Tuesday 6 September 2011

கல்யாணம் என்கிறது பொதுக் கழிப்பிடம்

தங்கமணிகள் எல்லாம் ஏன் ரங்கமணிகளுக்கு மாபியாவைவிட மோசமா தெரியராங்கன்னா, மாபியா கும்பல் ஒன்னு நம்ம பணத்தை கேட்பான் இல்லை உயிரை கேட்பான், இவங்க ரெண்டையுமே எடுப்பாங்க.
கல்யாணம் என்கிறது பொதுக் கழிப்பிடம் போல, உள்ளே இருக்கிறவன் எப்படா வெளியே போகலாம் என்று “இரு”ப்பான், வெளியே இருக்கிறவன் எப்படா உள்ளே போகலாம்னு இருப்பான்.
ஆண்கள் நாலு விஷயத்தில் எப்பொழுதும் சந்தோஷம் அடைய மாட்டார்கள், மொபைல் போன், டிவி, வண்டி, மனைவி. ஏன் என்றால் மார்க்கெட்டில் இதை விட நல்ல மாடல்கள் வந்துகொண்டே இருக்கும்.
கூகிளாண்டவரிடம் மனைவியை அடக்குவது எப்படின்னு கேட்டா, நாங்களும் தேடிக்கொண்டிருக்கிறோம்னு பதில் வருது.
ஆயிரம் சித்தாள்கள் சேர்ந்தால் ஒரு கட்டிடத்தை உருவாக்கலாம், லட்சம் போர் வீரர்கள் ஒரு நாட்டை பாதுகாக்கலாம், ஆனால் ஒரு பெண்ணால் மட்டுமே வீட்டில் மகிழ்ச்சி உண்டாக்க முடியும்!@#$%^அழகான வேலைக்காரியால்.
கணவனின் டி ஷர்ட் வாசகம்
பெண்கள் எல்லாம் ராட்சசிகள்
ஆனால் என் மனைவி ஒரு ராணி
-
-
-
-அவர்களுக்கெல்லாம்.
நான் வைக்கிற சாம்பார நாலு நாளைக்கு சாப்பிடலாம்-------------தனிமையில் வாழும் ரங்கமணி பெருமை.
முடி வளர்ந்தால் வேக்சிங் செய்வதும், குடிக்க வந்தால் மிக்சிங் செய்வதும் வாழ்க்கையின் நிதர்சனங்கள்.
காதலில் என்ன லாபமுன்னு கேட்டால், காதலித்துப்பார் வாழ்க்கையில் உப்பும் காரமும் கூடும் என்கிறான் நண்பன், அதெல்லாம் மீன்குழம்பில் இருக்கும்பொழுது காதல் எதற்கு?
&&&&&&&&&&&பிகர்கள் மதிக்காத சிகாமணிகள் சங்கம்
அதிகமா கொதித்த ரசமும், குறைவா கொதித்த சாம்பாரும் ருசித்ததா சரித்திரமே இல்லை.
----------சமையலறை கீச்சுகள்

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

settaikkaran said...

ஹிஹிஹிஹி! ஹிஹிஹிஹி!
(அதுக்கு மேலே எதுனாச்சும் சொல்லி வம்புலே மாட்டிக்குவேன்..? நோ சான்ஸ்!)

Philosophy Prabhakaran said...

ம்ம்ம் சேம் ஃபீலிங்...

Unknown said...

மாப்ள அடடா அடடா அட அட டா...........ஹிஹி..ஏன்யா என் இந்த கொலைவெறி!

maruthamooran said...

///கூகிளாண்டவரிடம் மனைவியை அடக்குவது எப்படின்னு கேட்டா, நாங்களும் தேடிக்கொண்டிருக்கிறோம்னு பதில் வருது.///

ஹிஹிஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கலக்கல்...

Jana said...

உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

Jayadev Das said...

\\மொபைல் போன், டிவி, வண்டி, மனைவி. \\ புது போன், புது டிவி , புது பைக்கு இது மூன்றிலும் புதுப் புது மாடல் வந்தாலும் என்னை பாதிக்கிறதே இல்லீங்கண்ணா !!

மன்மதக்குஞ்சு said...

வூட்டுகாரம்மா வூட்டாண்ட இல்லாங்காட்டியு(ம்) தெகிரியமா எய்து மாமே.
கீச் கீச் கீச்சு
செம கீச்சுமா

test said...

//அதெல்லாம் மீன்குழம்பில் இருக்கும்பொழுது காதல் எதற்கு?//

Same feelings!!! :-)

KANA VARO said...

ஆண்கள் நாலு விஷயத்தில் எப்பொழுதும் சந்தோஷம் அடைய மாட்டார்கள், மொபைல் போன், டிவி, வண்டி, மனைவி. ஏன் என்றால் மார்க்கெட்டில் இதை விட நல்ல மாடல்கள் வந்துகொண்டே இருக்கும்//

நச்சுனு இருக்கு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.