Sunday 6 November 2011

கலக்கல் காக்டெயில் -47


பந்தாடப்படும் அமைச்சர்களும், அதிகாரிகளும்

பதவிக்கு வந்து இன்னும் ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் ஜெ. அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நிறைய முறை மாற்றிவிட்டார். ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையை புரிந்து கொள்வதற்கே கால அவகாசம் தேவை, அது அவர்களுக்கு ஜெ. ஆட்சியில் கிடைக்காது. அதிகாரிகள்பாடு இன்னும் மோசம். எப்பொழுதும் பெட்டி படுக்கையை கட்டி தயார் நிலையில் இருக்கவேண்டும். 

இப்பொழுது மழைக்காலம் தொடங்கி பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதைத்தவிர விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கூடங்குளம் போராட்டம் என்று பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இதற்கு நடுவில் இன்னும் ஆயிரம் கேள்விகளுக்கு வேறு “பரப்பன அக்ரஹாரம்” சென்று பதில் சொல்லியாக வேண்டும்.

பெங்களுரு நீதி மன்றம் விரைவில் தீர்ப்பை கூறுவதற்கு ஆயத்தமாவது தெரிகிறது. ஓ.பி க்கு சுக்கிரதசைதான்.  

இதையெல்லாம் திசை திருப்ப எடுத்த ஆயுதம்தான் அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம். ஒரு முடிவோடதான் இருக்காங்க போல.

ஜாமீன்

எப்படியும் கிடைத்துவிடும் என்று டெல்லி சென்று காய் நகர்த்தியும் கிடைக்காதது ஐயாவிற்கு பெரிய ஏமாற்றம் தான். வாளமீன் இருக்கு, வஞ்சிரமீன் இருக்கு, சுறாமீன் இருக்கு, கெண்டைமீன் இருக்கு, கெளுத்திமீன் இருக்கு “ஜாமீன்” மட்டும் இல்லையாம்.

படித்ததில் பிடித்த கவிதை

நான்கு இந்தியர்
சேர்ந்த நடந்தால்
நடையில் ஒரு மிடுக்கில்லை
நான்கு இந்தியர்
சேர்ந்து இருந்தால்
வரிசையில் நிற்க மனமில்லை
நால்வரில் ஒருவர்
மேலே சென்றால்
மூவர் இறக்க
மறப்பதில்லை.



எப்படியெல்லாம் கலாய்க்கிறாங்க




ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

SURYAJEEVA said...

அருமையான அலசல்,
சோ வையும் உள்ளே தூக்கி போட்டு கும்மியத்தை ரசித்தேன்

settaikkaran said...

ஜாமீன் துணுக்கு ஜாமூன் கணக்கா இருக்கு! :-)

mage said...

op ku sukradasai, ammakku sani pidikudhudoi. oru janma sani (kalaignar) sirichikkite ambu vidudhu

Philosophy Prabhakaran said...

கடல்'லயே இல்லையாம்...

Philosophy Prabhakaran said...

காஜல் செல்லம் ஸ்டில் போட்டதற்கு நன்றி...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.