Monday 21 November 2011

பிணந்தின்னிகள்


குடிக்கும் நீர் தொடங்கி
அடிக்கும் பட்டை வரை
கலந்திருக்கும் அழுக்கு
கடிக்கும் கொசு ஒழிப்பு
உடுக்கும் உடை, உணவு
கழிவு நீர் அகற்றல் 
படிக்கும் கல்வி முறை
நடக்கும் பாதை, கழிவுநீர்
உண்ணாவிரதம், போராட்டம்
சண்டை, சச்சரவு, சாவு,
நோவு, போக்குவரத்து,
நூலகம், மருத்துவமனை
எல்லா துறைகளிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
நிலையா அரசியலும்
நடத்தும் கூட்டமும்.

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

கும்மாச்சி said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பாஸ்.

ஓசூர் ராஜன் said...

சமூக அவலத்தை சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள்! நன்றி!!

கும்மாச்சி said...

ஓசூர் ராஜன் வருகைக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா, கவிதையும் கலக்கலா வருதே?

MANO நாஞ்சில் மனோ said...

முகத்துல சப்புன்னு அறைஞ்சமாதிரி இருக்கு...!!!

கும்மாச்சி said...

செந்தில், மனோ வருகைக்கு நன்றி.

rajamelaiyur said...

கவிதை ..கவிதை ..

சந்தானம் as பார்த்தா said...

என்ன தேசமோ
இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ
இங்கு வேதமாகுமோ
என்ன தேசமோ
இது என்ன தேசமோ

Good.

SURYAJEEVA said...

நிதர்சனம் தெறிக்கும் வரிகள்...

Philosophy Prabhakaran said...

நேற்று வெளியான ஒரு வதந்தி காரணமாக எழுதிய இடுகையா...?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

ஹேமா said...

இன்றைய அரசியல் அல்லது வாழ்வியல் !

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.