Monday 2 April 2012

கலக்கல் காக்டெயில் -65


விடுமுறையில் நாயடி பேயடி

அலுவலக தொல்லை தாங்காமல் ஊரு பக்கம் போய் நொந்து நூலாகி திரும்பவும் தேவையில்லாத ஆணியை பிடுங்க வந்தாகிவிட்டது. சொந்த மண்ணை மிதிக்கவேண்டும் என்று ரௌண்டு கட்டி போனால் எங்கு சென்றாலும் ஆப்புதான். நல்ல வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. போதாத குறைக்கு மின்வெட்டு வேறு தன் வேலையைக் காட்டிக்கொண்டிருக்கிறது. சரி நம்ம ஏரியாவில் காலை பத்துமணி முதல் பன்னிரண்டு வரை கட் செய்கிறார்கள் ஆதலால் இன்று காலை பத்து மணிக்கு கிளம்பி ஆவடி போய்விடுவோம் என்று கிளம்பி அக்கா வீட்டுக்கு போய் பன்னிரண்டு மணிக்கு போய் சேர்ந்தால் அங்கு பன்னிரண்டு மணி  முதல் இரண்டு மணி வரையிலாம், சரி அங்கிருந்து கிளம்பி வடபழனியில் தம்பி வீட்டுக்கு போனால் அங்கு இரண்டு மணி முதல் நான்கு மணி வரையிலாம். சரி மயிலாப்பூர் பக்கம் போகலாம் என்றால் அங்கு அதைவிட மோசம் அங்கு காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையிலாம், பழுது பார்க்கிறார்களாம்.

கூடங்குளம் வரட்டும் அம்மா மின்சார தட்டுப்பாட்டை போக்குவார்கள் என்றால் அம்மா கட்டணத்தை உயர்த்தி எல்லோருக்கும் ஷாக் கொடுத்து விட்டார்கள்.

நல்லாத்தான் நடத்துராங்கப்பா அரசாங்கம்.


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தால்...............

அக்கா அக்கா என்று உருகி உருகி கடிதம் எழுதியதால் அம்மா பூ கொடுத்து சின்னம்மாவை சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். இனி என்ன பழையபடி ரௌண்டுகட்டி அடிக்கவேண்டியதுதான். ஏற்கனவே திவாகரனுக்கு ஜாமீனாம். எல்லாம் அந்த வழக்கு விசாரணை முடியும் வரை என்று பிரியும் போதே தெரிந்த விஷயம்தான்.

பார்க்கிறவன் பன்னாடை என்றால் பன்னிகூட பைக் ஓட்டுமாம்.(சும்மா ஒரே பழமொழி போட்டு புளிப்பு ஊத்துது.)


ரசித்த கவிதை  

நாளது வரைன்னு
யாராவது சொன்னால்
மாலதி வரைன்னு
மனசுல பதியறது
அரசு பதில்கள்
பக்கத்தைத் திருப்பினா
சரசு பதில்களே
சத்தியமா தெரியுது
இருமலான்னு
டாக்டர் கேட்டா
நிர்மலா முகமே
நினைவில வருது

..................கனவு தொழிற்சாலை நாவலில் சுஜாதா.
இந்த வார ஜொள்ளு


02/04/2012

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Unknown said...

மாப்ள அஜிக்கு அமுக்கு அஜிக்கு அமுக்கு!

துரைடேனியல் said...

காக்டெயில் அருமை. பழமொழி நல்லாருக்கு. கலக்குறீங்க.

கும்மாச்சி said...

விக்கி மாப்ள இது என்னய்யா கமெண்ட்டு

கும்மாச்சி said...

நன்றி துரை.

Philosophy Prabhakaran said...

கண்கள் பனித்தன... இதயம் இனித்தது...

Unknown said...

அரசாங்கமா?அப்பிடின்னா...எதாவது ஜிலேபியா? இனிப்பா இருக்குமா? இவிங்க மாடு மேய்க்ககூட லாயக்கு இல்லை!

முத்தரசு said...

கலக்கல் தான்

பழமொழியோ மேலும் கலக்கல்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அக்கா அக்கா என்று உருகி உருகி கடிதம் எழுதியதால் அம்மா பூ கொடுத்து சின்னம்மாவை சேர்த்துக்கொண்டுவிட்டார்கள்
//

ஒரு கை கொண்டு தட்டினால் சத்தம் வராது...அதான் பல கைகள் சேர்ந்து, நமது கோமணந்த்தை கழட்டினா.. சீக்கிரம் கழட்டிடலாம் பாருங்க..!!!

எந்த நாதாரி வந்தாலும்... மக்களுக்கு இப்படித்தான் சார் பண்ணுவானுக.... பன்னாடைக..சே....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.