Thursday 21 June 2012

கலக்கல் காக்டெயில்-76


அப்துல் கலாம்
குடியரசு தலைவர் போட்டிக்கு வேட்பாளர்கள் தேர்விலேயே அரசியல் ஆட்டம் தொடங்கி விட்டது. மம்தா காங்கிரசை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்ற அரசியலுக்காக ப்ரனாபை எதிர்த்து ஒரு போட்டி வேட்பாளரை தேடினார். பின்பு அப்துல் கலாமை பலி ஆடாக ஆக்கப்பார்த்தார். ஆனால் கலாம் தன் நற்பெயருக்கு களங்கம் வர வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார். இப்பொழுது மம்தா கட்சியான திரிணமூல் காங்கிரசிலேயே ப்ரனாபிற்கு ஆதரவு பெருகிக்கொண்டு வருகிறது.

அம்மா ஆதரித்த சங்கமாவை அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியே ஆதரிக்க வில்லை. அவர்பாடு மிகவும் கேவலமாகிவிட்டது.
கலாம் அவர்களின் இந்த நல்ல முடிவிற்கு அவரது அண்ணனும், ஆசிரியரும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மக்கள் விருப்பம் கலாமே, அதை யார் கண்டு கொள்கிறார்கள்.

நிலம் வாங்கலையோ நிலம்
தொலைக்காட்சிகளில் சில போனியாகாத சேனல்களில் சின்ன சின்ன நட்சத்திரங்கள் கூறு போட்ட நிலங்களை கூவி கூவி வித்துக் கொண்டிருக்கிறார்கள். மேல்மருவத்தூரில் நின்று கொண்டு சென்னை கூப்பிடு தூரம் என்று கூவுகிறார்கள். இவர்கள் எல்லா நிலங்களையும் விற்றால் இவர்களுக்கு ஒரு கிரௌண்ட் பட்டா இலவசமாம் என்பது வேறு கதை. இந்த நிலங்களெல்லாம் இதற்கு முன் என்னவாக இருந்தன. இவை விலை நிலங்களா? அப்படியென்றால் இது போன்று விலை நிலங்கள் விற்கப்பட்டால் “பூவா”விற்கு என்ன செய்வது என்பது எல்லாம் ஒரு பெரிய கேள்விக்குறி?

இதை எல்லாம் அரசாங்கம் கண்டு  கொள்ளாதா? அது சரி முக்கால் வாசி நிலங்கள் எல்லாம் அரசியல்வாதிகளால் வளைக்கப்பட்டது தானே, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த வியாபாரம் நிற்காது.

ரசித்த கவிதை
எதை வேண்டுமென்றாலும் கருப்பொருள் ஆக்கி கவிதை புனையலாம் என்பதற்கு இந்த பாரதிதாசன் கவிதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. யாத்திரைக்கு வேண்டிய அத்தியாவசியமான பொருட்களை பட்டியலிடுகிறார்.

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்தி ரைக்கே!


18+ நகைச்சுவை  
அந்தக் கல்லூரியில் அனாடமி வகுப்பு எடுக்கும் ஆசிரியரின் குறும்புத்தனத்தால் வகுப்பில் உள்ள மாணவிகள் கடும் கடுப்புடன் இருந்தனர். எப்போது பார்த்தாலும் அந்த ஆசிரியர், ஒரு மாதிரியான கதைகளைச் சொல்லி பாடம் நடத்துவது வழக்கம். அடுத்த முறை அப்படி எதையாவது   அவ ர் உளறினால், எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் வகுப்பை விட்டு வெளியேறுவது என்று மாணவிகள் அனைவரும் கூடி முடிவெடுத்தனர்.

அனாடமி வகுப்பும் வந்தது. ஆசிரியரும் வந்தார். .வழக்கம் போல பாடம் எடுக்கத் தொடங்கினார். பிறகு வழக்கம் போல அவர் தனது பாணியில் பேசத் தொடங்கினார்.

"
பிரான்ஸ் நாட்டில் விபச்சாரப் பெண்களுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாக அவர்கள் கூறினார்கள்... என்று அவர் ஆரம்பித்தபோது, மாணவிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு ஒட்டுமொத்தமாக மொத்த மாணவிகளும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்துப் பேச வாயெடுத்தனர்.

அப்போது குறுக்கிட்ட அந்த அனாடமி ஆசிரியர், இளம் பெண்களே, பிரான்ஸுக்கு அடுத்த பிளைட் நாளைக்குத்தான் கிளம்புகிறது, இப்போது கிடையாது, உட்காருங்கள்... என்றார்
.............(நன்றி தட்ஸ்தமிழ்)


இந்த வார ஜொள்ளு 

அடுத்த இடை தேர்தல் எப்போ?




21/06/2012

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

முத்தரசு said...

யோவ் எங்களை ஏன்யா சாவடிக்கிற
இப்படிக்கு
கரன்ட் எம் ல் ஏ

கும்மாச்சி said...

ஹாஹா..........வருகைக்கு நன்றி. இடை அடிக்கடி வந்தாதான் நல்லது.

கும்மாச்சி said...

கற்போம் வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்த அறிவுரையின் பேரில் செய்த சிறிய மாற்றத்தினால் எனது தமிழ்மணம் ஒட்டுப்பட்டை வேளை செய்ய ஆரம்பித்து விட்டது. கற்போம் வலைப்பூவிற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை... நண்பரே நன்றி !

கும்மாச்சி said...

வாருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி தனபாலன்.

MARI The Great said...

நாங்கெல்லாம் .., நல்ல பசங்க., ஜொள்ளவேயில்லை ஹி ஹி ஹி :D

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

சமுத்ரா said...

nandru....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.