டா?

என்னது நானு யாரா? said...

விமர்சனம் தூள்! கதை என்ன வென்று சொல்லாமலே விட்டுட்டீங்களே தலைவா!

பித்தன் said...

தோஹா சினிமா ஒரு மொக்க தியேட்டர் அதில் இந்த மாதிரி ஒரு டெக்னிகல் படத்த பார்க்க விழைந்தது நம்ம கிரகம்...... என்ன சொல்ல

கும்மாச்சி said...

பித்தன் நேற்று நீங்கள் வந்தீர்களா, ஐயோ உங்களை மிஸ் பண்ணிவிட்டேன். இருந்தாலும் நீங்கள் டுக்கானில் இந்தப் படத்தை மறுபடி பார்க்கலாம்.

niyazpaarvai said...

//பித்தன் நேற்று நீங்கள் வந்தீர்களா, ஐயோ உங்களை மிஸ் பண்ணிவிட்டேன். இருந்தாலும் நீங்கள் டுக்கானில் இந்தப் படத்தை மறுபடி பார்க்கலாம்//

nAMMA SATHYAMLLU ITHELLAM KAAL THOOSU, DUKKAAN EPPADI IRUKKUM

ஜெகதீஸ்வரன்.இரா said...

புறக்கணிப்போம் எந்திரனை

ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின்
சிந்தனைகளை முடக்கி
அரிதார அழகிகளின் அங்கங்களை காட்டி
அதில் தொழில் செய்து
தமிழை கொன்று
தமிழின வேதனைகளை
இருட்டடிப்பு செய்த
தொலைக்காட்சி சவப்பெட்டியின்
சங்கை நெறிக்க...!!
புறக்கணிப்போம் எந்திரனை

தமிழ் சமுதாயத்தின்
சாபக்கேடாகிப்போன
ஒரு தனிமனிதனிடமிருந்து..
திரயுலக்கத்தின்
மாய உலகில் மூழ்கிக்கிடக்கும்
தமிழ் இளைஞர்களை மீட்டுக்க
புறக்கணிப்போம் எந்திரனை

சொந்த (எந்திரன்) ஆதாயதிர்க்காக
IIFA வை புறக்கணித்து,
தமிழர்களின் உணர்வுகளை
புரிந்து கொண்டதாக தம்பட்டம் அடித்த
அரிதார அழகியின் கோட்டம் அடக்க..!!
புறக்கணிப்போம் எந்திரனை

sarathy said...

padam technicalla superb! super star commercialla superb!! your review constructivaa most super!!! neengalum romanticaa rombavum superO...OOO...?????

Nasrullah said...

padam waste, sinna pasanka Jetix, Suttii tv la vara serial maathiri irukku. Romba overa think panni logic neriya kottai vittuttannga...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.