Monday 20 August 2012

பயணக்கட்டுரை—ஜெர்மனி, பெல்ஜியம்


சுவிட்சர்லாந்தின் அழகை அனுபவித்து பிரிய மனமில்லாமல் அன்று இரவு ஜெர்மனி நோக்கி சென்று ஜுரிச் நகரில் தங்கினோம். நாங்கள் தங்கிய விடுதியில் ஒயின் பாட்டிலை மலைபோல் அடுக்கி நாம் கேட்கும் பாட்டிலை ஒரு அரைகுறை அழகி கயிற்றில் தொங்கி அந்தர் பல்டி அடித்து கொண்டு வந்து கொடுக்கிறாள், பிறகு பாட்டிலை திறந்து கொஞ்சம் க்ளாசில் ஊற்றுகிறாள். சுவை பார்த்து இது வேண்டாம் என்றால் இன்னொரு பல்டி அடித்து வேறு பாட்டில். அண்ட்ராயர் நிறைய பணம் வைத்துகொள்வது நல்லது. .
ரைன் நீர்வீழ்ச்சி

அடுத்த நாள் காலை scahffhausen சென்று அழகிய ரைன் நீர்வீழ்ச்சியின் அழகை கண்டோம். படகில் நீர்வீழ்ச்சியின் அருகே அழைத்து செல்கிறார்கள். சற்று தைரியமானவர்கள் அருகில் உள்ள படியில் எரி சாரல்களின் ஊடே மலை உச்சிக்கு சென்று அருவியை ரசிக்கலாம். 
டிடிசி ஏரி

பிறகு அங்கிருந்து கருப்புக்காடுகள்(Black Forest) என்று அழைக்கப்படும் இடத்தின் மையப்பகுதியான டிடிசீ (Titisee) அடைந்தோம். இந்த நகரின் மையப்பகுதியில் உள்ள டிடிசீ ஏரி அருகில் ட்ருப்பா என்ற இடத்தில் தான் குக்கூ கடிகாரங்கள் செய்யப்படுகின்றன. அதை பார்த்தவுடன் இங்கு ஒரு கடிகாரம் வாங்கினால் தான் ஆச்சு என்று வீட்டம்மா சொன்னதால் இருப்பதிலேயே மலிவு எது என்று பார்த்தால் முந்நூறு ஈரோவுக்கு குறைந்து எதுவுமில்லை. இருந்தாலும் நாடு திரும்பியவுடன் சோற்றுப் பிரச்சினை நியாபகம் தலையெடுக்க ஒரு கடிகாரம் வாங்கி வந்தேன்.
ட்ருப்பா குக்கூ கடிகாரம்

ரைன் நதி படகு சவாரி

அன்று மாலை நெக்கர் நதியோரம் அமைந்திருக்கும் ஹைதேல்பேர்க் நகருக்கு சென்றோம். அடுத்த நாள் காலை ரைன் நதியில் படகுப் பிரயாணம். ஒரு புறம் மலைகளும் மறுபுறம் சமவெளிகளும் மற்றும் ஒயின் தோட்டங்களின் அழகும் கண்கொள்ளா காட்சி.
கோலோன் தேவாலயம்

பிறகு அங்கிருந்து கோலோன் நகருக்கு சென்றோம். இங்குதான் ஐரோப்பாவின் மிக பெரிய தேவாலயம் உள்ளது. அதன் கட்டிட அமைப்பு ஒரு வியக்கத்தகு ஆச்சர்யம். இங்கு போய் உடிகோலான் வாங்கவில்லை என்றால் அது போரில் புறமுதுகு காட்டுவதைவிட கேவலம் என்று மனைவி நியாபகப்படுத்தியதால் ஒரு பத்து பாட்டில் வாங்கவேண்டியதாகிவிட்டது.

பொதுவாகவே ஜெர்மனியில் எங்கு சென்றாலும் ஒரு ஒழுங்கு இருப்பதை காணமுடிகிறது. அந்த ஊர் மக்கள் எந்த விதத்திலும் ஹிட்லரை நியாபகப் படுத்த தயாராக இல்லை. நாட்டில் எந்த இடத்திலும் ஹிட்லரின் நியாபகச்சுவடுகள் இல்லை. தெருக்களில் எல்லா போக்குவரத்து சிக்னல்களிலும் சிறிய கேமரா வைத்திருக்கிறார்கள். இரவு இரண்டு மணி என்றாலும் தெருக்களில் வண்டிகளே இல்லையென்றாலும் சிவப்பு விளக்கில் நிறுத்திப்  போகிறார்கள்.
ஹைதேல்பேர்க்

அன்று மாலை ஐரோப்பிய யூனியனின் தலைநகர் மற்றும் பெல்ஜியமின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், இந்த ஊரு சாக்கலேட்டுக்கும், வைரங்களுக்கும், கன்னாடிகளுக்கும் பிரசித்தம். பின்னவை இரண்டும் வாங்கவேண்டும் என்றால் CWG, 2G  இல்லை நிலக்கரி இதில் எதாவது ஆட்டையைப் போட்டிருக்க வேண்டும். ஆதலால் நம்ம லெவலுக்கு ஏற்ப சாக்கலேட்டில் ஐக்கியமானோம்.
உச்சா பையன்

இங்குள்ள “மேநேக்கின் உச்சாபோகும் சிறுவன்” சிலை பிரசித்தம். உச்சா போவதை எல்லாம் சிலையாக்கி சுற்றுலா பயணிகளை அழைக்கிறார்கள். நம்ம ஊருலே வந்தால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை “உச்சா” டெமோ ப்ரீயா பார்க்கலாம்.


----------------------------பயணம் தொடரும்.

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படமும் பதிவும் அருமை...

தொடருங்கள்... கூடவே வந்து கொண்டுள்ளோம்...

நன்றி... (TM 2)

கும்மாச்சி said...

உங்கள் ஆதரவிற்கு நன்றி தனபாலன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான பயணமும்,
அருமையான படங்களும் ...
தொடரட்டும் பயணம்...
வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

எஸ்.ரா. ஸார் வருகைக்கு நன்றி.

Anonymous said...

i enjoyed reading your blog.

கும்மாச்சி said...

Thanks for reading my blog, however next time when you comment please identify yourself.

பட்டிகாட்டான் Jey said...

கூடவே வந்துட்டிருக்கேன் அண்ணாச்சி....

கும்மாச்சி said...

ஜே வருகைக்கு நன்றி.

K said...

வணக்கம் அண்ணே, இந்தப் பகுதியோடு சேர்த்து இப்போதுதான் ஏனைய பகுதிகள் எல்லாவற்றையும் படித்தேன்! எல்லாமே அருமையாக எழுதுறீங்க அண்ணே!

ஆமா பாரிஸ் வரலையா?

கும்மாச்சி said...

ஆங் வந்தோமுங்க, ஆகஸ்டு ஏழு மற்றும் எட்டாம் திகதிகளில் பாரிசில்தான் இருந்தோம்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விளக்கங்களுடன் அருமையான படங்களுடன் அழகான கட்டுரை! நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

மாதேவி said...

ரைன் நீர் வீழ்ச்சி,குக்கூ கடிகாரம் கண்டுகொண்டோம். நன்றி.

ravisrad said...

Arumai,German people Mananilai -solliyathai pola ella makkalin manaththayium konjam thirangalen..

கும்மாச்சி said...

தளிர் சுரேஷ், மாதேவி, ரவி உங்களின் வருகைக்கு நன்றி.

JR Benedict II said...

நல்லா ஊர் சுத்துரிங்க போல..
----------------------------பயணம் தொடரும்.. தொடருங்க

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.