Tuesday 8 November 2011

ஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா?


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

இந்தக் குறள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பார்க்கலாம். பக்கத்திலேயே முதலமைச்சர் படத்தையும் போட்டிருப்பார்கள். போன ஆட்சியிலும் இதே குறள்தான் இருந்தது. (அம்மாவிடம் யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது இல்லையென்றால் தூக்கியிருப்பார்கள்) இப்பொழுது முதல்வர் படம்தான் ஐயா போய் அம்மாவிற்கு மாறியிருக்கிறது. (உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே மேயர் தகவல்களை நீக்கிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்)



குறளின் பொருள் இதுதான்.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களை சேர்த்தலும், காப்பாற்றுவதும் காப்பாற்றியவையை நல்ல மக்கள் நல திட்டங்கள் தீட்டி செலவு செய்பவனே அரசன். 

குறளின் முதல் அடியை அம்மா வகையாகவே செய்துவிட்டார்கள். மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி வகை செய்தாகிவிட்டது. ஆனால் அதற்கு அடுத்து இருப்பதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
வடகிழக்கு பருவமழையின் முதல் பாகத்திலேயே தமிழகத்தில் நாற்பத்தி நான்கு உயிர்கள் பலியாகியுள்ளன. வழக்கம்போல உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்து பிரச்சினை முடிந்ததாக நினைத்துவிட்டார்கள் போலும். 

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

மேலே உள்ள குறளுக்கு தனி விளக்கம் தேவையில்லை. அடுத்த மழை வரும் முன்பு மேலும் செய்ய வேண்டியவை செய்தால் மேலும் பல உயிர் சேதங்களை தவிர்க்கலாம்.

வடக்கு உஸ்மான் சாலையில் சாக்கடையில் விழுந்து ஆசிரியை உயிர் நீத்த சம்பவம் வேதனை அளிக்கிறது. 

ஆனால் எந்த ஆட்சியானாலும் விபத்துகளும், நிவாரணங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நிவாரணம் கொடுத்துவிட்டு பிரச்சினையை அதோடு முடித்துவிடுகிறார்கள். மேலும் இது போல் விபத்து நிகழா வண்ணம் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன.

எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் இதை சுட்டிக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். 

மேலும் மின்வெட்டை மக்கள் தற்காலிகமாக மறந்திருக்கிறார்கள். விலைவாசி கேட்கவே வேண்டாம். இந்த அரசுக்கு இந்த பிரச்சினை எல்லாம் பெரிதாக தோன்றவில்லை. அது சரி முதலில் நூலகத்தை மாற்றுவோம் பிறகு இதெல்லாம் ஜூஜூபி என்று நினைக்கிறார்கள் போலும். 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழி நாணுவர்.

ஆட்சிக்கு வந்தாகிவிட்டது, ஐந்து வருடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்ப்பதை விட்டு “பழியாவது, நாணுவதாவது”.
 
(ஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா?)

Follow kummachi on Twitter

Post Comment

18 comments:

rajamelaiyur said...

ரொம்ப சரியா ..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

settaikkaran said...

//ஆட்சிக்கு வந்தாகிவிட்டது,//

என்ன ஆட்சிக்கு வந்தாகி விட்டது?

//ஐந்து வருடத்தில் எவ்வளவு முடியுமோ//

என்ன ஐந்து வருடத்தில் எவ்வளவு முடியுமோ?

//அவ்வளவு சேர்ப்பதை விட்டு//

என்ன அவ்வளவு சேர்ப்பதை விட்டு?

//பழியாவது, நாணுவதாவது//

என்ன பழியாவது, நாணுவதாவது?

//(ஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா?)//

என்ன சரியாப் பேசறீங்க?

கும்மாச்சி said...

சேட்டை கோடிடாத இடங்களையெல்லாம் நிரப்பிட்டிங்க. வருகைக்கு நன்றி.

ஜோசப் இஸ்ரேல் said...

ரொம்ப சரிங்க

கும்மாச்சி said...

நன்றி கூடல்.

SURYAJEEVA said...

சரியா தான் பேசி இருக்கீங்க, ஏம்பா நான் சரியா தான் படிச்சேனா?
இருங்க திரும்பவும் படிச்சுட்டு வந்துடுறேன்

சரியா தான் பேசி இருக்கீங்க, ஏம்பா நான் சரியா தான் படிச்சேனா?
திரும்பவும் படிக்க வைக்க இப்படி ஒரு டெக்னிக்கா

கும்மாச்சி said...

சரியாதான் பின்னூட்டம் போட்டிருக்கிங்க, வருகைக்கு நன்றி ஜீவா.

Unknown said...

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு....ஹிஹி!

கும்மாச்சி said...

நன்றி விக்கி.

கூடல் பாலா said...

கரெக்டு ...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாலா.

சி.பி.செந்தில்குமார் said...

//(ஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா?)//
>>>>
சரிதான்..., ஆனால் சரியில்லை

Philosophy Prabhakaran said...

நான் சொல்ல நினைச்சதை சேட்டை செஞ்சிட்டாரு...

Philosophy Prabhakaran said...

குறளுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க முடியலைன்னா குறளை மாத்திட வேண்டியதுதானே...

பால கணேஷ் said...

சரியாத்தான் பேசறீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

ஆட்சிக்கு வந்தாகிவிட்டது, ஐந்து வருடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்ப்பதை விட்டு “பழியாவது, நாணுவதாவது”.//

நாசமாபோறவிங்க, நம்மளையும் சேர்த்து அல்லவா நாசமாபோக வைக்கிராயிங்க....!!!

கும்மாச்சி said...

\\நாசமாபோறவிங்க, நம்மளையும் சேர்த்து அல்லவா நாசமாபோக வைக்கிராயிங்க....!!! //

அதானே.

வருகைக்கு நன்றி மனோ.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.