Thursday 14 June 2012

கலக்கல் காக்டெயில்-75


நித்தி காண்டம்

இப்பொழுதைய பரபரப்பு செய்தியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர் நித்தி தான். நேற்று சரண் பின்னர் ஜாமீன் பின்னர் மீண்டும் சிறைபிடிப்பு என்று சாமீ கலக்கிகொண்டிருக்கிறார். மதுரை ஆதீனம் ஒன்றும் புரியாமால் கலங்கிக்கொண்டிருக்கிறார். என்னடா ஆதீனத்திற்கு வந்த சோதனை?.

கர்நாடக அரசு பிடதி ஆஸ்ரமத்தை கைப்பற்றி செய்த சோதனையில் பிடிபடுபவை பத்திரிகைகளுக்கு நல்ல ஸ்கூப். பத்திரிகைகள் தங்கள் பங்கிற்கு மசாலா சேர்த்து ஐம்பது சிறுவர்கள் ஆஸ்ரமத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். கஞ்சா பொட்டலங்கள், காண்டம் முதலியவை கட்டு கட்டாக கிடந்தது என்று செய்தி போட்டு நித்தி கோமணத்தை உருவி கொடி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில்  தொடங்கிய நித்தி பார்ட்-2  நல்ல விறுவிறுப்பு.

அடுத்த குடியரசு தலைவர்  

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார்? என்ற கேள்விக்கு பதில் தெரிய இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மம்தா விரும்பவில்லை. காங்கிரசிற்கு எப்படியும் குடைச்சல் கொடுக்கவே மம்தா மாற்றி மாற்றி முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். தக்காளி பெரும்பான்மை ஆதரவை வைத்துக்கொண்டு அவர்கள் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை.

கலாமிற்கு நல்ல வாய்ப்பு இருப்பதுபோல் தோன்றுகிறது. சச்சினை குடியரசு தலைவர் பதவிக்கு யாரும் முன்மொழியவில்லையே. அவர் போட்டியிட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். பி.சி.சி ஐயின் சங்கடம் தவிர்க்கப்படும்.

ரசித்த கவிதை

விழுங்கித் தொலைத்த மானுடம்!!

"எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த
மானுடம்.

இரந்து இரந்து
கொடுக்கத் திராணியின்றி
வாங்கத் துணிந்த மானுடம்..

களவு செய்து
கபடமாடி
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி
காலம் போக்கும் மானுடம்..

எடுத்து வீசத் துணியாத
விட்டு ஒழிக்க இயலாத
உடலை -
பிடுங்கியும் புலம்பும்
பிரிந்தும் பிறரை நோவும்
சுயநல மானுடம்..

பகுத்துப் பாராத கேள்புத்தி -
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும்
தனக்கு மட்டுமே ஓலமிடும் மானுடம்..

ஆறடி மிஞ்சாத மண் தின்று
காலடி பதியாத வாழ்க்கைக்கு
நோயிற்கும் பேயிற்கும் பயந்து
யாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..

காலம் மென்று மென்று விழுங்கி
விதைத்த விதைப்பில் -
வாழ்ந்த அடையாளமின்றி மாளும்
மானுடமே.. மானுடமே..

எல்லாம் ஒழ்
எல்லாம் அற்
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும்
சுயநலம் குறைத்து வாழ்"
என்று சொல்ல -
எனக்கென்ன உரிமையுண்டோ; உன்னிடத்தில் மானுடமே!!
ரசித்த கீச்சுகள்

விலையேற்றம் என்றவுடன் மூக்கை சிந்திப்போட்டு பெட்ரோல் போட்டுச்செல்லும் வேடிக்கைமனிதர் போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ #பீரு அடிக்கிறவன் டா ...............கூத்தாடி 

விலையேற்றம் கேட்டதும் கு”பீர்”னு பொங்கினா நீயும் தமிழனே.........தமிழ்ப்பறவை 

நித்யானந்தா ஆஸ்ரமத்தில் காண்டம் சிக்கியது?#செத்த கிளிக்கு எதுக்குடா கூண்டு?...........நான்-G

இந்த வார ஜொள்ளு 





14/06/2012

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

முத்தரசு said...

அண்ணே யாருன்னு சச்சின்....???

முத்தரசு said...

செத்த கிளி ஹா ஹா ஹா ஹா

ஜொள்ளு ம்...ஷ் யபா முடியல ராசா நீங்க கும்முங்க கும்மாச்சி

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.