Tuesday 26 July 2011

கலக்கல் காக்டெயில்-35


உன்னாலே நான் கெட்டேன் 

ராஜாவுடன் சி.பி.ஐ விசாரிப்பு தொடங்கியவுடன் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. ராஜா தன்னுடைய வாதத்தில் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் எல்லாம் தெரியும். நான் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார். இது எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான். சிதம்பரம் எனக்குத் தெரியாது என்கிறார். பிரதமர் வழக்கம்போல் மௌனிக்கிறார். நல்லா நாடகம் ஆடுகிறார்கள். இதை தோண்ட தோண்ட புதிய பூதங்கள் கிளம்புவது உறுதி. ராஜா ஒரே ஆளாக ஆட்டையைப் போட்டிருக்கமாட்டார் என்பது தான் பெரும்பாலாரின் அபிப்ராயம். ராஜாவிற்கு வக்காலத்து வாங்க வீரமணின்னு  ஒருத்தர் அப்பப்போ வந்து கூவிட்டு போவாரே எங்கே அவரை காணவில்லை?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

வாய்தாராணி

பெங்களூர் கோர்ட்டில் அம்மா நாளைக்கு ஆஜராகவேண்டும். இப்பொழுது அம்மா சார்பில் மூன்று புதிய மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். அம்மா வேலை பளு காரணமாகவும், மற்றும் முதலமைச்சர் பதவி, இசட் பிரிவு கண்காணிப்பில் இருப்பதால் நீதி மன்றத்தில் ஆஜராக முடியாது என்று ஒரு மனுவும், அவர் தரப்பு வக்கீல் வாதங்களை ஏற்கவேண்டும் என்று ஒரு மனுவும் இல்லை எனில் வீடியோ கான்பரசிங் மூலம் தம் வாதத்தை வைக்க அனுமதி கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மனுக்களின் மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப் படுகிறது. இருந்தாலும் சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி அம்மா மீது கிரிமினல் குற்றம் உறுதி.

ஒ.பன்னீர்செல்வம் எதற்கும்  தயாராக இருங்க. அதிர்ஷ்டதேவதை உங்கள் டீக்கடை வாசலில் நிற்கிறாள்.
 
ஐ.எ.எஸ் படிப்பு வேண்டவே வேண்டாம்,  ஐந்தாம் கிளாஸ் போதும்  
தமிழ் நாட்டில் உள்ள கலெக்டர்களும் மற்ற ஐ.எ.எஸ் அதிகாரிகளும் தங்களுக்கு எப்பொழுது மாற்றல் ஆர்டர் வரும் என்று கலங்கியிருக்கிறார்கள். இந்த உத்தியோகத்தில் இது ஒரு தலைவலி. எப்பொழுதும் பெட்டி படுக்கை கட்டி வைத்து தயாராக இருக்கவேண்டும். இதில் இவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கைதான் மிகவும் பரிதாபம். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஊர் மாறி வெவ்வேறு  பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும். கொடுமைடா சாமி, அது சரி அம்மா ஆட்சின்னா இதெல்லாம் சகஜம்தான்.
இதற்குதான் வெறும் ஐந்தாம் கிளாசுடன் படிப்பை நிறுத்தினால் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து வட்டம், மாவட்டம்னு வளர்ந்து இன்று அமைச்சராகி ஏன் முதலமைச்சரே  ஆகி இதே போல மற்றைய ஆட்களைப் பந்தாடலாம். பிள்ளைகள் படிப்பைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பிற்பாடு கட்சியில் ஒரு பதவி கொடுத்து அமைச்சராக்கி விடலாம். எதற்கு இந்த ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாம்?.
ரசித்த கவிதை  
தற்கொலை செய்தி
சில நொடிகள் கவனிப்பும்,
கூடவே ஒரு காப்பியும்
,
கட்டை விரலை

உயர்த்திக்காட்டும்

ஒரு ஃபேஸ்புக் "லைக்"குமாக,
உடனே மறந்து

போகக்கூடிய
சிறு நிகழ்வு மட்டுமே.
ஐ லைக் திஸ்.
- சின்னப்பயல்
மொக்கை
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."
"அதெப்படி?"
"மழையே பெய்யவில்லையே!"
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்?
மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
ஜொள்ளுபடம்  

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்கல் தொகுப்பு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

200 பாளோயர்ஸ் பெற்றதற்க்கு என் வாழ்த்துக்கள்...

நான் 200

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்..

Anonymous said...

கலக்கல் தொகுப்பு...அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...நண்பரே...

சின்னப்பயல் said...

நன்றி கும்மாச்சி.! எனது கவிதையை விரும்பி உங்க தளத்துல பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி..!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.