Sunday 4 September 2011

போராட்டமல்ல

உயிரை பறித்த காரணத்தால்
உடனடி விசாரணை
அவசரக் கோலத்தில்
அள்ளித் தெளித்த தீர்ப்பு
கொலையை கண்டிக்கும்
கூட்டமே கொலை செய்ய
கூட்டுப் பரிந்துரை
தூக்குக் கயிற்றில்
தொங்கும் நேரம் தெரியா
எதிர்பார்ப்பிலே துவண்ட
உயிர்கள் மாய்ந்திருக்கும்
இனியும் தண்டனை எதற்கோ?
குற்றமற்ற உயிர்களை
பிழைக்க வைக்க
தீக்குளிப்பில் தோய்ந்த
கருகிய கண்மணியே நீ
தவறான முன்னுதாரணம்
உயிரை எடுப்பதும்
உயிரைக் கொடுப்பதும்
உன்னதமான போராட்டம் அல்லவே,
வாழ்ந்து சாதிக்க வேண்டிய
வருடங்கள் இருக்க
வானம் தேடி போவாயோ?.


(தீக்குளித்த செங்கொடிக்கு அஞ்சலி)

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

settaikkaran said...

//தவறான முன்னுதாரணம்
உயிரை எடுப்பதும்
உயிரைக் கொடுப்பதும்
உன்னதமான போராட்டம் அல்லவே//

இதுவே எனது நிலைப்பாடும்!

//வாழ்ந்து சாதிக்க வேண்டிய
வருடங்கள் இருக்க
வானம் தேடி போவாயோ?.//

கொடுமை! பரிதாபம்!!

கும்மாச்சி said...

சேட்டை "தற்கொலை" "கொலை" எல்லாம் அகராதியிலிருந்து அகற்றப் படவேண்டியவை.

Unknown said...

மாப்ள தவறான முன்னுதாரனங்கலாய் மாறிப்போவது நல்லதல்ல!...கவிதை நச்!

Unknown said...

நல்ல கவிதை அண்ணா,

தவறான வழிகாட்டுதல் இது போன்ற முடிவை எடுக்க முக்கிய காரணம். எதை அல்லது யாரை நம்பி இந்த பெண் இதை செய்து கொண்டாளோ!!??

மீண்டும் ஒரு நம்பிகை துரோகத்திற்கு நாம் தயாரகிவிட்டோமோ என்றே தோன்றுகிறது

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.